யூரல் சைக்கிளில் அசத்திய புட்டின்

Published By: Vishnu

13 Aug, 2019 | 09:58 AM
image

ரஷ்ய ஜனா­தி­பதி விளா­டிமிர் புட்­டினின் ஆட்­சியை முடி­வுக்கு கொண்டு வர வலி­யு­றுத்தி அந்­நாட்டின் தலை­நகர் மொஸ்­கோவில் பெருந்­தொ­கை­யானோர் ஆர்ப்­பாட்­டத்தில் ஈடு­பட்டு வரு­கின்­றனர். 

இந்­நி­லையில் புட்டின் அதனை  ஒரு பொருட்­டாகக் கரு­தாது  ரஷ்­யாவால் ஆக்­கி­ர­மிக்­கப்­ப­ட்டு இணைக்­கப்­பட்ட உக்­ரே­னிய பிராந்­தி­ய­மான  கிறி­மி­யா­ வி­லுள்ள செவஸ்­டோபோல் பிர­தே­ச­த் ­துக்கு  விஜயம் செய்து  அங்கு இடம்­பெற்ற  நைட் வூல்வ்ஸ்  மோட்­டார்­சைக்கிள் குழு­வி­னரின்  வரு­டாந்த  சவாரி நிகழ்வில் பங்­கேற்றார். இதன்­போது புட்டின் தலைக்­க­வசம் அணி­யாது மோட்­டார்­சைக்­கிளைச் செலுத்­தி­யமை பல­த­ரப்­பட்ட விமர்­ச­னத்­தையும் தோற்­று­வித்­துள்­ளது.

இந்­நி­லையில் புட்­டி னின்  கிறிமியா பிராந்­தி­யத்­துக்­கான இந்த விஜயம் உக்­ரேனின் இறை­மையை மீறும் செயல் என அந்­நாட்டு வெளிநாட்டு அமைச்சு குற்­றஞ்­சாட்­டி­யுள்­ளது. ரஷ்­யா­வா­னது  2014 ஆம் ஆண்டு கிறி­மியா பிராந்­தி­யத்தை தனது நாட்­டுடன் இணைத்துக்கொண்­டி­ருந்­தது. புட்­டி­னுக்கு நெருக்­க­மான  வலது சாரி தேசி­ய­வாத நைட் வூல்வ்ஸ் மோட்டார்சைக்கிள் குழுவினர்  கிறி மியா ரஷ்யாவுடன் இணைத்துக்கொள் ளப்பட்டதற்கு ஆதரவளித்து வருபவர் களாவர்.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right