உபகண்டத்தில் மாறிவிட்ட சூழ்நிலைகளில் மோடி – சி ஜின்பிங் வாரணாசி உச்சிமாநாடு சாத்தியமா?

Published By: Priyatharshan

12 Aug, 2019 | 03:01 PM
image

கொழும்பு (நியூஸ் இன் ஏசியா) ஜம்மு – காஷ்மீரின் அரசியலமைப்பு அந்தஸ்த்தை மாற்றியமைத்துரூபவ் லடாக் மாவட்டத்தின் மீதான அதன் பிடியை புதுடில்லி இறுக்கிக் கொண்டது குறித்து எதிர்வரும் அக்டோபர் 12 ஆம் திகதி வட இந்தியாவின் வாரணாசியில் நடத்துவதற்கு ஏற்பாடாகியிருந்த பிரதமர் மோடிக்கும் சீன ஜனாதிபதி சி ஜின்பிங்கிற்கும் இடையிலான உத்தியோகபூர்வமற்ற இரண்டாவது உச்சி சந்திப்பு நடைபெறுமா என்ற கேள்வி எழுந்திருக்கிறது.

சீனாவிற்கும் இந்தியாவிற்கும் இடையிலான அண்மைக்கால ஊடாட்டங்களில் வியாபித்துக் காணப்பட்ட ''வூஹான் உணர்வு'' அருகிப்போய் பாக்கிஸ்தானின் இறுக்கமான நண்பன் என்ற நிலைக்கு சீனா திரும்பிப்போகக்கூடும்.

இந்தியாவிற்கும், சீனாவிற்கும் இடையே இராஜதந்திரத் தொடர்புகள் ஏற்படுத்தப்பட்டதன் 70 ஆவது வருடாந்த நிறைவைக் குறிக்கும் முகமாக வூஹான் உணர்வின் அடிப்படையில் வாரணாசி உச்சி சந்திப்பிற்கு சீனா இணங்கிக்கொண்டது.

பணச்சலவை மற்றும் பயங்கரவாதத்திற்கு நிதியுதவி ஆகியவற்றுக்கு எதிரான அரசாங்கங்களுக்கு இடையிலான நிதித்துறை நடவடிக்கை செயலணியினால் (Financial Action Task Force) பாக்கிஸ்தான் கரும்பட்டியலில் சேர்க்கப்பட வேண்டும் என்று இந்தியா வற்புறுத்தக்கூடாது என்று சீனா கேட்கக்கூடும் என்ற போதிலும் வாரணாசி உச்சி சந்திப்பின் சாத்தியம் குறித்துத் திட்டவட்டமான முடிவுகள் எதற்கும் வரமுடியாமல் இருக்கிறது என்று ''இந்து'' கூறியிருக்கிறது. ஆனால் ஜம்மு – காஷ்மீரின் சுயாட்சியுடன் தொடர்புடைய இந்திய அரசியலமைப்பின் 370 ஆவது சரத்தை புதுடில்லி இரத்துச் செய்ததைத் தொடர்ந்து இந்தியாவிற்கும் பாக்கிஸ்தானிற்கும் இடையே அதிகரித்திருக்கம் பதட்டத்தை அடிப்படையாகக் கொண்டு நோக்கும் போதுரூபவ் இப்போது சீனா அத்தகைய வேண்டுகோள் எதனையும் இந்தியாவிடம் விடுக்க முடியாது.

ஜம்மு – காஷ்மீரின் சுயாட்சியை முறைப்படி முடிவிற்குக் கொண்டுவந்து லடாக் பிராந்தியத்தையும் புதுடில்லி அதன் நேரடிக் கட்டுப்பாட்டின் கீழ் கொண்டுவந்த பிறகு அவ்விரு நடவடிக்கைகளையும் கண்டனம் செய்து சீனா கடுமையானதொரு அறிக்கையை வெளியிட்டது.

லடாக்கிற்கு உரிமை கோருகின்ற சீனா தனது ஆட்புல இறைமையை இந்தியா மலினப்படுத்தி விட்டதாகக் குற்றஞ்சாட்டுகிறது.

லடாக்கில் சீன - இந்திய எல்லையோரத்தின் மேற்பாகத்தில் தனது பிராந்தியம் என்று சீனா கருதுகின்ற எந்தப் பகுதியையும் இந்தியா தனக்குள் சேர்த்துக்கொள்வதை பெய்ஜிங் எப்போதுமே எதிர்த்து வந்திருக்கிறது என்று சீன வெளியுறவு அமைச்சின் பேச்சாளர் ஹுவா ஷுன் ஜிங் கடந்தவாரம் கூறியிருந்தார்.

இந்தியத்தரப்பு அதன் உள்நாட்டுச் சட்டங்களை ஒருதலைப்பட்சமாக மீளாய்வு செய்த அண்மைய நடவடிக்கை சீனாவின் ஆட்புல உரிமையைத் தொடர்ந்து மலினப்படுத்துகிறது. இது எந்தவகையிலும் ஏற்றுக்கொள்ளப்பட முடியாதது என்றும் அந்தப் பேச்சாளர் கூறினார்.

இந்தியாவுடனும் பாக்கிஸ்தானுடனும் சேர்ந்து முத்தரப்பு ஒத்துழைப்பின் ஊடாக சீனா காஷ்மீர் பொருளாதாரத்தின் வளர்ச்சிக்கு உதவ விரும்புகின்றது. ஆனால் காஷ்மீர் தொடர்பில் இந்தியா எடுத்த நடவடிக்கை அதற்கான சாத்தியத்தை இல்லாமல் செய்துவிட்டது என்று சீன அவதானி ஹு வீஜியா குளோபல் டைம்ஸில் எழுதியிருக்கிறார். 

“இந்தியாவின் காஷ்மீர் நடவடிக்கை அந்தப் பிராந்தியத்தின் பொருளாதாரத்தை அபிவிருத்தி செய்வதற்கும்ரூபவ் மக்களின் வாழ்க்கைத் தரத்தை மேம்படுத்துவதற்கும் கிடைக்கவிருந்த வாய்ப்பொன்றை இல்லாமற்செய்யும். காஷ்மீரில் பொருளாதார வளர்ச்சிக்கு அரசியல் உறுதிப்பாடு ஒரு முன் நிபந்தனையாகும். இந்தியக் கட்டுப்பாட்டில் உள்ள காஷ்மீரில் வறுமை ஒழிப்பை மேம்படுத்துவதற்கான பொறுப்பு இந்தியாவிற்கு இருக்கிறது. புதுடில்லியின் அண்மைய நடவடிக்கை காஷ்மீரில் பொருளாதாரக் குழப்பநிலைக்கு வழிவகுக்குமானால் பிராந்தியத்தில் வறுமையானது பயங்கரவாதத்திற்கு எதிரான முயற்சிகளில் பாதகமான விளைவுகளை ஏற்படுத்தும் என்றும் ஹுவீஜியா எடுதியிருக்கிறார்.

இந்தியா சரத்து 370 மற்றும் சரத்து 35 ஏ என்பவற்றை இரத்துச் செய்ததை ஜம்மு – காஷ்மீரை முழுமையாக இந்தியாவின் ஏனைய பகுதிகளுடன் ஒன்றிணைப்பதன் மூலம் மாத்திரம் நியாயப்படுத்தவில்லை. ஆனால் ஜம்மு – காஷ்மீரில் பொருளாதார அபிவிருத்தியை ஏற்படுத்துவதற்காகவும் அவ்வாறு செய்ததாகக் கூறுகிறது.

ஜம்மு – காஷ்மீரில் பொருளாதார வளர்ச்சியை மேம்படுத்துவதற்கும்ரூபவ் தொழில் வாய்ப்புக்களை அதிகரிப்பதற்குமாகவே அந்த நடவடிக்கைகள் எடுக்கப்பட்டதாக வெளிநாட்டுத் தூதுவர்களிடம் இந்திய வெளியுறவு அமைச்சர் விஜய் கோகலே கூறினார். ஜம்மு – காஷ்மீருக்கு வெளியிலிருந்து மூலதனமும், தொழிலாளர்களும் வருவது தொடர்பில் இதுவரையில் நடைமுறையில் இருந்துவந்த கட்டுப்பாடுகளின் காரணமாக பொருளாதார வளர்ச்சியும் தொழில் வாய்ப்பு அதிகரிப்பும் பாதிக்கப்பட்டிருந்தன.

காஷ்மீரில் வாழும் மக்கள் அரசியல் ரீதியாகவும் பொருளாதார ரீதியாகவும் தங்களது உரிமைகள் அபகரிக்கப்பட்டு விட்டதாக உணருகின்ற அதேவேளை, கடந்த வாரத்தைய மாற்றங்கள் தங்களது அரசியல் மற்றும் கேந்திர முக்கியத்துவ நலன்களைப் பாதித்திருப்பதன் காரணமாக சீனாவும் பாக்கிஸ்தானும் இந்தியா மீது கூடுதல் பகைமையைக் காட்டுகின்ற நிலையில் பொருளாதார அபிவிருத்தியும் முதலீடும் தொழிலாளர் வரவும் இடம்பெற முடியுமா? - இந்தக் கேள்விக்கு இன்னமும் பதிலில்லை.

மாறிவிட்ட சூழ்நிலைகளின் கீழ் சீனாவுடனான வாணிபத்தில் காணப்படுகின்ற 6000 கோடி வாணிப இடைவெளியைக் குறைக்கும் முயற்சியில் இந்தியாவினால் வெற்றிபெற முடியுமா? குறிப்பாக இந்தியாவிடமிருந்து கூடுதலான பொருட்களை வாங்குவதற்கு சீனா முன்வராத காரணத்தினால் விரிவடையும் வாணிப இடைவெளி தொடர்பில் இந்தியா கவலை அடைந்திருக்கிறது.

இந்தியாவிற்கும் பாக்கிஸ்தானுக்கும் இடையிலான தற்போதைய முட்டுக்கட்டையில் அமெரிக்கா எந்தப் பக்கத்தில் நிற்கும்? “ஜம்மு – காஷ்மீரில் தலைவர்கள் தடுப்புக்காவலில் வைக்கப்பட்டிருப்பதாக உலவும் செய்திகள் தொடர்பில் நாம் கவலையடைந்திருக்கிறோம்.

பாதிக்கப்பட்ட சமூகங்களுடன் பேச்சுவார்த்தைகள் நடத்தப்படும் என்றும் தனிப்பட்டவர்களின் உரிமைகள் மதிக்கப்பட வேண்டும் என்றும் நாம் வலியுறுத்துகின்றோம் என்று அமெரிக்க இராஜாங்கத் திணைக்களத்தின் அறிக்கையொன்று கூறியது.

சர்வதேச தலையீட்டுக்கு அழைப்பு விடுக்கும் அளவிற்குச் செல்லாமல், அமெரிக்கா காஷ்மீர் மற்றும் அக்கறைக்குரிய பிரச்சினைகள் தொடர்பில் இந்தியாவிற்கும், பாக்கிஸ்தானுக்கும் இடையில் நேரடிப் பேச்சுவார்த்தைகள் நடத்தப்பட வேண்டும் என்று அழைப்பு விடுத்திருக்கிறது.

அமெரிக்காவும், பாக்கிஸ்தானும் மீண்டும் நெருக்கமாகவரும் சாத்தியத்தின் காரணமாகவும், ஜம்மு – காஷ்மீர் மீதான பிடியை இறுக்குவதற்கான நடவடிக்கையைத் திடீரென்று புதுடில்லி எடுத்திருக்கக்கூடும் என்று சில அவதானிகள் கூறுகின்றார்கள். காஷ்மீர் தகராறில் மத்தியஸ்தம் செய்ய ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் முன்வந்தார். அதனை வெகு உற்சாகத்துடன் பாக்கிஸ்தான் பிரதமர் இம்ரான்கான் வரவேற்றார்.

எவ்வாறெனினும் அமெரிக்காவிற்கு அறிவித்துவிட்டே காஷ்மீர் தொடர்பிலான கடந்த வாரத்தைய நடவடிக்கையை இந்தியா எடுத்தது என பாக்கிஸ்தானில் வதந்திகள் உலவின. ஆனால் தெற்காசியா மற்றும் ம்ததிய ஆசிய விவகாரங்களுக்குப் பொறுப்பான அமெரிக்க உதவி இராஜாங்க செயலாளர் அனிஸ் வெல்ஸ் இந்தியாவின் நடவடிக்கை குறித்து அமெரிக்காவிற்கு முன்கூட்டியே எதுவும் தெரிந்திருக்கவில்லை என்று நிராகரித்தார்.

பாக்கிஸ்தான் பிரதமர் இம்ரான்கான் தெரிவித்திருக்கக்கூடிய கருத்துக்களின் அடிப்படையில் நோக்குகையில் இந்தியாவிற்கும் பாக்கிஸ்தானுக்கும் இடையே போரொன்று மூளுவதற்கான சாத்தியமோ அல்லது பாக்கிஸ்தானின் அனுசரணையுடனான பயங்கரவாத நடவடிக்கைகள் ஜம்மு – காஷ்மீரில் அதிகரிப்பதற்கான சாத்தியங்களோ அல்லை என்றே தோன்றுகிறது.

பலவீனமான பொருளாதார நிலவரம் காரணமாக போரொன்றைப் பாக்கிஸ்தானால் தாக்குப்பிடிக்க முடியாது. அத்துடன் அரசு அல்லாத சக்திகளை காஷ்மீருக்குள் அனுப்புவதும் கட்டுப்படியாகாத காரியமே. இரண்டுமே பாக்கிஸ்தானைப் பொறுத்தவரை கூடுதல் பிரதிகூலங்களையே கொண்டுவரும் என்று இம்ரான்கான் தொலைக்காட்சி செய்தியாளர்களிடம் கூறினார்.

ஆனால் காஷ்மீரில்  இடம்பெறுகின்ற அத்துமீறல்கள் தொடர்பில் மேற்கு நாடுகளின் அபிப்பிராயத்தையும்ரூபவ் பொதுமக்களின் அபிப்பிராயத்தையும் அணிதிரட்டுவதற்கு பாக்கிஸ்தான் தீவிரமான முயற்சிகளில் ஈடுபடும். அத்துடன் ஐக்கிய நாடுகள் பொதுச்சபையின் கூட்டத்தொடருக்கு முன்னராக பாக்கிஸ்தான் தனது நிலைப்பாடு தொடர்பில் சட்டரீதியான இறுக்கமான வாதத்தைத் தயாரிக்கும்.

உபகண்டத்தின் பதட்டநிலையை மிகுந்த கவலையுடன் அவதானித்து வருவதாகக் கூறியிருக்கும் ஐக்கிய நாடுகள் செயலாளர் நாயகம் அந்தோனியோ குட்டரெஸ்ரூபவ் பொறுமை காத்து நிதானமாகச் செயற்படுமாறு இந்தியாவையும் பாக்கிஸ்தானையும் வலியுறுத்திக் கேட்டிருக்கிறார்.

காஷ்மீர் பிரச்சினையைத் தீர்த்து வைப்பதில் செயலாளர் நாயகம் பங்களிப்பை வழங்குவதற்கு உத்தேசித்திருக்கிறாரா என்று கேட்கப்பட்ட போது அதற்குப் பதிலளித்த ஐ.நா பேச்சாளர் ஸ்டீபேன் டுஜாரிக், பதட்டநிலை அதிகரித்திருப்பது குறித்து நாங்கள் மிகுந்த கவலை அடைந்துள்ளோம். செயலாளர் நாயகத்தின் பங்களிப்பைப் பொறுத்தவரை அவர் தனது நிலைப்பாட்டை அடிக்கடி வெளிப்படுத்தியிருக்கிறார். அது எந்த மாற்றமும் இல்லாமல் தொடர்கிறதுரூஙரழவ் என்று குறிப்பிட்டார்.

தனது நல்லெண்ண உதவிகள் எப்போதும் கிடைக்கக்கூடியவையே. ஆனால் இருதரப்பினரும் (இந்தியா, பாக்கிஸ்தான்) வேண்டுகோள் விடுத்தால் மாத்திரமே அதனைச் செய்ய முடியும் என்பதே ஐ.நா செயலாளர் நாயகத்தின் நிலைப்பாடாகும்.

ஆப்கான் சமாதான முயற்சிகளின் மீதான தாக்கம்

கிழக்கு எல்லையில் நிலைவரம் பெருமளவிற்குப் பாதகமானதாக மாறியிருக்கும் சூழ்நிலையில் ஆப்கானிஸ்தானில் அமெரிக்காவிற்கு உதவுவதில் கவனம் செலுத்த பாக்கிஸ்தானால் இயலாமல் போகும். செப்டெம்பர் முதலாம் திகதியளவில் அமெரிக்கத் துருப்புக்கள் வாபஸை ஆரம்பிப்பதற்கு வசதியாக போர் நிறுத்தமொன்றைப் பிரகடனம் செய்து மேற்குலகின் ஆதரவுடனான காபூல் அரசாங்கத்துடன் பேச்சுவார்த்தை நடத்த தலிபான்கள் மீது பாக்கிஸ்தான் செல்வாக்கைப் பிரயோகிக்க வேண்டுமென அமெரிக்கா விரும்புகின்றது.

காஷ்மீர் விவகாரத்தில் இஸ்லாமாத் அதன் முழுக்கவனத்தையும் செலுத்துகிறது. அதேவேளை கிழக்கு எல்லையில் நிலைவரம் பதட்டமானதாக இருக்கிறது. இத்தகைய சூழ்நிலையில் முக்கியமானதொரு கட்டத்திலிருக்கும் ஆப்கான் சமாதான முயற்சிகள் தாமதமடையக்கூடும். அமெரிக்காவிற்கும் தலிபான்களுக்கும் இடையே குறுகிய காலகட்டத்திற்குள் எட்டு சந்திப்புக்கள் நடந்திருக்கின்றன.

அமெரிக்காவும் வேறு வழியின்றி தலிபான்களை பாக்கிஸ்தானால் வழிக்குக் கொண்டுவர முடியும் என்று நம்பிக்கையுடன் எதிர்பார்த்துக் கொண்டிருக்கிறது.

அதன் காரணத்தினால் தான் காஷ்மீர் நிகழ்வுப்போக்குகள் தொடர்பான தலிபான் விடுத்திருக்கும் அறிக்கை தீவிரவாதத் தன்மை கொண்டதாக அல்லாமல் நய நுட்பத்துடன் அமைந்திருந்தது போலும்.

ஜம்மு – காஷ்மீரின் அண்மைய நிலைவரம் தொடர்பில் ஆழ்ந்த கவலையை வெளிப்படுத்தியிருக்கும் தலிபான்கள் பிராந்தியத்தில் வன்முறைக்கும்  சிக்கல்களுக்கும் காஷ்மீர் மக்களின் உரிமைகள் அபகரிக்கப்படுவதற்கும் வழிவகுக்கக்கூடிய நடவடிக்கைகளில் இறங்குவதைத் தவிர்க்குமாறு பாக்கிஸ்தானையும் இந்தியாவையும் வலியுறுத்திக் கேட்டிருக்கிறார்கள்.

காஷ்மீரில் பாதுகாப்பற்ற நிலை தோன்றுவதைத் தடுக்க சர்வதேச தலையீட்டுக்கு தலிபான் அறிக்கை அழைப்பு விடுத்திருந்தது. இதுவிடயத்தில் இஸ்லாமிய ஒத்துழைப்பு அமைப்புரூபவ் இஸ்லாமிய நாடுகள் மற்றும் ஐக்கிய நாடுகள் சபையை பிரத்யேகமாக தலிபான்கள் குறிப்பிட்டிருக்கிறார்கள். வெளித்தலையீடு நெருக்கடியை விஸ்தரிப்பதைத் தடுப்பதற்கும் அமைதியான முறையில் பிரச்சினைக்குத் தீர்வைக் காண்பதற்கும் இந்தியாவையும் பாக்கிஸ்தானையும் ஊக்கப்படுத்தக்கூடும் எ;னறும் தலிபான் அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.

காஷ்மீர் பிரச்சினையும் ஆப்கானிஸ்தான் பிரச்சினையும் ஒன்றுடனொன்று பிணைந்தவை என்ற புனைவுகோலை நிராகரிக்கும் வசனத்துடன் தலிபான்களின் அறிக்கை முடிவுற்றது. இது ஆப்கானிஸ்தான் பிரச்சினை காஷ்மீருடன் தொடர்புபட்டதல்ல என்பதையும் ஏனைய நாடுகளுக்கு இடையிலான போட்டிக்கான களமாக ஆப்கானிஸ்தான் மாற்றப்படக்கூடாது என்பதையும் உணர்த்தி நிற்கிறது.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

மத்திய கிழக்கு புவிசார் அரசியலில் ஈரானின்...

2024-04-19 18:33:36
news-image

எல்லா காலத்துக்கும் மிகவும் முக்கியமான ஒரு...

2024-04-19 14:59:40
news-image

கச்சதீவை வைத்து அரசியல் செய்யாதீர்கள்

2024-04-19 14:37:29
news-image

இந்தியப் பெருங்கடலில் 'சீனா - குவாட்'...

2024-04-18 10:36:33
news-image

'ஆரம்பிக்கலாமா?' : தமிழை கையிலெடுத்துள்ள பிரதமர்...

2024-04-17 19:36:36
news-image

சர்வதேச நீதிமன்றத்தில் ஆர்மேனியா - அஸர்பைஜான்...

2024-04-17 19:37:33
news-image

சிங்களவர்களாக ஒருங்கிணையும் இந்தியத் தமிழர் –...

2024-04-17 18:00:59
news-image

பிரித்தானியாவில் ஆளுங்கட்சி தோல்வி? சொந்த தொகுதியில்...

2024-04-17 11:04:13
news-image

பரந்த கோட்பாடுகளில் இருந்து நடைமுறையில் பிரச்சினைகள்...

2024-04-16 16:00:03
news-image

ஈரானின் அதிரடி தாக்குதல் ; இஸ்ரேல்...

2024-04-16 10:56:59
news-image

ஜனாதிபதி தேர்தலில் அரசியல் கணக்குகள்

2024-04-16 01:48:16
news-image

ஜனநாயக மக்கள் காங்கிரஸ் தேசிய கட்சியாக...

2024-04-15 19:01:13