கோத்தபாய முதலில் காணாமல் ஆக்கப்பட்டோருக்கு பதில் கூறவேண்டும் ; ஞா.ஸ்ரீநேசன்  

Published By: Digital Desk 4

12 Aug, 2019 | 02:48 PM
image

கோத்தபாய ராஜபக்ஷ தமிழ் மக்களுக்கு பாதிக்ககூடிய மிகவும் கசப்பான உணர்வுகளை எமது மனங்களில் விதைத்துள்ளார். தமிழ் மக்கள் அவரை ஏற்கமாட்டார்கள்;. என தமிழ் தேசிய கூட்டமைப்பின் மட்டு பாhளுமன்ற உறுப்பினர் ஞா.ஸ்ரீநேசன் தெரிவித்தார்.

Image result for ஞா.ஸ்ரீநேசன்

ஸ்ரீ லங்கா பொதுஜன பெரமுனவின்  ஜனாதிபதி வேட்பாளர் அறிவித்தல் பற்றிய, நிலைப்பாடு பற்றி நேற்று ஞாயிற்றுக்கிழமை (11) கருத்து தெரிவிக்கையில் பாhளுமன்ற உறுப்பினர் ஞா.ஸ்ரீநேசன் இவ்வாறு தெரிவித்தார்.

தென் இலங்கையிலிருந்து வரும் தலைவர்களை பொறுத்தமட்டில் அவர்கள் அடிப்படைவாத சிந்தனையில் முழ்கியுள்ளனர். பேரினவாத பிடிக்குள் இருகியுள்ளனர். பேரினவாதத்தை மட்டும் கையில் வைத்து ஆட்சி செய்பவர்கள்.

அப்படி இல்லாமல் முற்போக்கு சிந்தனையுடன் சிறு பான்மை மக்களும் இலங்கையில் வாழ்கின்றனர். அவர்களின் தேசிய இனப் பிரச்சினை தீர்க்கப்படாமல் உள்ளது. இதனால் அறவழி போராட்டங்களும் ஆயுத போராட்டங்களும் நடைபெற்றன.

அவற்றின் தீர்வை போரினால் மட்டும் காண முடியாது. மாறாக ஜனநாயக ரீதியான பேச்சுவார்த்தை முலமாக நிரந்தரமான அரசியல் தீர்வை காண்பதன் முலமாகத்தான் தேசிய பொருளாதாரம் மற்றும் தேசிய ஐக்கியத்தையும் கட்டியேழுப்பமுடியும் என்ற சிந்தனை வர வேண்டும்.

இன்றும் தெருவில் காணாமல் ஆக்கப்பட்டோரின் உறவுகள் இன்னும் கண்ணீருடன் நிற்கிறார்கள். இதற்கெல்லாம் பதில் கூறும் பொறுப்பு அவருக்கு உண்டு.  இந்த தேசிய இனப் பிரச்சினையை தீர்க்க கூடிய சக்தி ஆளுமை வலு மிக்க தலைவர்களாக சிறுபான்மை மக்களின் வாக்குகள் இல்லாமல் தேர்தலில் வெற்றியடைவோம் என்று கொக்கரிப்போரை பார்க்கும் போது சிறுபான்மையினர் வெட்கமடைகின்றனர். 

கோத்தபாய ராஜபக்ஷவை பொறுத்தமட்டில் அவர் ஒரு பல்லின மக்கனை நிர்வகிப்பதற்கான தகுதி அவரிடம் உள்ளதா என்ற கேள்விகள் எழுந்துள்ளன. தமிழ் மக்களுக்கு இழைக்கப்பட்ட தீயவைகளுக்கு அவரும் ஒரு காரணம். என்பது தமிழ் மக்கள் மத்தியிலும் நடுநிலை சிந்தனையாளர்கள் மத்தியிலும் பேசப்படுகிறது.

இவ்வாறு பல தீயவைகளை செய்த இவர் இந்த தேசிய பிரச்சினைளை பதிதோடு பதினொன்றாக தட்டிவிடுவார் என்றார்.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

கடுகண்ணாவை நகரை சுற்றுலாத் தலமாக அபிவிருத்தி...

2024-04-19 11:42:14
news-image

பிரிட்டிஸ் சிறுவர்களிற்கு வழங்கும் அதேபாதுகாப்பை டியாகோர்கார்சியாவில்...

2024-04-19 11:32:34
news-image

சுதந்திரக் கட்சியின் உள்ளக விவகாரங்களில் தலையிடும்...

2024-04-19 11:35:43
news-image

போதைப்பொருள் மாத்திரைகளை வைத்திருந்த இருவர் புல்மோட்டையில்...

2024-04-19 11:35:04
news-image

கொஸ்கமவில் லொறி கவிழ்ந்து விபத்து ;...

2024-04-19 11:17:01
news-image

அருட்தந்தை தந்தை சிறில் காமினி குற்றப்...

2024-04-19 11:03:22
news-image

நான்கு ரயில் சேவைகள் இரத்து!

2024-04-19 10:50:08
news-image

18,000 மில்லி லீட்டர் கோடா விஹாரையில்...

2024-04-19 10:45:18
news-image

விருந்துபசாரத்தில் வாக்குவாதம்: ஒருவர் தாக்கப்பட்டு உயிரிழப்பு!

2024-04-19 10:20:31
news-image

சில பகுதிகளில் 12 மணித்தியாலங்கள் நீர்...

2024-04-19 10:18:39
news-image

1991 ஆம் ஆண்டு ருமேனியாவில் இடம்பெற்ற...

2024-04-19 09:59:40
news-image

காசல்ரீ நீர்த்தேக்கத்தில் நீராடச் சென்ற மாணவன்...

2024-04-19 09:36:08