"கோத்தாவை தமிழர் ஏற்க மாட்­டார்கள்" : சிறிநேசன்

Published By: J.G.Stephan

12 Aug, 2019 | 12:02 PM
image

கோத்­த­பாய ராஜ­ப­க் ஷ தமிழ் மக்­களை  பாதிக்­கக்­கூ­டிய மிகவும் கசப்­பான உணர்­வு­களை எமது மனங்­களில் விதைத்­துள்ளார். தமிழ் மக்கள் அவரை ஏற்­க­மாட்­டார்கள் என தமிழ் தேசியக் கூட்­ட­மைப்பின் மட்­டக்­க­ளப்பு மவாட்ட பாரா­ளு­மன்ற உறுப்­பினர் ஞான­முத்து சிறி­நேசன் தெரி­வித்தார். 

இவ்­வி­டயம் குறித்து நேற்று ஞாயிற்­றுக்­கி­ழமை (11) ஊட­கங்­க­ளுக்குக் கருத்துத் தெரி­விக்­கும்­போதே அவர் இவ்­வாறு குறிப்­பிட்டார்.  இதன்­போது அவர் மேலும் தெரி­விக்­கையில்.

தென்­இ­லங்­கையில் இருந்து வரும் தலை­வர்­களைப் பொறுத்­த­வரை அவர்கள் அடிப்­ப­டை­வாத சிந்­த­னையில் மூழ்­கி­யுள்­ளனர். பேரி­ன­வாத பிடிக்குள் இறு­கி­யுள்­ளனர். பேரி­ன­வா­தத்தை மட்டும் கையில் வைத்து ஆட்சி செய்­ப­வர்கள். அப்­படி இல்­லாமல் முற்­போக்கு சிந்­த­னை­யுடன் சிறு­பான்மை மக்­களும் இலங்­கையில் வாழ்­கின்­றனர். அவர்­களின் தேசிய இனப் பிரச்­சினை தீர்க்­கப்­ப­டாமல் உள்­ளது. இதனால் அற­வழி போராட்­டங்­களும் ஆயுத போராட்­டங்­களும் நடை­பெற்­றன. அவற்றின் தீர்வை போரினால் மட்டும் காண முடி­யாது. 

மாறாக ஜன­நா­யக ரீதி­யான பேச்­சு­வார்த்தை முல­மாக நிரந்­த­ர­மான அர­சியல் தீர்வை காண்­பதன் முல­மா­கத்தான் தேசிய பொரு­ளா­தாரம் மற்றும் தேசிய ஐக்­கி­யத்­தையும் கட்­டி­யெ­ழுப்­ப­மு­டியும் என்ற சிந்­தனை வர­வேண்டும்.

தற்­போது தெருவில் காணாமல் ஆக்­கப்­பட்­டோரின் உற­வுகள் இன்னும் கண்­ணீ­ருடன் நிற்­கி­றார்கள். இதற்­கெல்லாம் பதில் கூறும் பொறுப்பு கோத்­த­பா­ய­வுக்கு உண்டு. அவ­ருக்கு உண்டு. இந்த தேசிய இனப் பிரச்­சி­னையை தீர்க்க கூடிய சக்தி, ஆளுமை வலு மிக்க தலை­வர்­வ­ளாக சிறு­பான்மை மக்­களின் வாக்­குகள் இல்­லாமல் தேர்­தலில் வெற்­றி­ய­டைவோம் என்று கொக்­க­ரிப்­போரை பார்க்கும் போது சிறு­பான்­மை­யினர் வெட்­க­ம­டை­கின்­றனர். கோத்­த­பாய ராஜ­பக்­சவை பொறுத்­த­வ­ரையில் அவர் ஒரு பல்­லின மக்­களை நிர்­வ­கிப்­ப­தற்­கான தகுதி அவ­ரிடம் உள்­ளதா என்ற கேள்­விகள் எழுந்­துள்­ளது.

தமிழ் மக்­க­ளுக்கு இழைக்­கப்­பட்ட தீய­வை­க­ளுக்கு அவரும் ஒரு காரணம் என்பது தமிழ் மக்கள் மத்தியிலும் நடுநிலை சிந்தனையாளர்கள் மத்தியிலும் பேசப்படுகிறது. இவ்வாறு பல தீயவைகளை செய்த அவர் இந்த தேசிய பிரச்சினைளை பத்தோடு ஒன்று பதினொன்றாக தட்டிவிடுவார் என்றார்.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

கணவன் மரணம் : மனைவி தவறான...

2024-04-19 02:57:58
news-image

வவுனியாவில் பாலித தெவரப்பெருமவுக்கு இளைஞர்கள் அஞ்சலி

2024-04-19 03:04:14
news-image

யாழ்ப்பாணத்தில் மனைவியை கூரிய ஆயுதத்தால் தாக்கிய...

2024-04-19 02:29:42
news-image

வெற்றுக் காணியில் வைத்திய கழிவுகளை கொட்டும்...

2024-04-19 02:24:21
news-image

இலங்கையில் தமது சேவை வழங்கலை இணைத்தது...

2024-04-19 02:19:10
news-image

கச்சதீவை பெற்றுக்கொள்ள இந்தியா சர்வதேச நீதிமன்றத்தை...

2024-04-19 02:01:40
news-image

அரசு கட்டமைப்புக்களின் பங்குகளைக் கொள்வனவு செய்ய...

2024-04-18 16:30:09
news-image

இளைஞர்கள் எதிர்பார்க்கும் இலங்கை கட்டியெழுப்பப்படும் -...

2024-04-18 23:45:38
news-image

யாழ்ப்பாணத்தில் கிணற்றில் விழுந்த இளம் குடும்பப்...

2024-04-18 22:24:04
news-image

சுதந்திரக் கட்சியின் உத்தியோகபூர்வமற்ற தலைவராக ரணில்...

2024-04-18 16:53:55
news-image

களுத்துறையில் சுற்றுலா பயணிக்கு வடை மற்றும்...

2024-04-18 21:19:33
news-image

மக்களின் கோரிக்கைக்கு அமைய முறைமை மாற்றத்தை...

2024-04-18 20:45:44