அனைத்து தரப்பினருக்கும் கிடைத்த 2500 ரூபா சம்பள உயர்வை தோட்டத் தொழிலாளர்களுக்கு வழங்க மறுப்பது அவர்களை வேறுநாட்டு பிரஜைகள் போல் நடத்துவதாகும் என முன்னாள் பிரதி அமைச்சர் பிரபாகணேசன் ஊடகங்களுக்குதெரிவித்துள்ளார்.

மேலும் இதுதொடர்பில் கருத்துதெரிவிக்கையில்,

1000 ரூபா சம்பளம் பெற்றுத் தருகின்றேன் என்று இலங்கை தொழிலாளர் காங்கிரஸ் கூறியதனால் தான் தோட்டத் தொழிலாளர்களுக்கு கூட்டு ஒப்பந்த முறையில் சம்பள உயர்வு கிடைக்க வில்லை என கூறும் மூன்று மலையக அமைச்சர்களும் ரணில் விக்கிரமசிங்க அரசாங்கம் அறிவித்த 2500 ரூபா சம்பள உயர்வை ஏன் வாங்கிக் கொடுக்க முடியவில்லை. இது இவ் அமைச்சர்களின் கையாலாகாத்தனைத்தையே காட்டுகின்றது. 2500 ரூபா சம்பள உயர்வை வழங்குவதற்கு தோட்ட நிர்வாகம் மறுக்கின்றது என்று தொழில் உறவுகள் அமைச்சர் ஜோன் செனவீரத்ண தெரிவித்துள்ளார். இது தங்களது அரசாங்கம் என்று தெரிவித்துக் கொள்ளும் இவ் அமைச்சர்களுக்கு ஏன் பிரதமர் ரணில் விக்கிரமசிங்கவிடம் பேசி இச் சம்பள உயர்வை பெற்றுக் கொடுக்கமுடியவில்லை. ஆனால் மேதின மேடையிலே வேலைநிறுத்தப் போராட்டத்i தநடத்துவோம் என்று வீரவசனம் பேசுகின்றார்கள். இந்த வீரவசனங்களை பிரதமர் ரணில் விக்கிரமசிங்கவிடம் பேசினால் தங்களது இருப்புக்கு ஆபத்து ஏற்படும் என்று இவர்களுக்கு நன்றாகத் தெரியும். தங்களது அரசாங்கத்திடம் பேசிமுடிக்க வேண்டிய விவகாரத்தை தொழிலாளர்களை தெருவுக்கு இழுத்துவந்துவேலைநிறுத்தம் செய்யவைப்பதுஎவ்வகையில் நியாயமாகும். பிரதமர் ரணில் விக்கிரமசிங்கவின் காலில் விழுந்தாவது தங்களுக்கு வாக்களித்த மலையகதோட்டத் தொழிலாளர்களின் சம்பள உயர்வை இம் மூன்று அமைச்சர்களும் பெற்றுக் கொடுக்கவேண்டும். அதுதான் தோட்டத் தொழிலாளர்களுக்கு இவர்கள் செய்யும் கைமாறாகும். அதைவிடுத்து இன்னும் 1000 ரூபா தின சம்பளத்தைப் பற்றியும் முடிந்து போன மஹிந்த ராஜபக்ஷ சகாப்தத்தைப் பற்றி இன்னும் பேசி மக்களை திசைதிருப்புவதில் எவ்வித பிரயோஜனமும் இல்லை.  

இன்று இத்தோட்டத் தொழிலாளர்களுக்கு நியாயத்தைப் பெற்றுக் கொடுக்கக் கூடியவர் ஜனாதிபதி மைத்திரிபாலசிறிசேன மாத்திரமே. பிரதமர் ரணில் விக்கிரமசிங்க தோட்டத் தொழிலாளர்களின் வாக்குகளைப் பெற்றுக் கொண்டாலும் ஒருபோதும் அவர்களின் நலனில் அக்கறை செலுத்தியதில்லை. இவ்விடயத்தை ஜனாதிபதியின் கவனத்திற்கு புதிதாக உருவாக்கப்பட்ட எங்களது ஜனநாயக தமிழ் தேசிய முன்னணி எடுத்துச் செல்லும். ஜனாதிபதியினூடாக இவ்விவகாரத்திற்கு நல்ல தீர்வினைப் பெற்றுக் கொள்ளக் கூடியதாக இருக்கும்.