" வடக்கு மக்­க­ளுக்கு அர­சியல் ரீதியில் அடிப்­படை பிரச்­சி­னைகள் உண்டு என்­பதை ஏற்றுக் கொள்­கின்றேன் "

Published By: Vishnu

12 Aug, 2019 | 10:49 AM
image

(இரா­ஜ­துரை ஹஷான்)

சர்­வ­தேச சமூ­கத்தின் நல்­லு­றவு  அவ­சியம். அதற்­காக நாட்டின் இறையாண்­மை­யினை ஒரு­போதும் விட்டுக் கொடுக்க முடி­யாது. யுத்த காலத்­திலும் எவ­ருக்கும் அடி­ப­ணி­ய­வில்லை. இந்த   உறு­திப்­பாடே இனியும் தொடரும். இன்று முதல் நாட்டு மக்­களின்  பாது­காப்­பினை  நான்  பொறுப்­பேற்று ஆட்சி மாற்­றத்தில் தேசிய பாது­காப்பு முதலில் பலப்­ப­டுத்­தப்­படும் என்று  பொது­ஜன பெர­மு­னவின் ஜனா­தி­பதி வேட்­பாளர்  கோத்­த­பாய ராஜ­பக்ஷ தெரி­வித்தார்.

அத்துடன் வடக்கு மக்­க­ளுக்கு  கடந்த அர­சாங்­கத்தின் காலத்தில்  பாரிய அபி­வி­ருத்தி திட்­டங்கள் செயற்­ப­டுத்­தப்­பட்­டன. ஆனால் எமது துர­திஸ்டம் அவற்றை முன்­னெ­டுத்து செல்ல முடி­யாமல்  போய்­விட்­டது. வடக்கு மக்­க­ளுக்கு அர­சியல் ரீதியில் அடிப்­படை பிரச்­சி­னைகள் உண்டு என்­பதை நான் ஏற்றுக் கொள்­கின்றேன். நிச்­சயம் எத்­த­ரப்­பி­ன­ருக்கும் பாதிப்பு ஏற்­ப­டாத வகையில் வடக்கு மக்­களின் அடிப்­படை பிரச்­சி­னை­க­ளுக்கு தீர்வு வழங்­கப்­படும் எனவும் தெரிவித்தார்.

பொது­ஜன பெர­மு­னவின் கன்னி தேசிய சம்­மேளம் சுஹ­த­தாஸ உள்­ளக அரங்கில்  நேற்று   ஞாயிற்­றுக்­கி­ழமை இடம் பெற்­றது.    உத்­தேச ஜனா­தி­பதி தேர்­தலில் பொது­ஜன பெர­மு­னவின்  ஜனா­தி­பதி வேட்­பாளர் முன்னாள் பாது­காப்பு செய­லாளர் கோத்­த­பாய ராஜ­பக்ஷ என எதிர்க்­கட்சி தலைவர் மஹிந்த ராஜ­பக்ஷ உத்­தி­யோ­கப்­பூர்­வ­மாக அறி­வித்தார். அதனை தொடர்ந்து  நாட்டு மக்­க­ளுக்கு உரை­யாற்­று­கை­யி­லேயே முன்னாள் பாது­காப்பு செய­லாளர் கோத்­த­பாய ராஜ­பக்ஷ  மேற்­கண்­ட­வாறு குறிப்­பிட்டார்.

இங்கு அவர் மேலும் கூறி­ய­தா­வது,

என்­னிடம் ஒப்­ப­டைக்­கப்­படும் எந்­த­வொரு பொறுப்­பையும் சரி­வர நிறை­வேற்­றிய நான், எதிர்­கா­லத்­திலும் மக்­களின் தேவை­க­ளையும் நிறை­வேற்­றுவேன். 20 வருட இரா­ணுவ வாழ்க்­கையும், 10 வருட அரச வாழ்க்­கை­யிலும் எனக்கு வழங்­கப்­பட்ட பொறுப்­புக்­களை நான் நிறை­வேற்­றினேன். 

யுத்­தத்தை முடி­விற்கு கொண்டு வரும் காலத்தில் சர்­வ­தே­சத்தின் மத்­தியில் பல  அழுத்­தங்கள் யுத்­தத்தை முடி­விற்கு கொண்டு வர வேண்டாம் என   பிர­யோ­கிக்­கப்­பட்­டது. எந்­நி­லை­யிலும்  நாட்டின் இறை­யாண்­மை­யினை விட்டுக் கொடுக்­க­வில்லை. பல நெருக்­க­டி­க­ளுக்கு மத்­தி­யிலே   யுத்தம் முடி­விற்கு கொண்டு வரப்­பட்­டது.

சர்­வ­தே­சத்தின் ஆத­ரவு இல்­லாமல் ஒரு­போதும் தனித்து செயற்­பட முடி­யாது. குறு­கிய தேவைக்­காக   நாட்டின் இறை­யாண்­மை­யினை ஒரு­போதும் விட்டுக் கொடுக்­கவும் இய­லாது.

வடக்கு மக்­க­ளுக்கு  கடந்த அர­சாங்­கத்தின் காலத்தில்  பாரிய அபி­வி­ருத்தி திட்­டங்கள் செயற்­ப­டுத்­தப்­பட்­டன. ஆனால் எமது துர­திஸ்டம் அவற்றை முன்­னெ­டுத்து செல்ல முடி­யாமல்  போய்­விட்­டது. வடக்கு மக்­க­ளுக்கு அர­சியல் ரீதியில் அடிப்­படை பிரச்­சி­னைகள் உண்டு என்­பதை நான் ஏற்றுக் கொள்­கின்றேன். நிச்­சயம் எத்­த­ரப்­பி­ன­ருக்கும் பாதிப்பு ஏற்­ப­டாத வகையில் வடக்கு மக்­களின் அடிப்­படை பிரச்­சி­னை­க­ளுக்கு தீர்வு வழங்­கப்­படும்.

வழங்­கப்­பட்ட பொறுப்­புக்­களை  எல்­லைக்குள் இருந்து நிறை­வேற்­றாது, எல்­லையை மீறி­யா­வது அந்த பொறுப்பை நான் நிறை­வேற்­றுவேன். எல்­லையை மீறி செயற்­ப­டு­கின்­ற­மை­யி­னா­லேயே 30 வருட காலம் இடம்­பெற்ற யுத்­தத்தை மூன்­றரை வரு­டங்­களில் நிறை­வேற்ற  எதிர்க்­கட்சி  தலைவர்  மஹிந்த ராஜ­பக்­ஸ­விற்கு ஒத்­து­ழைப்பு வழங்க முடிந்­தது. தாய் நாட்­டிற்குள் எந்­த­வொரு சந்­தர்ப்­பத்­திலும் வெளி­நாட்டு சக்­தி­க­ளுக்கு தலை­யிட இட­ம­ளிக்க முடி­யாது. 

எமது நாட்டில் பல்­வேறு இனத்­த­வர்கள், மதத்­த­வர்கள் வாழ்ந்து வரு­கின்­றனர். அவர்­க­ளுடன் ஒன்­றி­ணைந்து வாழ வேண்டும், இந்த நாட்டில் பிறந்த அனை­வ­ருக்கும் அச்­ச­மின்றி, சுதந்­தி­ர­மாக வாழக்­கூ­டிய சூழ்­நி­லையை உரு­வாக்­குவேன். இன­வாத தீவி­ர­வா­த­மொன்றை மீண்டும் உரு­வாக்க இட­ம­ளிக்­க­மாட்டேன். பாது­காப்­பான நாடொன்றை மீண்டும் கட்­டி­யெ­ழுப்­புவேன். வடக்கு மக்­களின் பிரச்­சி­னை­களை உட­ன­டி­யாக தீர்க்க நட­வ­டிக்கை எடுப்பேன். அரச ஊழி­யர்கள் சுதந்­தி­ர­மாக கட­மை­யாற்­றிக்­கூ­டிய சூழ்­நி­லையை உரு­வாக்­குவேன். பெண்கள் அச்­ச­மின்றி எந்­த­வொரு நேரத்­திலும் செல்­லக்­கூ­டிய நாடொன்றை உரு­வாக்க வேண்டும். அதனை நாம் செய்வோம். பாதிக்­கப்­பட்­டுள்ள இரா­ணு­வத்­தினர், விசேட தேவை­யு­டை­ய­வர்­க­ளுக்கு சிறந்­த­தொரு வேலைத்­திட்­டத்தை முன்­னெ­டுப்பேன்.

அனைத்து உலக நாடு­க­ளு­டனும் நாம் தொடர்­பு­டைய பேணுவேன். எனினும், நாட்டின் சுயா­தீ­னத்தை விட்­டுக்­கொ­டுக்க மாட்டேன். உலக நாடுகளிடம் சுயாதீனத்தை விட்டுக்கொடுக்காத வகையில் செயற்படுவேன். எமது தவறுகளை சரி செய்து, நாட்டை கட்டியெழுப்புவதற்கான நடவடிக்கைகளை மேற்கொள்வேன். எம்முடன் கைக்கோர்க்குமாறு அனைத்து சிங்கள, தமிழ், முஸ்லிம் மக்களிடம் கேட்டுக்கொள்கின்றேன். பொலித்தீன் மற்றும் பிளாஸ்டிக் இல்லாத ஒரு தேர்தல் பிரசாரத்தை நாம் முன்னெடுக்கவுள்ளோம். இதனூடாக தேர்தல் கலாசாரத்தில் மாற்றத்தை கொண்டு வருவோம்.  என்றார்.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

இன்றைய வானிலை

2024-04-20 06:50:11
news-image

மக்கள் விடுதலை முன்னணியினால் அன்று செய்த...

2024-04-20 01:44:10
news-image

சு.க. ஆதரவாளர்கள் ஐக்கிய மக்கள் சக்தியுடன்...

2024-04-20 00:07:16
news-image

ஈரானிய ஜனாதிபதியின் விஜயம் தொடர்பில் எதிர்ப்பை...

2024-04-20 00:05:28
news-image

துன்பப்படும் மக்களுக்கு பக்கபலத்தை வழங்கிய சிறந்ததொரு...

2024-04-19 23:45:02
news-image

கடற்படை வீரர்கள் இருவர் உட்பட 4...

2024-04-19 22:16:12
news-image

சிறுமியின் மரணத்திற்கு நீதி கோரி தரணிக்குள...

2024-04-19 20:36:49
news-image

சர்வோதய ஸ்தாபகர் ஏ.டி. ஆரியரத்னவின் பூதவுடலுக்கு...

2024-04-19 19:21:27
news-image

பாலித தெவரப்பெருமவின் பூதவுடலுக்கு ஜனாதிபதி இறுதி...

2024-04-19 18:46:10
news-image

கோழி இறைச்சியின் விலை குறைப்பு!

2024-04-19 18:33:17
news-image

பொலிஸாரிடமிருந்து தப்பிச் செல்ல முயன்ற நபர்...

2024-04-19 18:10:41
news-image

உயிர்த்த ஞாயிறு தாக்குதல்கள் குறித்து சர்வதேச...

2024-04-19 17:53:19