சஜித்­துக்கு ஆத­ர­வாக இன்று பது­ளையில் பேரணி, கூட்டம்

Published By: Vishnu

12 Aug, 2019 | 10:19 AM
image

ஐக்­கிய தேசியக் கட்­சிக்குள் ஜனா­தி­பதி வேட்­பாளர் தொடர்­பான இழு­ப­றிகள் நீடிக்­கின்ற நிலையில், ஜனா­தி­பதி தேர்­தலில் போட்­டி­யிட விரும்பும் கட்­சியின் பிரதித் தலை­வ­ரான சஜித் பிரே­ம­தாச இன்று பரப்­பு­ரை­களை ஆரம்­பிக்­க­வுள்­ள­தாக தெரி­விக்­கப்­ப­டு­கி­றது.

ஜனா­தி­பதி வேட்­பாளர் விட­யத்தில் ஐ.தே.க. தலைவர் ரணில் விக்ரமசிங்­க­வுக்கும், பிரதித் தலைவர் சஜித் பிரே­ம­தா­ச­வுக்கும் இடையில் இழு­ப­றி­நிலை நீடித்து வரு­கி­றது.

இந்த நிலையில், சஜித் பிரே­ம­தா­சவை போட்­டியில் நிறுத்த வேண்டும் என வலி­யு­றுத்தும் அணி­யி­னரின் சார்பில் அமைச்சர் ஹரின் பெர்னான்டோ இன்று பது­ளையில் பாரிய பேர­ணியை பொதுக் கூட்டத்­தையும்  நடத்­த­வுள்ளார்.

சஜித் பிரே­ம­தா­ச­வுக்கு ஆத­ர­வான இந்த பேரணி, சஜித் பிரே­ம­தா­சவின் தேர்தல் பரப்­பு­ரையின் தொடக்­க­மாக இருக்கும் என்று எதிர்பார்க்கப்ப­டு­கி­றது.

இதே­வேளை இந்த பேர­ணி­யிலும் பொதுக் கூட்­டத்­திலும் ஜனா­தி­பதி தேர்தல் வேட்­பாளர் தொடர்பில் கருத்­துக்கள் பரி­மாறக் கூடாது என்றும் கட்சி இன்­னமும் ஒரு தீர்­மானம் எடுக்­காத நிலையில் இவ்­வாறு செயற்­படக் கூடாது என்றும் ஐக்­கிய தேசிய கட்­சியின் செய­லாளர் அகில விராஜ் காரி­ய­வசம் அமைச்சர் ஹரீன் பெர்­னாண்­டோ­வுக்கு கடிதம் மூலம் அறி­வித்­துள்ளார்.

இதற்கு பதி­ல­ளித்­துள்ள அமைச்சர் ஹரீன் பெர்­னாண்டோ வீட­மைப்பு நிர்­மா­ணத்­துறை அமைச்சர் சஜித் பிரே­ம­தாஸ பது­ளைக்கு அமைச்­ச­ராக பத­வி­யேற்ற பின்னர் முதற் தடவையாக வருகை தருவதானல் அவரை வரவேற்கும் வகையில் இந்த பேரணியையும் கூட்டத்தையும் ஏற்பாடு செய்துள்ளதாக தெரிவித்துள்ளார்.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

கடற்படை வீரர்கள் இருவர் உட்பட 4...

2024-04-19 22:16:12
news-image

சிறுமியின் மரணத்திற்கு நீதி கோரி தரணிக்குள...

2024-04-19 20:36:49
news-image

சர்வோதய ஸ்தாபகர் ஏ.டி. ஆரியரத்னவின் பூதவுடலுக்கு...

2024-04-19 19:21:27
news-image

பாலித தெவரப்பெருமவின் பூதவுடலுக்கு ஜனாதிபதி இறுதி...

2024-04-19 18:46:10
news-image

கோழி இறைச்சியின் விலை குறைப்பு!

2024-04-19 18:33:17
news-image

பொலிஸாரிடமிருந்து தப்பிச் செல்ல முயன்ற நபர்...

2024-04-19 18:10:41
news-image

உயிர்த்த ஞாயிறு தாக்குதல்கள் குறித்து சர்வதேச...

2024-04-19 17:53:19
news-image

மெய்வல்லுநர் ஜாம்பவான் நாகலிங்கம் எதிர்வீரசிங்கம் காலமானார்

2024-04-19 17:53:07
news-image

கனடாவில் 6 இலங்கையர்களைக் கொலை செய்த...

2024-04-19 17:53:58
news-image

தெவுந்தர கடற்கரையில் கைப்பற்றப்பட்ட போதைப்பொருட்களை பரிசோதனைக்கு...

2024-04-19 17:15:25
news-image

நுவரெலியாவில் தவறான முடிவெடுத்து உயிரை மாய்த்த...

2024-04-19 16:14:46
news-image

சுற்றுலாப் பயணிகள் அதிகம் வருகை தரும்...

2024-04-19 16:15:27