Thunderclap Headache என்ற பாதிப்பிற்குரிய சிகிச்சை

Published By: Digital Desk 4

10 Aug, 2019 | 05:00 PM
image

இன்றைய திகதியில் நாளாந்தம் நாம் மன அழுத்தம், மன இறுக்கம், மன உளைச்சல் போன்றவற்றால் பாதிக்கப்படும் போது எமக்கு தலைவலி ஏற்படுவது இயல்பு. சிலருக்கு காரணமேயில்லாமல் தலைவலி ஏற்படும். மூளையிலுள்ள நரம்புகளில் ஏதேனும் சிறிய அளவில் இடையூறோ அல்லது தடையோ ஏற்பட்டால் கூட தலைவலி உண்டாகும்.

இதைத் தொடர்ந்து தலைவலி தானே... தானாக சரியாகிவிடும் என்றெண்ணி அதனை அலட்சியப்படுத்தினால் நாளடைவில் , பக்கவாதம், வலிப்பு, தலை சுற்றல், கழுத்து வலி, முதுகுவலி, கைகால் எரிச்சல், கை கால் வலி, கை கால் நடுக்கம் ,நினைவு திறன் இழப்பு ,ஞாபகமறதி உறக்கமின்மை என பல பாதிப்புகள் ஏற்படும். நரம்புகளில் உருவாகும் கோளாறுகளால் இத்தகைய பாதிப்பு உண்டாகிறது.

தலைவலி பல தருணங்களில், பல்வேறு காரணங்களால் ஏற்பட்டிருப்பினும், நாற்பது வயதை கடந்த பிறகு வரும் முதல் தலைவலி முக்கியமானது. ஏனெனில் இத்தகைய தருணங்களில் உண்டாகும் தலைவலி, சில நொடிகளிலேயே அதிக அளவிற்கு பரவி, வலியையும், வேதனையையும் அளித்து, முழு கவனத்தையும் ஈர்க்கும். இந்த தலைவலி மிகவும் ஆபத்தானது. 

சிலருக்கு இதன்போது தலைசுற்றலும் ஏற்படும். இவர்களுக்கு மூளையில் இரத்தக் கசிவு ஏற்பட்டிருக்கக்கூடும். இதன் காரணமாகவே தலைவலி திடீரென்று தோன்றி விரைவாக பரவுகிறது. இதனை மருத்துவமனையில்Thunderclap Headache என குறிப்பிடுவார்கள்.

சிலருக்கு காய்ச்சல் ஏற்பட்டு, அதன் காரணமாக தலைவலி உண்டானால், மூளையில் இரத்தக் குழாய்களுக்குள் அல்லது மூளையின் ஏதேனும் ஒரு பகுதிக்குள் கிருமித்தொற்று ஏற்பட்டு இருக்கக்கூடும். இதன் காரணமாகவும் தலைவலி அதிகரிக்கும். 45 வயதுக்கு மேற்பட்டவர்களுக்கு கண்களில் க்ளக்கோமா பாதிப்பு இருந்தால், அவர்களுக்கும் திடீரென்று தலைவலி ஏற்படும். 

இவர்கள் கண் மருத்துவர்களை சந்தித்து ஆலோசனையும் சிகிச்சையும் பெற்றாலும், நரம்பியல் மருத்துவர்களையும் சந்தித்து ஆலோசனை பெற வேண்டும். அப்போது தான் தலைவலி குறித்த துல்லியமான தகவல்களைப் பெற்று அதற்குரிய சிகிச்சையும், நிவாரணத்தையும் அளிக்க இயலும். அத்துடன்  இவர்கள் உடனடியாக மருத்துவரைப் பார்த்து, மூளையில் உள்ள நரம்பியல் தொடர்பான மருத்துவ பரிசோதனையை செய்து கொள்ள பரிந்துரைத்தால் அதனை தவிர்க்காமல், செய்து மருத்துவரிடம் காட்டுங்கள். அவர் தலைவலி அதற்கு மேல் தொடர்ந்து வராமல் இருப்பதற்கான தடுப்பு சிகிச்சையை மேற்கொள்ளமுடியும்.

டொக்டர் பிரபாஸ்.

தொகுப்பு அனுஷா.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

அதீத கொழுப்பு பாதிப்பிற்குரிய நவீன சிகிச்சை

2024-04-18 17:30:48
news-image

ஈஸோபாகல் அட்ராஸியா எனும் உணவு குழாய்...

2024-04-17 17:43:31
news-image

நுரையீரல் உயர் குருதி அழுத்த பாதிப்பிற்குரிய...

2024-04-16 17:40:01
news-image

ஓடிடிஸ் மீடியா எனும் நடு காதில்...

2024-04-15 16:27:12
news-image

சிஸ்டிக் ஃபைப்ரோசிஸ் எனும் பாதிப்பிற்குரிய நவீன...

2024-04-15 02:57:12
news-image

ஹீட் ஸ்ட்ரோக் எனும் பாதிப்பிற்குரிய சிகிச்சை

2024-04-12 01:31:06
news-image

பிறவி அட்ரீனல் ஹைப்பர்பிளேசியா எனும் சுரப்பியில்...

2024-04-10 22:59:16
news-image

ரூமாடிக் ஹார்ட் டிஸீஸ் எனும் இதய...

2024-04-09 17:25:41
news-image

யாழில் புற்றுநோய் அதிகரிப்பு ! கடந்த...

2024-04-09 09:37:01
news-image

கை நடுக்கம் எனும் பாதிப்பிற்குரிய நவீன...

2024-04-08 18:33:54
news-image

உலக ஆரோக்கிய தினத்தில் உறுதி கொள்வோம்!

2024-04-08 10:00:07
news-image

டெஸ்டிகுலர் கேன்சர் எனும் விரைசிரை புற்றுநோய்...

2024-04-05 20:56:29