3 ஆம் மாடியில் இருந்து குதித்த நபர் பொலிஸாரால் கைதுசெய்யப்பட்ட பின் பலி- மட்டக்குளியில் சம்பவம்

Published By: Daya

10 Aug, 2019 | 05:25 PM
image

மட்டக்குளி - கதிரானவத்த பிரதேசத்தில் குடியிருப்பொன்றுக்குள் அத்துமீறி நுழைந்த சந்தேக நபரொருவர் பிரதேசவாசிகளால் பிடிக்கப்பட்டு பொலிஸாரிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளார். 

குறித்த சந்தேகநபர் இன்று சனிக்கிழமை மட்டக்குளி பொலிஸ் நிலையத்தில் உயிரிழந்துள்ளாதாக  பொலிஸ் ஊடகப்பேச்சாளர் ருவன் குணசேகர தெரிவித்தார். 

சம்பவம் தொடர்பில் அவர் மேலும் தெரிவித்ததாவது : 

மட்டக்குளி பொலிஸ் பிரிவிற்குட்பட்ட கதிரானவத்தை பிரதேசத்தில் பிரதேசவாசிகளால் குடியிருப்புக்குள் அத்துமீறி நுழைந்த சந்தேகநபரொருவர் பிடிக்கப்பட்டுள்ளதாக பொலிஸ் அவசர தொலைபேசி அழைப்பிற்கு தகவல் வழங்கப்பட்டது. வழங்கப்பட்ட தகவலுக்கு அமைய மட்டக்குளி பொலிஸார் குறித்த பிரதேசத்திற்குச் சென்றுள்ளனர். 

அதன் போது பிரதேசவாசிகளால் பிடிக்கப்பட்ட குறித்த சந்தேகநபர் பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளார். இவ்வாறு கைது செய்யப்பட்டவர்  26 வயதுடைய கதிரானவத்த மட்டக்குளிய பிரதேசத்தைச் சேர்ந்த ஜானக கோமஸ் என்பவராவார். இவர் கதிரானவத்தை பிரதேசத்தில் அமைந்துள்ள மாடிக் குடியிருப்பு ஒன்றுக்குள் அத்து மீறி நுழைய முற்பட்டுள்ளார். 

அந்த குடியிருப்பின் 3 ஆவது மாடியில் இவரைக் கண்ட பெண் ஒருவர் கூச்சலிட்டதைத் தொடர்ந்து  குறித்த சந்தேகநபர் மாடியிலிருந்து குதித்துள்ளதாக ஆரம்ப கட்ட விசாரணைகளில் இருந்து தெரியவந்துள்ளது. 

கைது செய்யப்பட்ட சந்தேகநபர் மட்டக்குளி பொலிஸ் நிலையத்திற்கு கொண்டு செல்லப்பட்டு தடுத்து வைக்கப்பட்டுள்ளார்.  அதன் பின்னர்  நேற்று சனிக்கிழமை காலை 8 தொடக்கம் 9 மணிக்கிடைக்கப்பட்ட நேரத்தில் அவர்  உயிரிழந்துள்ளார். இது தொடர்பில் கொழும்பு வடக்கு பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரியின் கீழ் மேலதிக விசாரணைகள் முன்னெடுக்கப்பட்டு வருகின்றன.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

தடுப்பூசி போடப்பட்ட மாணவ குழுவில் 10...

2024-03-28 18:55:29
news-image

நன்னடத்தை பாடசாலை மேற்பார்வையாளர் பெண்ணிற்கு மீண்டும்...

2024-03-28 16:58:06
news-image

பாராளுமன்றம் ஏப்ரல் 01ஆம் திகதி மற்றும்...

2024-03-28 16:28:48
news-image

பெருந்தோட்ட கம்பனிகள் சமர்ப்பித்த முன்மொழிவை நிராகரித்த...

2024-03-28 16:19:07
news-image

கெஹெலிய ரம்புக்வெல்லவிற்கு மீண்டும் விளக்கமறியல்

2024-03-28 16:14:07
news-image

கொழும்பு கிராண்ட்பாஸ் பகுதியில் தீ பரவல்

2024-03-28 15:52:31
news-image

இன்றைய நாணய மாற்று விகிதம் 

2024-03-28 16:02:37
news-image

மீண்டும் அதிகரித்த தங்கத்தின் விலை!

2024-03-28 14:48:17
news-image

மக்களின் துயரங்களுக்கு தீர்வு காண நாட்டின்...

2024-03-28 14:26:10
news-image

இருவரைச் சுட்டுக் கொன்ற சம்பத் சமிந்தவின்...

2024-03-28 16:00:53
news-image

மாதமொன்றுக்கு 6 இலட்சம் கோழி முட்டைகள்...

2024-03-28 13:56:01
news-image

கத்தரிக்கோலால் தாக்கப்பட்டு ஒருவர் கொலை ;...

2024-03-28 12:03:22