யாழ்.பல்கலை. மாணவர்கள் 7 பேரும் பிணையில் விடுவிப்பு

Published By: Daya

10 Aug, 2019 | 02:48 PM
image

யாழ்ப்பாண பல்கலைக்கழகத்தில் பயிலும் சிங்கள மாணவர்கள் 7 பேர், மோதலில் ஈடுபட்டனர் என்ற குற்றச்சாட்டில் கைது செய்யப்பட்டு யாழ்ப்பாணம் நீதிவான் நீதிமன்றால் பிணையில் விடுவிக்கப்பட்டனர். 

யாழ்ப்பாண பல்கலைக்கழக 2ஆம் மற்றும் 3ஆம் வருட மாணவர்களுக்கு இடையில் நேற்றுமுன்தினம் புதன்கிழமை பல்கலைக்கழக வளாகத்துக்கு வெளியில் கைகலப்பு ஏற்பட்டது.

யாழ்ப்பாணப் பல்கலைக்கழக வாயிலில் இராணுவத்தினர் கடமையில் இருந்த நிலையில் இந்த மோதல் இடம்பெற்றது.

எனினும் அவர் தடுக்கவில்லை. மாணவர்களின் மோதலை ஒளிப்படம் எடுத்த பொது மகனை அச்சுறுத்திய இராணுவத்தில் அவரது அலைபேசியில் இருந்த ஒளிப்படங்களை அழித்தனர்.

இந்த மோதல் பல்கலைக்கழக மாணவர்கள் சிலர் தங்கியுள்ள விடுதிவரை நீடித்தது. சம்பவத்தில் சிங்கள மாணவர்கள் சிலர் காயமடைந்தனர். 

இந்த சம்பவம் தொடர்பில் கோப்பாய் பொலிஸாருக்கு தகவல் வழங்கப்பட்டது. விசாரணைகளை ஆரம்பித்த பொலிஸார், மாணவர்கள் சிலர் வழங்கிய வாக்குமூலத்தின் அடிப்படையில் இந்த மோதலுடன் தொடர்புடையவர்கள் என்ற குற்றச்சாட்டில் 7 சிங்கள மாணவர்களை கைது செய்தனர். 

அவர்கள் 7 பேரும் யாழ்ப்பாணம் நீதிமன்ற நீதிவான் ஏ.எஸ்.பி. போல் முன்னிலையில் இன்று முற்படுத்தப்பட்டனர். மாணவர்கள் மீதான குற்றச்சாட்டை ஆராய்ந்த நீதிவான், அவர்கள் 7 பேரையும் பிணையில் விடுவித்து வழக்கை ஒத்திவைத்தார்.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

கணவன் மரணம் : மனைவி தவறான...

2024-04-19 02:57:58
news-image

வவுனியாவில் பாலித தெவரப்பெருமவுக்கு இளைஞர்கள் அஞ்சலி

2024-04-19 03:04:14
news-image

யாழ்ப்பாணத்தில் மனைவியை கூரிய ஆயுதத்தால் தாக்கிய...

2024-04-19 02:29:42
news-image

வெற்றுக் காணியில் வைத்திய கழிவுகளை கொட்டும்...

2024-04-19 02:24:21
news-image

இலங்கையில் தமது சேவை வழங்கலை இணைத்தது...

2024-04-19 02:19:10
news-image

கச்சதீவை பெற்றுக்கொள்ள இந்தியா சர்வதேச நீதிமன்றத்தை...

2024-04-19 02:01:40
news-image

அரசு கட்டமைப்புக்களின் பங்குகளைக் கொள்வனவு செய்ய...

2024-04-18 16:30:09
news-image

இளைஞர்கள் எதிர்பார்க்கும் இலங்கை கட்டியெழுப்பப்படும் -...

2024-04-18 23:45:38
news-image

யாழ்ப்பாணத்தில் கிணற்றில் விழுந்த இளம் குடும்பப்...

2024-04-18 22:24:04
news-image

சுதந்திரக் கட்சியின் உத்தியோகபூர்வமற்ற தலைவராக ரணில்...

2024-04-18 16:53:55
news-image

களுத்துறையில் சுற்றுலா பயணிக்கு வடை மற்றும்...

2024-04-18 21:19:33
news-image

மக்களின் கோரிக்கைக்கு அமைய முறைமை மாற்றத்தை...

2024-04-18 20:45:44