கோத்தாவின் குடியுரிமை, கடவுச்சீட்டு குறித்து விசாரிக்குமாறு முறைப்பாடு

Published By: Daya

10 Aug, 2019 | 03:56 PM
image

(செய்திப்பிரிவு)

 

கோத்தாபாயவின் குடியுரிமை, கடவுச்சீட்டு குறித்து  விசாரிக்குமாறு  சிவில் சமூக செயற்பாட்டாளர்களான காமினி வியாங்கொடவும், பேராசிரியர் சந்திரகுப்த தேநுவரவும் பொலிஸ் தலைமையகத்தில் முறைப்பாடுகளைச் செய்துள்ளனர்.

முன்னாள் பாதுகாப்புச் செயலாளர் கோத்தபாய ராஜபக்ஷவின் இலங்கைக் குடியுரிமை, அவர் அண்மையில் பெற்ற கடவுச்சீட்டு மற்றும் அமெரிக்கப் பிரஜை என்ற வகையில் இலங்கையில் அவரது அரசியல் நடவடிக்கைகளில் இடம்பெற்றிருப்பதாகக் கூறப்படுகின்ற முறைகேடுகள் தொடர்பில் கடந்தவாரம் (5.8.2019) கொழும்பு தினசரியான பைனான்ஷியல் டைம்ஸில் வெளியான தகவல்களை விசாரணை செய்யுமாறு சிவில் சமூக செயற்பாட்டாளர்களான காமினி வியாங்கொடவும், பேராசிரியர் சந்திரகுப்த தேநுவரவும் பொலிஸ் தலைமையகத்தில் முறைப்பாடுகளைச் செய்துள்ளனர். 

அடுத்த ஜனாதிபதித் தேர்தலில் ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் பொதுவேட்பாளராக நியமிக்கப்பட இருப்பவரெனப் பரவலாக நம்பப்படும் கோத்தாபாய ராஜபக்ஷ 2005 ஜனாதிபதித் தேர்தலில் தனது சகோதரர் மஹிந்த ராஜபக்ஷவின் பிரசாரங்களுக்கு உதவுவதற்காக ஒரு அமெரிக்கப் பிரஜையாக சுற்றுலாப்பயண விசாவிலேயே இலங்கை வந்ததாகவும், சகோதரரின் தேர்தல் வெற்றிக்குப் பிறகு மர்மமான சூழ்நிலைகளின் கீழ் உடனடியாக இரட்டைக் குடியுரிமையைப் பெற்றுக்கொண்டதாகவும் பைனான்ஷில் டைம்ஸ் அதன் செய்தியில் குறிப்பிட்டிருந்தது.

கோத்தாபாயவின் இரட்டைக் குடியுரிமையுடன் தொடர்புடைய கோவைகள் எவையும் குடிவரவுத் திணைக்களத்தில் இருக்கவில்லை. 2016 ஜனவரியில் மாத்திரமே திணைக்களத்தின் கணினியில் அது தொடர்பான தகவல்கள் தரவேற்றம் செய்யப்பட்டதாகவும், ஒரு அமெரிக்கப் பிரஜையாக இருந்த போதிலும்கூட 2005 வாக்காளர் பட்டியலில் அவரது பெயர் பதிவு செய்யப்பட்டிருந்ததாகவும் அந்தச் செய்தியில் தகவல் வெளியிடப்பட்டிருந்தது.

குடிவரவுத் திணைக்களத்தின் பதிவில் இல்லாத புதிய தேசிய அடையாள அட்டையொன்றைப் பயன்படுத்தி அவர் இவ்வருடத்தின் மே மாதம் கடவுச்சீட்டொன்றைப் பெற்றதாகவும் அதில் கூறப்பட்டிருந்தது. 

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

ஈஸ்டர் தாக்குதல் சம்பவம் தொடர்பில் மைத்திரிக்கு...

2024-03-28 19:46:59
news-image

தடுப்பூசி போடப்பட்ட மாணவ குழுவில் 10...

2024-03-28 18:55:29
news-image

நன்னடத்தை பாடசாலை மேற்பார்வையாளர் பெண்ணிற்கு மீண்டும்...

2024-03-28 16:58:06
news-image

பாராளுமன்றம் ஏப்ரல் 01ஆம் திகதி மற்றும்...

2024-03-28 16:28:48
news-image

பெருந்தோட்ட கம்பனிகள் சமர்ப்பித்த முன்மொழிவை நிராகரித்த...

2024-03-28 16:19:07
news-image

கெஹெலிய ரம்புக்வெல்லவிற்கு மீண்டும் விளக்கமறியல்

2024-03-28 16:14:07
news-image

கொழும்பு கிராண்ட்பாஸ் பகுதியில் தீ பரவல்

2024-03-28 15:52:31
news-image

இன்றைய நாணய மாற்று விகிதம் 

2024-03-28 16:02:37
news-image

மீண்டும் அதிகரித்த தங்கத்தின் விலை!

2024-03-28 14:48:17
news-image

மக்களின் துயரங்களுக்கு தீர்வு காண நாட்டின்...

2024-03-28 14:26:10
news-image

இருவரைச் சுட்டுக் கொன்ற சம்பத் சமிந்தவின்...

2024-03-28 16:00:53
news-image

மாதமொன்றுக்கு 6 இலட்சம் கோழி முட்டைகள்...

2024-03-28 13:56:01