தேர்தல்கள் கரிசனை

Published By: Daya

10 Aug, 2019 | 11:16 AM
image

விரைவில் நாட்டில் முக்­கிய தேர்­தல்கள் இடம்­பெ­ற­வுள்­ளன. இத்­தேர்­தல்­களில் வெற்­றியை தம­தாக்கிக் கொள்ளும் பொருட்டு அர­சியல் கட்­சிகள் காய் நகர்த்தத் தொடங்கி இருக்­கின்­றன. இது கால­வரை மக்­களை மறந்­தி­ருந்த சில அர­சி­யல்­வா­தி­களின் கவனம் தேர்தல் காலம் என்­பதால் இப்­போது மக்­களின் பக்கம் திரும்பி இருக்­கின்­றது. 
மக்­களின் வறுமை நிலை மற்றும் பிரச்­சி­னை­களைக் கேட்­ட­றிந்து இப்­போது பலர் நீலிக்­கண்ணீர் வடிக்­கத்­தொ­டங்கி இருக்­கின்­றார்கள். இந்த வகையில் மலை­யக மக்கள் மீதும் இப்­போது பல­ருக்கு கரி­சனை வந்­தி­ருக்­கின்­றது. “இம்­மக்­களின் பல்­வேறு பிரச்­சி­னை­களும் தீர்க்­கப்­ப­டா­தி­ருப்­ப­தாக இப்­போ­துதான் இவர்­கள்  வாய் திறக்­கின்­றார்கள். எவ்­வா­றெ­னினும் மக்கள் இவர்­களை தெளி­வாக புரிந்து கொண்­டுள்­ளார்கள். அவர்கள் தேர்தல் கால வாக்­கு­று­தி­க­ளையும் போலி­யான முன்­னெ­டுப்­பு­க­ளையும் இனியும் நம்பி ஏமா­ற­மாட்­டார்கள். 


இந்­நாட்டில் மலை­யக மக்­களின் வர­லாறு என்­பது மிகவும் கசப்­பா­ன­தாகும். இந்­தி­யாவில் இருந்து கூலித் தொழி­லா­ளர்­க­ளாக அழைத்து வரப்­பட்ட இம்­மக்கள் தொடர்ச்­சி­யா­கவே பல்­வேறு துன்ப துய­ரங்­க­ளுக்கும் முகம் கொடுத்து வந்­தி­ருக்­கின்­றார்கள். இன்னும் முகம் கொடுத்தும் வரு­கின்­றார்கள் என்­பது யாவரும் அறிந்த ஒரு விட­ய­மாகும். பல்­வேறு இன்பக் கன­வு­க­ளுடன் இடம்­பெ­யர்ந்த இவர்­களின் கனவு நன­வா­க­வில்லை. 

அடிமேல் அடி விழுந்­ததே தவிர இம்­மக்­களின் வாழ்வில் செழுமை ஏற்­ப­ட­வில்லை. தோட்­டத்­துக்­குள்­ளேயே இவர்­களின் வாழ்க்கை முடங்கிப் போய் இருந்­தது. எதற்­கெ­டுத்­தாலும் பிறரின் உத­வி­யி­னையும் இவர்கள் நாடிச் செல்ல வேண்­டி­யி­ருந்­தது. நாடு சுதந்­திரம் அடைந்­தும்­கூட மலை­யக மக்­களின் வாழ்வு என்­பது இரு­ளில்தான் மூழ்­கிக்­கி­டந்­தது. சுதந்­தி­ரத்தின் முன்னர் இவர்கள் எதிர்­நோக்­கிய சவால்­களைக் காட்­டிலும் அதி­க­மான சவால்­களை சுதந்­தி­ரத்தின் பின்னர் எதிர்­நோக்க வேண்டி இருந்­தது. 

பிர­ஜா­வு­ரி­மையும் வாக்­கு­ரி­மையும் பறிக்­கப்­பட்டு இலங்கை மண்ணில் நிர்க்­கதி நிலைக்கு உள்­ளாக்­கப்­பட்ட இம்­மக்கள் பிர­ஜா­வு­ரி­மையும் வாக்­கு­ரி­மையும் பெற்றுக் கொண்ட பின்­னரும் கூட உரிய அபி­வி­ருத்­தியை பெற்றுக் கொண்­ட­தாக இல்லை. தேசிய மய­மாக்கல், அதை­ய­டுத்து மேற்­கொள்­ளப்­பட்ட தனியார் மயப்­ப­டுத்தல் இவை­களின் தாக்­கத்­தி­னாலும் தொழிற்­சங்க வளர்ச்­சி­யி­னாலும் தோட்ட நிர்­வாக முறைகள் மாற்­றி­ய­மைக்­கப்­பட்­டன. எனினும் தோட்­டங்­களில் வாழும் தொழி­லா­ளர்கள் அர­சியல், சமூக, பொரு­ளா­தார, கலா­சார பாகு­பா­டு­க­ளுக்கு உள்­ளா­வ­துடன் அபி­வி­ருத்­திக்­கான உரி­மையும் மறுக்­கப்­பட்­ட­வர்­க­ளா­கவே இருக்­கின்­றார்கள் என்று புத்­தி­ஜீ­விகள் வலி­யு­றுத்­தி­யுள்­ள­மையும் இங்கு நோக்­கத்­தக்க ஒரு விட­ய­மா­கவே உள்­ளது. தோட்­டங்கள் அங்கு வசிக்­கின்ற மக்­களின் வாழ்க்­கையில் பல்­வேறு அம்­சங்­க­ளையும் கட்­டுப்­ப­டுத்­தி­யது. இம்­மக்­களின் சுதந்­தி­ர­மான செயற்­பா­டு­க­ளுக்கு முட்­டுக்­கட்­டைகள் இடப்­பட்­டன. 


ஆட்­சி­யா­ளர்கள் பல இன மக்­களும் வாழும் ஒரு நாட்டில் ஆட்­சி­யா­ளர்கள் சகல இனங்­க­ளினதும் உரி­மை­க­ளுக்கு மதிப்­ப­ளித்து செயற்­ப­டுதல் வேண்டும். இதன் மூலம் ஐக்­கியம் வலுப்­பெறும் நிலையில் சாந்­தியும் சமா­தா­னமும் மேலோங்கும். நாட்டின் அபி­வி­ருத்­தியும் முன்­னேற்­ற­ம­டையும். எனினும் இலங்­கையின் ஆட்­சி­யா­ளர்கள் குறித்து பல்­வேறு விசனப் பார்­வைகள் முன்­வைக்­கப்­பட்டு வரு­கின்­ற­மையும் தெரிந்த ஒரு விட­ய­மாகும். 

 

 

 

பெரும்­பான்மை மக்­களை திருப்­திப்­ப­டுத்­து­வதன் ஊடாக தமது அர­சியல் இருப்­பினை தக்­க­வைத்துக் கொள்ளும் கலா­சாரம் இந்­நாட்டில் பாரிய பிரச்­சி­னை­க­ளுக்கும் அடித்­த­ள­மாகி இருக்­கின்­றது. சிறு­பான்­மை­யினர் கிள்­ளுக்­கீ­ரைகள். இவர்­க­ளுக்கு உரி­மை­களை வழங்கத் தேவை­யில்லை. இவர்­க­ளுக்கு உரி­மை­களை வழங்­கினால் அது பெரும்­பான்­மை­யி­ன­ருக்கு ஆபத்தாய் போய்­விடும் என்­கிற சிந்­த­னையே இங்கு அதி­க­மா­கவே மேலெ­ழுந்­தி­ருக்­கின்­றன. சிங்­க­ளவர் போன்று வேறு ஒரு சமூகம் இருக்கும் என்று நான் எண்­ண­வில்லை. 

 

இந்­தி­யர்­க­ளுக்கு ஒரு பெரிய நாடு உள்­ளது. எங்­க­ளுக்கு இச்­சிறு துண்டு நிலமே உள்­ளது. இந்த நாடு எங்­க­ளுக்கு வேண்டும் என்ற சிந்­தனை கருத்து வெளிப்­பாடு 1928 இல் இடம்­பெற்­றது. 
இதனை அடி­யொற்­றி­ய­தாக சுதந்­தி­ரத்­திற்குப் பின்­னரும் கூட ஆட்­சி­யா­ளர்கள் சிலரின் நட­வ­டிக்­கைகள் அமைந்­தி­ருந்­தமை புதிய விட­ய­மல்ல. இலங்­கையை மாறி மாறி ஆட்சி செலுத்­திய ஆட்­சி­யா­ளர்கள் மலை­யக மக்­களின் நலன் கருதி காத்­தி­ர­மான பங்­க­ளிப்­பினை நல்­க­வில்லை என்­ப­தனை பெரும்­பான்­மையைச் சேர்ந்த அமைச்சர் ஒரு­வரே அண்­மையில் ஏற்றுக் கொண்­டி­ருந்தார். இது குறித்து தனது வருத்­தத்­தையும் அவர் தெரி­வித்­தி­ருந்­த­மையும் குறிப்­பி­டத்­தக்­க­தாகும். 1948 ஆம் ஆண்டு இந்­திய வம்­சா­வ­ழி­யி­னரின்  பிர­ஜா­வு­ரி­மை­யையும் வாக்­கு­ரி­மை­யையும் ஐக்­கிய தேசியக் கட்சி பறித்­தெ­டுத்து அம்­மக்­களை சகல துறை­க­ளிலும் நிர்­வா­ணப்­ப­டுத்­தி­யது. 1956 இல் தனிச் சிங்­களச் சட்டம் கொண்­டு­வ­ரப்­பட்டு சிறு­பான்­மை­யி­னரின் வீழ்ச்­சிக்கு அடித்­த­ள­மி­டப்­பட்­டது. தனிச் சிங்­கள சட்­டத்தை முன்னர் எதிர்த்­த­வர்கள் பின்னர் அர­சியல் இருப்­புக்­காக இதனை ஆத­ரிக்க தலைப்­பட்­டனர். கருத்து மாற்­றங்கள் அதி­க­மா­கவே இடம்­பெற்­றி­ருந்­தன.


அடங்கி வாழ வேண்டும்
இலங்கை சிங்­கள – பௌத்­தர்­க­ளுக்கு மட்­டுமே சொந்­த­மான நாடு என்ற கருத்து பிற்­கா­லத்தில் ஆழ­மா­கவே வேரூன்ற இட­ம­ளிக்­கப்­பட்­டது. இந்த விதைப்பு பல்­வேறு விரி­சல்­களும் இடம்­பெற உந்து சக்­தி­யா­கி­யமை தெரிந்த விட­ய­மாகும். சரத் பொன்­சேகா இந்­நாட்டின் இரா­ணுவத் தள­ப­தி­யாக கட­மை­யாற்­றி­யவர். யுத்­தத்தை முடி­வுக்கு கொண்டு வரு­வதில் அளப்­ப­ரிய பங்­காற்­றி­யவர். ஜனா­தி­பதி தேர்தல் வேட்­பா­ள­ராக இவர் 2010 ஆம் ஆண்டில் கள­மி­றங்கி இருந்தார்.

 

 சரத் பொன்­சேகா இத்­தேர்­தலில் தோல்வி கண்­டி­ருந்­தாலும். ஒரு சில­வேளை அவர் ஜனா­தி­பதி தேர்­தலில் வெற்றி பெற்­றி­ருந்­தாலும் மலை­யக மக்கள் உள்­ளிட்ட சிறு­பான்மை மக்கள் குறித்து எவ்­வாறு நடந்து கொண்­டி­ருப்பார் என்­ப­தனை அவரின் பேச்சின் மூல­மாக விளங்கிக் கொள்ளக் கூடி­ய­தாக இருந்­தது. இலங்கை சிங்­கள பௌத்­தர்­க­ளுக்கு மட்­டுமே சொந்­த­மான நாடு. ஏனைய சிறு­பான்­மை­யினர் அவர்­க­ளுடன் வாழ தெரிந்­து­கொள்­ள­வேண்டும் என்று சிறு­பான்­மை­யினர் மனம் புண்­ப­டும்­படி அவர் கருத்­து­களை வெளி­யிட்­டி­ருக்­கின்றார். சிறு­பான்­மை­யினர் நலன்­களை பேண விரும்­பாத, சிறு­பான்­மை­யி­ன­ருக்கு உரி­மை­களை வழங்க விரும்­பாத ஒரு­வ­ராக அவர் தன்னை அடை­யா­ளப்­ப­டுத்திக் கொண்­டி­ருந்தார்.


‘கன­டியன் நெஷனல் போஸ்ட்’ என்­கிற நாளி­த­ழுக்கு 2008 ஆம் ஆண்டில் அவர் ஒரு செவ்­வி­யினை வழங்கி இருந்தார். இச் செவ்­வியில் இலங்கை நாடா­னது அதன் 75 வீத மக்­க­ளான சிங்­க­ள­வர்­க­ளுக்கே சொந்­த­மா­னது. சிறு­பான்­மை­யினர் எங்­க­ளுடன் இந்த நாட்டில் வாழலாம். ஆனால் அவர்கள் சிறு­பான்­மை­யி­னரின் உரி­மைகள் என்ற அடிப்­ப­டையில் சாத்­தி­ய­மற்­ற­தான எவற்­றையும் கோரிக்­கை­யாக முன்­வைக்க முடி­யாது என்று தனது செவ்­வியில் அவர் தெரி­வித்­தி­ருந்தார். 

 

இந்­நி­லையில் இரா­ஜ­தந்­திரம், பொரு­ளா­தாரம், அர­சியல் என்ற விடயங்­களில் சரத் பொன்­சே­காவின் அறிவும், தொலை­நோக்கும் எதிர்­பார்ப்­பு­க­ளுக்கு மிகவும் அந்­நி­ய­மா­னவை என்­பதில் சந்­தே­க­மில்லை என்று பத்­தி­ரி­கைகள் செய்தி வெளி­யிட்­டி­ருந்­தன. இக்­கா­ல­கட்­டத்தில் மேலும் பல கருத்­து­க­ளையும் அவர் வெளிப்­ப­டுத்தி இருந்தார். விடு­த­லைப்­பு­லிகள் அழித்­தொ­ழிக்­கப்­பட்டால் நெடு­மாறன், வைகோ போன்ற தமிழ்­நாட்டின் அர­சியல் கோமா­ளி­களும் விடு­தலைப் புலி­க­ளிடம் இருந்து பணம் பெற்றுக் கொண்டு அவர்­க­ளுக்கு அனு­தா­பி­களாய் இருக்கும் ஏனை­ய­வர்­களும் அவர்­களின் வரு­மா­னத்தை இழந்து விடு­வார்கள் என்றும் சர்ச்­சைக்­கு­ரிய கருத்­து­களை அவர் வெளி­யிட்­டி­ருந்தார். 

 

சரத் பொன்­சே­காவின் தமி­ழக அர­சி­யல்­வா­திகள் தொடர்­பான பல­வித கருத்­துகள் குறித்து அப்­போ­தைய தமி­ழக முத­ல­மைச்சர் மு.கரு­ணா­நி­தியும் கண்­டனம் தெரி­வித்­தி­ருந்தார். நம் நாட்டு அர­சியல் தலை­வர்கள் ஒரு­வரை ஒருவர் குறை சொல்­வதும் குற்றம் சாட்­டு­வதும் வேறு. ஆனால் மற்­றொரு நாட்டைச் சேர்ந்­தவர் எமது நாட்டுத் தலை­வர்­களைப் பற்றி இவ்­வாறு அவ­தூ­றான கருத்­துக்­களைக் கூறு­வதை எவ்­வ­கை­யிலும் ஏற்­றுக்­கொள்ள முடி­யாது என்று கரு­ணா­நிதி தெரி­வித்­தி­ருந்தார். 

 

சரத் பொன்­சேகா ஜனா­தி­பதி வேட்­பாளர் என்ற நிலை­யி­லேயே சிறு­பான்­மை­யினர் மீது இவ்­வாறு வெறுப்பு கொண்­டி­ருப்­பா­ரானால் அவர் ஜனா­தி­ப­தி­யாக தெரி­வாகி இருந்தால் எம்­ம­வர்­களின் நிலை என்­ன­வாகி இருக்­கு­மென்று சிந்­திக்க வேண்டி இருக்­கின்­றது. சிறு­பான்­மை­யினர் அடங்கி வாழ வேண்டும் என்றால் அவர்கள் தம் பிரச்­சி­னை­க­ளுக்­காக குரல் எழுப்பக் கூடாதா?

 

ஜே.ஆர்.ஜெய­வர்த்­தனா
இலங்கை அர­சியல் வர­லாற்றில் ஜே.ஆர். ெஜய­வர்த்­தனா ஒரு முக்­கிய கதா­பாத்­தி­ர­மாக விளங்­கு­கின்றார். தந்­திரம் மிக்க மூளையைக் கொண்­டவர் என்று அவர் மேலும் பேசப்­ப­டு­கின்றார். இலங்­கையில் திறந்த பொரு­ளா­தார முறை­மையை அறி­மு­கப்­ப­டுத்த வேண்டும் என்று ஐக்­கிய தேசிய கட்சி நீண்­ட­கா­ல­மாக எண்ணம் கொண்­டி­ருந்­தது. ஜே.ஆர்.ெஜய­­வர்­தனா இது குறித்து அதிக ஈடு­பாடு கொண்­டி­ருந்தார். சிங்­கப்பூர், தென்­கொ­ரியா போன்ற நாடு­களைப் போன்று இலங்­கை­யையும் உரு­வாக்க வேண்டும் என்­பது அவரின் எண்­ண­மாக இருந்­தது. 

 

1977ஆம் ஆண்டு தேர்­தலில் ஐ.தே.க. அமோக வெற்றி பெற்­றது. இந்த வெற்றி ஜே.ஆரின் எண்­ணத்­துக்கு உருக்­கொடுத்­தது. புதிய அர­சியல் திட்­டத்­தினை உரு­வாக்கும் பணியில் அவர் ஈடு­பட்டார். நிறை­வேற்று அதி­கா­ர­மு­டைய ஜனா­தி­பதி முறை­மைக்கு 1978 ஆம் ஆண்டு அர­சி­ய­ல­மைப்பு வித்­திட்­டது. மேலும் விகி­தா­சார தேர்தல் முறையும் அறி­மு­கப்­ப­டுத்­தப்­பட்­டது. பல்­வேறு வழி­க­ளிலும் சுயா­தீ­ன­மாக இயங்கக் கூடிய வலி­மை­யான அதி­கா­ரங்­களைக் கொண்ட ஜனா­தி­பதி அர­சாங்க முறைக்கு வித்­தி­டப்­பட்­டது. துரித பொரு­ளா­தார அபி­வி­ருத்­திக்கு பாரா­ளு­மன்­றத்­தினால் கட்டுப்­ப­டுத்­தப்­ப­டாத நிறை­வேற்று அதி­காரம் கொண்ட ஜனா­தி­பதி பதவி தேவை என்று பல­ராலும் கரு­தப்­பட்­ட­மை­யா­னது இப்­ப­த­வியின் உரு­வாக்­கத்­துக்கு உந்­து­சக்­தி­யா­னது.


ஜனா­தி­பதி இலங்கை அரசின் தலை­வ­ரா­கவும், அர­சாங்­கத்தின் தலை­வ­ரா­கவும், நிறை­வேற்றுத் துறையின் தலை­வ­ரா­கவும், ஆயுதம் தாங்­கிய முப்­ப­டை­களின் தலை­வ­ரா­கவும் விளங்­கு­கின்றார். அதி­கா­ரங்கள் பலவும் நிறை­வேற்று அதி­காரம் கொண்ட ஜனா­தி­ப­தி­யிடம் குவிந்து காணப்­ப­டு­கின்­றன. இலங்­கையின் நிறை­வேற்று அதி­கா­ர­மு­டைய ஜனா­தி­ப­தி­யாக ஜே.ஆர். விளங்­கினார். இவர் மலை­யக மக்கள் உள்­ளிட்ட சிறு­பான்மை மக்கள் குறித்து கொண்­டி­ருந்த நிலைப்­பா­டுகள் பல்­வேறு விமர்­ச­னங்­க­ளுக்கும் உள்­ளாகி இருக்­கின்­றன. 

 

இவர் நிறை­வேற்று அதி­காரம் கொண்ட ஜனா­தி­ப­தி­யாக இருந்து எந்­த­ளவு நாட்டு மக்­களின் நலன்­களைப் பேணினார். உரி­மை­களை வழங்­கினார்? என்று பர­வ­லா­கவே கேள்­விகள் மேலெ­ழுந்த வண்­ண­முள்­ளன. 1983 இல் இடம்­பெற்ற ஜூலை கல­வரம் எமது நாட்டை ஒரு உலுக்கு உலுக்கி இருந்­தது. இதனால் பலர் பாதிப்­புக்கு உள்­ளா­கினர். உயிர் மற்றும் உட­மை­களை இழந்­தி­ருந்­தனர். இந்த கல­வ­ரத்தின் போது ஜே.ஆர். நடந்து கொண்ட விதம் குறித்து விமர்­ச­னங்கள் அதி­க­முள்­ளன. இவரின் செயற்­பா­டுகள் தொடர்பில் கூறு­ப­வர்கள், உதவி செய்­யா­விட்­டாலும் உபத்­தி­ர­மா­வது செய்­யா­தி­ருந்­தி­ருக்­கலாம் என்று கூறு­வ­தையும் கேட்கக் கூடி­ய­தா­கவே உள்­ளது. 


ஜே.ஆர்.ெஜய­வர்­தனா தமி­ழர்கள் உரி­மைக்­கோஷம் எழுப்­பிய பல சந்­தர்ப்­பங்­களில் அதற்கு முட்­டுக்­கட்­டை­யாக இருந்­தி­ருக்­கின்றார். இத்­த­கைய ஒருவர் ஜனா­தி­ப­தி­யான நிலையில் மலை­யக மக்­களின் நலன்­க­ளுக்கு எந்­த­ளவு வலு­சேர்ப்பார் என்று சிந்­திக்க வேண்­டி­யுள்­ளது. 1987 இல் பண்­டா–­செல்வா உடன்­ப­டிக்­கையில் தமிழ் மக்­களின் நலன்­க­ருதி பல்­வேறு விட­யங்கள் உள்­ள­டக்­கப்­பட்­டி­ருந்­தன. 

 

தமி­ழையும் அரச கரும மொழி­யாக்­குதல், பிர­ஜா­வு­ரிமை சட்­டத்தில் திருத்­தங்­களை ஏற்­ப­டுத்­துதல், வட மாகா­ணத்­திற்கு ஒரு பிராந்­திய சபையும், கிழக்கு மாகா­ணத்­திற்கு ஒன்­றுக்கு மேற்­பட்ட பிராந்­திய சபை­களும் ஏற்­ப­டுத்­தக்­கூ­டிய சட்ட விதி­மு­றை­களை தயார்­ப­டுத்­துதல், பிராந்­திய சபை பிர­தே­சத்­திற்குள் மக்கள் குடி­யேற்­றி­ய­மை­க­ளுக்­காக காணி­களை பெற்­றுக்­கொ­டுத்தல் போன்ற விட­யங்கள் இதில் உள்­ள­டக்­கப்­பட்­டி­ருந்­தன. எனினும் ஜே.ஆர்.ெஜய­வர்­தனா மற்றும் பௌத்த பிக்­குகள் இதற்கு எதிர்ப்பு தெரி­வித்த நிலையில் உடன்­ப­டிக்கை கிழித்­தெ­றி­யப்­பட்­டது. 1985 இல் திம்பு பேச்­சு­வார்த்­தைகள் இடம்­பெற்­றன. தமிழ் மக்­களின் பாது­காப்பு மற்றும் உரி­மை­களை உறு­திப்­ப­டுத்தி அவர்­களை தேசிய இன­மாக ஏற்­றுக்­கொள்ளல், பாரம்­ப­ரிய தாய­கத்தை ஏற்­றுக்­கொள்ளல், தமிழ் மக்­களின் சுய­நிர்­ணய உரி­மையை ஏற்­றுக்­கொள்ளல், பிர­ஜா­வு­ரி­மையை ஏற்­றுக்­கொள்ளல், தமிழ் மக்­களின் ஜன­நா­யக உரி­மை­களை ஏற்­றுக்­கொள்ளல் போன்ற விட­யங்கள் தமிழ் தரப்­பினால் முன்­வைக்­கப்­பட்­டி­ருந்­தன.

எனினும் ஜே.ஆர்.ெஜய­வர்­தனா தலை­மை­யி­லான ஐக்­கிய தேசியக் கட்சி அர­சாங்கம் இதனை நிரா­க­ரித்­தி­ருந்­தது. இவ்­வா­றாக தமிழ் மக்­க­ளுக்கு உரி­மைகள் வழங்­கப்­ப­டு­வ­தனை கண்­டித்த ஜே.ஆர். மலை­யக மக்­களின் நலன்­கரு­தியும் காத்­தி­ர­மான நட­வ­டிக்­கை­களை மேற்­கொண்­டாரா? என்­பது கேள்­விக்­கு­ரிய ஒரு விட­ய­மே­யாகும். இதே­வேளை 1944 ஆம் ஆண்டில் ஜே.ஆர். சிங்­களம் சில வரு­டத்­துக்குள் அரச கரும மொழி­யாக்­கப்­பட வேண்டும் என்று தெரி­வித்து இன­வாத முகத்தை வெளிப்­ப­டுத்தி இருந்­ததும் இங்கு நோக்­கத்­தக்க ஒரு விட­ய­மாக உள்­ளது. இன­வாத சிந்­த­னை­யா­ளர்கள் நாட்டின் ஆட்­சி­யா­ளர்­க­ளா­கின்­ற­போது அவர்­களின் செயற்­பா­டுகள் விரி­சல்­களை உண்டு பண்­ணு­வ­தா­கவே அமையும்.


ஆர்.பிரே­ம­தாச
பிரே­ம­தாச ஜனா­தி­ப­தி­யாக பதவி வகித்த காலத்தில் மலை­யக மக்கள் தொடர்­பான அவ­ரது நட­வ­டிக்­கைகள் குறித்தும் திருப்தி கொள்­வ­தற்­கில்லை. மாற்­றாந்தாய் மனப்­பான்­மை­யு­ட­னேயே அவ­ரது செயற்­பா­டுகள் இடம்­பெற்று வந்­தன.  கண்­து­டைப்­புக்­காக அங்­கொன்றும் இங்­கொன்­று­மாக சிற்­சில மலை­யக அபி­வி­ருத்­திசார் நட­வ­டிக்­கைகள் இடம்­பெற்­றதே தவிர ஆக்­கபூர்­வ­மான நட­வ­டிக்­கைகள் இடம்­பெ­ற­வில்லை. கிராம எழுச்சி தொடர்பில் அவர் அர்ப்­ப­ணிப்­புடன் செயற்­பட்டார். எனினும் தோட்ட மக்­களின் நலன்­க­ருதி செயற்­பா­டுகள் குறை­வாக இருந்­தன. அவ­ரது வறுமை ஒழிப்பு நட­வ­டிக்­கை­களில் மலை­யக மக்கள் எதிர்­பார்த்த பலன் கிட்­ட­வில்லை.


இலங்­கையின் வீட­மைப்­புத்­திட்டம் இக்­கா­லத்தில் பிர­பல்யம் பெற்­றி­ருந்­தது. ஒரு இலட்சம் வீட­மைப்புத் திட்டம், பத்து இலட்சம் வீட­மைப்பு திட்டம் என்­றெல்லாம் இவர் ஏற்­ப­டுத்­தினார். 1987ஆம் ஆண்டு சர்­வ­தேச வீட­மைப்பு ஆண்­டாக பிர­க­ட­னப்­ப­டுத்­தப்­பட்­டது. கிராமப் பகு­தியில் இவர் வீட­மைப்பு நட­வ­டிக்­கை­களை மேற்­கொண்­ட­போதும் தோட்­டப்­புற வீட­மைப்பு குறித்து இவர் உரிய அக்­கறை காண்­பிக்­க­வில்லை. வீட­மைப்பில் சிங்­கள மக்­க­ளுக்கு தோள் கொடுத்­தாரே தவிர மலை­யக மக்­க­ளுக்கு உத­வ­வில்லை என்­பது வருந்­தத்­தக்க விட­ய­மாகும். இதே­வேளை. சந்­தி­ரிக்கா ஜனா­தி­ப­தி­யாக இருந்­த­போது தோட்ட மக்­களின் நலன்­க­ருதி வேலைத்­திட்­டங்கள் முன்­வைக்­கப்­பட்­டன. தோட்ட உட்­கட்­ட­மைப்பு விருத்­திக்கு அவர் உத­வி­யி­ருந்தார்.


வாக்­கு­று­திகள்
மஹிந்த ராஜபக் ஷவும் தோட்ட மக்­களின் அபி­வி­ருத்தி கருதி வாக்­கு­று­திகள் பல­வற்றை வழங்கி இருந்தார். தேர்தல் விஞ்­ஞா­ப­னத்தில் இவை இடம் பெற்­றி­ருந்­தன. மற்றும் வர­வு–­செ­லவு திட்ட முன்­மொ­ழி­வு­க­ளிலும் குறிப்­பி­டப்­பட்­டி­ருந்­தன. குறிப்­பாக கடந்த 2015ஆம் ஆண்டு தேர்தல் விஞ்­ஞா­பன வெளி­யீ­டான மஹிந்த சிந்­த­னையின் எதிர்­கால நோக்கில் தோட்ட மக்­களின் வீட்டுப் பிரச்­சினை குறித்து வலி­யு­றுத்­தப்­பட்­டி­ருந்­தது. பெருந்­தோட்ட மக்­களை வீட்­டு­ரி­மை­யுள்ள சமூ­க­மாக மாற்­றுதல் வேண்டும். இது என்­னு­டைய பிர­தான ஒரு இலக்­காகும். 

 

இதற்­கி­ணங்க 2015 ஆம் ஆண்­டா­கின்­ற­போது ஒவ்­வொரு பெருந்­தோட்ட ஊழி­ய­ரது குடும்­பமும் தற்­போது வசிக்­கின்ற லயன் வீடு­க­ளுக்கு பதி­லாக அடிப்­படை வச­தி­க­ளுடன் கூடிய புதிய வீடொன்­றிற்கு உரி­மை­யுள்ள குடும்­ப­மாக மாற்­றுவேன் என்று மஹிந்த தெரி­வித்­தி­ருந்தார். நிலை­மைகள் என்­ன­வா­கின என்­பது யாவரும் அறிந்த விடயம் தானே. 2014 ஆம் ஆண்டு மஹிந்­தவின் தேர்தல் விஞ்­ஞா­ப­னத்தில் தோட்­டப்­ப­கு­தியில் ஏழு பேர்ச்சர்ஸ் காணி, வீடு தொடர்­பாக குறிப்­பி­டப்­பட்­டி­ருந்­தது. ஐக்­கிய மக்கள் சுதந்­திர முன்­ன­ணியின் ஒன்­ப­தா­வது வரவு – செலவு திட்­டமும், தோட்ட மக்­களின் வீட­மைப்பு குறித்து முன்­மொ­ழிந்­தி­ருந்­தது. தோட்­டத்­துறை மக்­க­ளுக்­கான வீட்­டுத்­திட்­டத்தின் ஊடாக ஐம்­ப­தா­யிரம் வீடுகள் நிர்­மா­ணித்து கொடுக்­கப்­பட உள்­ள­துடன் இரண்டு வீதம் அற­வி­டப்­படும் தேச நிர்­மா­ண­வரி வங்­கித்­து­றை­யிலும் அற­வி­டப்­படும் என்று வலி­யு­றுத்­தப்­பட்­டி­ருந்­தது. எல்­லாமே பொய் வாக்­கு­று­திகள் என்­ப­தனை மலை­யக மக்கள் விளங்­கிக்­கொள்ள நீண்­ட­காலம் பிடிக்­க­வில்லை.


பிரச்­சி­னைகள்
பெருந்­தோட்ட தொழி­லா­ளர்­களின் பிரச்­சி­னைகள் நாளுக்கு நாள் அதி­க­ரித்துச் செல்­கின்­றன. அர­சியல், பொரு­ள­ாதார சமூ­கப்­பி­ரச்­சி­னைகள் பல காணப்­ப­டு­கின்­றன. கல்வி, வீட­மைப்பு, சுகா­தாரம், தொழில் வாய்ப்பு என்று பிரச்­சி­னைகள் ஒவ்­வொரு துறை­யிலும் மேலோங்கி வரு­கின்­றன. இந்த பிரச்­சி­னைகள் தொடர்பில் அர­சியல் தலை­மைகள் அறி­யா­ம­லில்லை. எனினும் இவற்றை தீர்த்து வைக்க உரிய நட­வ­டிக்­கை­களை மேற்­கொள்­ள­வில்லை. கடந்த பொதுத்­தேர்தல் காலத்தில் ரூபா 1000 சம்­பள உயர்­வினை தோட்டத் தொழி­லா­ளர்­க­ளுக்கு பெற்றுக் கொடுக்கப் போவ­தாக ஐக்­கிய தேசியக் கட்சி உறு­தி­ய­ளித்­தி­ருந்­தது. சம்­பள உயர்வு விடயம் முக்­கிய கருப்­பொ­ரு­ளாகி இருந்­தது. எனினும் தேர்தல் வெற்­றியின் பின்னர் தோட்டத் தொழி­லா­ளர்­களை ஆட்­சி­யா­ளர்கள் மறந்து விட்­டார்கள். இந்­நி­லையில்  எமது நாட்டில் விரைவில் முக்­கிய தேர்­தல்கள் இடம்­பெ­ற­வுள்­ளன. இத்­தேர்­த­லுக்­காக அர­சியல் கட்­சிகள் தம்மை தயார்­ப­டுத்தி வரு­கின்­றன. இத­னி­டையே தோட்டத் தொழி­லா­ளர்கள் குறித்த கரி­ச­னை­யையும் அர­சியல் கட்­சிகள் வெளி­ப்ப­டுத்தி வரு­கின்­றன. இம்­மக்­களின் வாக்­கு­களை பெற்றுக் கொள்­வதில் குறி­யாக உள்ள கட்­சிகள் பல்வேறு உபாயங்களையும் பின்பற்றி வருகின்றன. 


தலைவர்களின் கரிசனை 
தோட்டத் தொழிலாளர்களின் பின்தங்கிய வாழ்க்கை நிலைமைகள் குறித்து தலைவர்கள் இப்போது பேசி வருகின்றனர். ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன மலையகத்தில் இடம்பெற்ற நிகழ்வு ஒன்றில் மலையகத்தவர்களின் துன்ப நிலைமையை வெளிப்படுத்தி இருக்கின்றார்.தோட்டத்தொழிலாளர்கள் செந்நீரிலும் கண்ணீரிலும் காலத்தை கடத்துகின்றனர். அவர்கள் எந்தவொரு சுகபோகத்தையும்  அனுபவிக்கவில்லை. அவர்களது உழைப்பில் ஏனைய தரப்பினரே அனைத்து சுகபோகத்தையும் அனுபவிக்கின்றனர். 

 

என்று ஜனாதிபதி தெரிவித்திருக்கின்றார். முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக் ஷவும் கரிசனையுடன் கருத்துக்களை  வெளிப்படுத்தி இருக்கிறார். நான்கரை ஆண்டுகளாக அரசாங்கம் தோட்டத் தொழிலாளர்களை ஏமாற்றியுள்ளது. அடிப்படை சம்பளத்தை ஆயிரம் ரூபாவாக உயர்த்துவதாகக் கூறி இந்த அரசாங்கம் இறுதிவரை அதற்கான நடவடிக்கையை எடுக்கவில்லை. எனினும் இந்த அரசாங்கம் ஆட்சியை கைப்பற்ற தோட்டத் தொழிலாளர்களின் வாக்குகளை தன்வசப்படுத்தியபோதும் கூட அவர்களுக்கான எந்த நன்மைகளையும் செய்யவில்லை. இந்த அரசாங்கத்தில் தோட்டத்தொழிலாளர்களின் தலைமைகள் அங்கம் வகித்து வருகின்றனர் என்பதும் கவலைக்கிடமான விடயமாகவே உள்ளது என்று மஹிந்த தெரிவித்திருக்கிறார்.

மலையக மக்களின் நிலைமைகள் குறித்த தலைவர்களின் கருத்துகள் நியாயமானதே என்றபோதும் இந்நிலைமையை மாற்றியமைக்கக் கூடிய வல்லமையும் இவர்களுக்கே இருக்கிறது என்பதை இவர்கள் மறந்துபோய் இருக்கிறார்கள். தமது ஆட்சிக்காலத்தில் மலையக மக்களின் நலன் கருதி விசேட திட்டங்களை அமுல்படுத்தி செயற்பாடுகளை மேற்கொண்டிருந்தால் இம்மக்களின் வாழ்க்கை வளம்பெற்றிருக்கும். எனினும் இவர்கள் ஆட்சிக்காலத்தில் அபிவிருத்திக்காக காத்திரமான பங்காற்றினார்களா என்று சிந்திக்க வேண்டி இருந்தது. தேர்தல் அண்மித்திருப்பதனால் தலைவர்களுக்கு இப்போது ஞானம் பிறந்திருக்கிறது. மலையக மக்களின் வாக்குகளைப் பெற்று வெற்றியீட்டிய பின் மீண்டும் வேதாளம் முருங்கை மரம் ஏறிய கதையாகிவிடும். கடந்த கால வரலாறுகள் இதனை நிரூபித்துள்ளன. மலையகத்தவரின் அபிவிருத்திக்கு அர்ப்பணிப்புடன் செயற்பட ஆட்சியாளர்கள் முன்வரவேண்டும்.

 

 - துரை­சாமி நட­ராஜா

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

மத்திய கிழக்கு புவிசார் அரசியலில் ஈரானின்...

2024-04-19 18:33:36
news-image

எல்லா காலத்துக்கும் மிகவும் முக்கியமான ஒரு...

2024-04-19 14:59:40
news-image

கச்சதீவை வைத்து அரசியல் செய்யாதீர்கள்

2024-04-19 14:37:29
news-image

இந்தியப் பெருங்கடலில் 'சீனா - குவாட்'...

2024-04-18 10:36:33
news-image

'ஆரம்பிக்கலாமா?' : தமிழை கையிலெடுத்துள்ள பிரதமர்...

2024-04-17 19:36:36
news-image

சர்வதேச நீதிமன்றத்தில் ஆர்மேனியா - அஸர்பைஜான்...

2024-04-17 19:37:33
news-image

சிங்களவர்களாக ஒருங்கிணையும் இந்தியத் தமிழர் –...

2024-04-17 18:00:59
news-image

பிரித்தானியாவில் ஆளுங்கட்சி தோல்வி? சொந்த தொகுதியில்...

2024-04-17 11:04:13
news-image

பரந்த கோட்பாடுகளில் இருந்து நடைமுறையில் பிரச்சினைகள்...

2024-04-16 16:00:03
news-image

ஈரானின் அதிரடி தாக்குதல் ; இஸ்ரேல்...

2024-04-16 10:56:59
news-image

ஜனாதிபதி தேர்தலில் அரசியல் கணக்குகள்

2024-04-16 01:48:16
news-image

ஜனநாயக மக்கள் காங்கிரஸ் தேசிய கட்சியாக...

2024-04-15 19:01:13