24 இலங்கை மாணவர்களுக்கு சீனா புலமைப்பரிசில்

Published By: R. Kalaichelvan

10 Aug, 2019 | 09:31 AM
image

கொழும்பிலுள்ள சீனத்தூதரகத்தில் கடந்த வியாழக்கிழமை நடைபெற்ற வைபவமொன்றில் வைத்து இலங்கைக்கான சீனத்தூதுவர் ஷென் சியூ யுவான் 24 இலங்கை மாணவர்களுக்குப் புலமைப் பரிசில்களை வழங்கிவைத்தார்.

சீனப் புலமைப்பரிசிலைப் பெற்றிருக்கும் இந்த மாணவர்களில் 10 பேர் இளமாணிப் பட்டப்படிப்பிற்கும், 14 பேர் மருத்துவம், கட்டடக்கலை, மொழிபெயர்ப்பு, இலத்திரனியல் வர்த்தகம், உளவியல், உணவு விஞ்ஞானம் மற்றும் பொறியியல் துறைகளில் கலாநிதி

பட்டப்படிப்பிற்கும் தெரிவாகியிருக்கின்றார்கள். இவர்கள் செப்டெம்பர் மாதம்சீனாவிற்குத் தங்களது உயர்கல்வியைத் தொடர்வதற்காகச் செல்லவுள்ளதாகச் சீனத்தூதரகம் அறிவித்தது.

இந்த மாணவர்கள் கல்வி பயிலும் வருடங்கள் முழுவதும் கல்வி, தங்குமிட வசதி, வாழ்க்கைச்செலவுக் கொடுப்பனவு, மருத்துவக் காப்புறுதி எல்லாவற்றையும் உள்ளடக்கியதாக 25 இலட்சம் ரூபா வரை வழங்கப்படவுள்ளது.

இந் நிகழ்வில் உயர்கல்வி அமைச்சின் மேலதிக செயலாளர் மாதவ தேவசுரேந்திரவும், வெளிவிவகார அமைச்சின் மேலதிக செயலாளர் பெரியசாமிப்பிள்ளை செல்வராஜும், புலமைப்பரிசில் பெற்ற மாணவர்களின் குடும்பத்தவரும் கலந்துகொண்டமை குறிப்பிடத்தக்கது.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

சிறுமியின் மரணத்திற்கு நீதி கோரி தரணிக்குள...

2024-04-19 20:36:49
news-image

சர்வோதய ஸ்தாபகர் ஏ.டி. ஆரியரத்னவின் பூதவுடலுக்கு...

2024-04-19 19:21:27
news-image

பாலித தெவரப்பெருமவின் பூதவுடலுக்கு ஜனாதிபதி இறுதி...

2024-04-19 18:46:10
news-image

கோழி இறைச்சியின் விலை குறைப்பு!

2024-04-19 18:33:17
news-image

பொலிஸாரிடமிருந்து தப்பிச் செல்ல முயன்ற நபர்...

2024-04-19 18:10:41
news-image

உயிர்த்த ஞாயிறு தாக்குதல்கள் குறித்து சர்வதேச...

2024-04-19 17:53:19
news-image

மெய்வல்லுநர் ஜாம்பவான் நாகலிங்கம் எதிர்வீரசிங்கம் காலமானார்

2024-04-19 17:53:07
news-image

கனடாவில் 6 இலங்கையர்களைக் கொலை செய்த...

2024-04-19 17:53:58
news-image

தெவுந்தர கடற்கரையில் கைப்பற்றப்பட்ட போதைப்பொருட்களை பரிசோதனைக்கு...

2024-04-19 17:15:25
news-image

நுவரெலியாவில் தவறான முடிவெடுத்து உயிரை மாய்த்த...

2024-04-19 16:14:46
news-image

சுற்றுலாப் பயணிகள் அதிகம் வருகை தரும்...

2024-04-19 16:15:27
news-image

மே தின கூட்டத்தில் விவசாயிகள், தொழிலாளர்களுக்கு...

2024-04-19 16:10:31