ஐக்கிய தேசியக் கட்சியின் ஜனாதிபதி வேட்பாளர், கூட்டணி குறித்து சஜித் அதிரடிக் கருத்து

Published By: Vishnu

09 Aug, 2019 | 04:39 PM
image

(எம்.மனோசித்ரா)

ஐக்கிய தேசிய கட்சியின் பாராளுமன்ற உறுப்பினர்கள் பெரும்பான்மையினரின் விருப்பத்துக்கு அமைய கூட்டணி அமைப்பதற்கு முன்னர் ஜனாதிபதி வேட்பாளர் யார் என்பதை அறிவிக்க வேண்டும் என்று தெரிவித்துள்ள அமைச்சர் சஜித் பிரேமதாச , வேட்பாளர் யார் என்பதை அறிவிக்காது கூட்டணி அமைப்பது சாத்தியமற்றது என்றும் குறிப்பிட்டுள்ளார். 

பிரதமர் ரணில் விக்கிரமசிங்கவுக்கும், சஜித்துக்கும் இடையில் கூட்டணி அமைப்பது தொடர்பில் இணக்கப்பாடு எட்டப்பட்டுள்ளதாக வெளியாகியுள்ள செய்திகள் தொடர்பில் அவர் வெளியிட்டுள்ள விஷேட அறிக்கையிலேயே இவ்வாறு தெரிவித்துள்ளார். 

அந்த அறிக்கையில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது : 

ஜனாதிபதித் தேர்தலை மையப்படுத்திய ஐக்கிய தேசிய கட்சியின் தலைமையிலான ஜனநாயக தேசிய முன்னணியை உருவாக்க வேண்டும் என்று எனக்கும் பிரதமர் ரணில்  விக்கிரமசிங்கவுக்கும் இடையில் இணக்கப்பாடு ஏற்பட்டுள்ளதாக செய்திகள் வெளியாகியுள்ளன. 

அந்த செய்தி 100 வீதம் உண்மையானது. ஆனால் ஐக்கிய தேசிய கட்சியின் பாராளுமன்ற உறுப்பினர்கள் பெரும்பான்மையினரின் விருப்பத்துக்கு அமைய கூட்டணி அமைப்பதற்கு முன்னர் ஜனாதிபதி வேட்பாளர் யார் என்பதை அறிவிக்க வேண்டும். இதனையே ஜனநாயக தேசிய முன்னணியின் பங்காளி கட்சிகளும் அதனையே கோருகின்றன. எமது தனிப்பட்ட கருத்தும் அதுவாகவே இருக்கிறது. அவ்வாறு செய்யதால் மாத்திரமே நாம் உத்தேசித்துள்ள அரசியல் கூட்டணி உதயமாகும். 

அதே போன்று வேட்பாளர் யார் என்பதை அறிவித்ததன் பின்னர் பல கட்சிகள் முக்கிய அரசியல்வாதிகள் என பலரும் எம்முடன் இணைந்து வெற்றிக்கான கூட்டணியொன்று அமைவது உருதியானதாகும். போலியான பிரசாரங்களை ஊடகங்களுக்கு விடுக்காது ஜனாதிபதி வேட்பாளர் யார் என்பதை வெளிப்படையாகக் கூறிவிட்டு கூட்டணிக்கான ஒப்பந்த்தைத முன்னெடுக்கும் பணிகளே சிறந்ததாகும் என தெரிவித்தார்.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

ஈஸ்டர் தாக்குதல் சம்பவம் தொடர்பில் மைத்திரிக்கு...

2024-03-28 19:46:59
news-image

தடுப்பூசி போடப்பட்ட மாணவ குழுவில் 10...

2024-03-28 18:55:29
news-image

நன்னடத்தை பாடசாலை மேற்பார்வையாளர் பெண்ணிற்கு மீண்டும்...

2024-03-28 16:58:06
news-image

பாராளுமன்றம் ஏப்ரல் 01ஆம் திகதி மற்றும்...

2024-03-28 16:28:48
news-image

பெருந்தோட்ட கம்பனிகள் சமர்ப்பித்த முன்மொழிவை நிராகரித்த...

2024-03-28 16:19:07
news-image

கெஹெலிய ரம்புக்வெல்லவிற்கு மீண்டும் விளக்கமறியல்

2024-03-28 16:14:07
news-image

கொழும்பு கிராண்ட்பாஸ் பகுதியில் தீ பரவல்

2024-03-28 15:52:31
news-image

இன்றைய நாணய மாற்று விகிதம் 

2024-03-28 16:02:37
news-image

மீண்டும் அதிகரித்த தங்கத்தின் விலை!

2024-03-28 14:48:17
news-image

மக்களின் துயரங்களுக்கு தீர்வு காண நாட்டின்...

2024-03-28 14:26:10
news-image

இருவரைச் சுட்டுக் கொன்ற சம்பத் சமிந்தவின்...

2024-03-28 16:00:53
news-image

மாதமொன்றுக்கு 6 இலட்சம் கோழி முட்டைகள்...

2024-03-28 13:56:01