4 ஆண்டுகள் தடை உறுதி! பதவி விலகினார் ஐரோப்பிய கால்பந்து சங்கத் தலைவர்

Published By: Raam

11 May, 2016 | 12:35 PM
image

தடையை எதிர்த்து தொடர்ந்த வழக்கில் 4 ஆண்­டுகள் தடை உறுதி செய்­யப்­பட்­டதை தொடர்ந்து ஐரோப்­பிய கால்­பந்து சங்க தலைவர் மைக்கேல் பிளாட்­டினி தனது பத­வியை ராஜி­னாமா செய்­துள்ளார்.

கடந்த ஆண்டு ஜூன் மாதத்தில் சர்­வ­தேச கால்பந்து சங்க (பிபா) தலைவர் தேர்­தலில் செப் பிளாட்டர் வெற்றி பெற்­றதும் அவர் உள்­ளிட்ட நிர்­வா­கிகள் மீது பல்­வேறு நிதி முறை­கேடு புகார்கள் எழுந்­தன. செப் பிளாட்டர் தனது பதவிக் காலத்தில் துணைத்­த­லை­வ­ராக இருந்த மைக்கேல் பிளாட்­டி­னிக்கு ஆலோ­ச­க­ராக செயல்­பட்­ட­தற்­காக கணக்கில் காட்­டாமல்13 கோடி ரூபா வழங்­கி­யது பெரும் சர்ச்­சை­யாக வெடித்­தது.

இது தொடர்­பாக விசா­ரணை நடத்­திய சர்­வ­தேச கால்­பந்து சங்க நன்­ன­டத் தை குழு பிபா தலைவர் செப் பிளாட்டர், பிபா துணைத் தலை­வரும், ஐரோப்­பிய கால்­பந்து சங்க தலை­வ­ரு­மான மைக்கேல் பிளாட்­டினி ஆகி­யோரை இடை­நீக்கம் செய்­த­துடன், இரு­வ­ருக்கும் தலா 8 ஆண்டு காலம் தடை­யுடன் அப­ரா­தமும் விதித்­தது. இந்த நட­வ­டிக்கை கடந்த ஆண்டு அக்­டோபர் மாதத்தில் எடுக்­கப்­பட்­டது.

பிபா மேன்­மு­றை­யீட்டுக் குழு இந்த தண்­ட­னையை 6 ஆண்­டாக குறைத்­தது. 60 இலட்­சம் ரூபாவை அப­ரா­த­மாக செலுத்த உத்­த­ர­விட்­டது.

தன் மீதான தடையை எதிர்த்து செப் பிளாட்டர், மைக்கேல் பிளாட்­டினி ஆகியோர் சுவிட்­ஸர்­லாந்தில் உள்ள சர்­வ­தேச விளை­யாட்டு தீர்ப்­பா­யத்தில் மேல்­மு­றை­யீடு செய்­தனர். ஐரோப்­பிய கால்­பந்து சங்க தலைவர் மைக்கேல் பிளாட்­டி­னியின் மனு மீதான விசா­ரணை முடிந்து நேற்று தீர்ப்­ப­ளிக்­கப்­பட்­டது.

மைக்கேல் பிளாட்­டினி நடத்தை விதி­மு­றையை மீறி செயற்­பட்­டத்தை சர்­வ­தேச விளை­யாட்டு தீர்ப்­பாயம் உறுதி செய்­த­துடன், மைக்கேல் பிளாட்­டி­னிக்கு விதிக்­கப்­பட்ட 6 ஆண்டு கால தடையை 4 ஆண்­டாக குறைத்­துள்­ளது.

தண்­டனை உறுதி செய்­யப்­பட்­டதை தொடர்ந்து மைக்கேல் பிளாட்­டினி ஐரோப்­பிய கால்­பந்து சங்க தலைவர் பத­வியை ராஜி­னாமா செய்துள்ளார். ஐரோப்பிய கால்பந்து சம்­பி­யன்ஷிப் போட்டி பிரான்ஸ் நாட்டில் எதிர்வரும் ஜூன் மாதம் தொடங்க இருக்கும் நிலையில் மைக்கேல் பிளாட்டினி தலைவர் பதவியில் இருந்து விலகி இருக்கிறார்.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

உலகத் தொடர் ஓட்டத்துக்கான இலங்கை அணி...

2024-04-19 15:45:07
news-image

ஐக்கிய அரபு இராச்சிய க்ரோன் ப்றீயில் ...

2024-04-19 15:38:26
news-image

எட்டியாந்தோட்டை புனித மரியாள் பழைய மாணவர்களின்...

2024-04-19 09:45:10
news-image

ஷஷாங்க், அஷுட்டோஷ் அதிரடியால் திகிலடைந்த மும்பை...

2024-04-19 06:04:02
news-image

ஒலிம்பிக்கிலிருந்து அவுஸ்திரேலிய குத்துச்சண்டை பயிற்றுநர் வாபஸ்

2024-04-18 16:16:23
news-image

ஒலிம்பிக் வாய்ப்புக்கான உலகக்கிண்ண பளுதூக்கல் போட்டியில்...

2024-04-18 14:49:11
news-image

வுல்வார்டின் சதத்தை சமரியின் சதம் விஞ்சியதன்...

2024-04-18 10:16:00
news-image

22 வயதுக்குட்பட்ட ஆசிய குத்துச்சண்டையில் இலங்கையின்...

2024-04-18 00:00:57
news-image

குஜராத்தை குறைந்த எண்ணிக்கைக்கு சுருட்டி வெற்றிபெற்ற...

2024-04-17 23:52:38
news-image

ஆண்களுக்கான மெய்வல்லுநர் போட்டிகளில் மிகக் பழைமையான...

2024-04-17 17:42:41
news-image

நினைவிலிருந்து நீங்காத மூத்த கால்பந்தாட்ட வீரர்கள்...

2024-04-17 14:38:02
news-image

பெய்ஜிங் அரை மரதனில் சீன வீரருக்கு...

2024-04-17 12:12:35