இலங்கை கிரிக்கெட் நிறுவனத்துக்கு 7 நாள் அவகாசம்

Published By: Priyatharshan

09 Aug, 2019 | 01:10 PM
image

(எம்.எம்.சில்வெஸ்டர்)

கணக்காய்வாளர் திணைக்களத்தினால் தன்னிடம் சமர்ப்பிக்கப்பட்ட சுமார் 2000 பக்கங்களைக் கொண்ட ஸ்ரீ லங்கா கிரிக்கெட் சபையின் கணக்காய்வு மதிப்பீட்டு அறிக்கையை ஸ்ரீ லங்கா கிரிக்கெட் சபையின் கவனத்துக்கு அனுப்பி வைத்ததாகவும், அந்த அறிக்கை தொடர்பாக ஸ்ரீ லங்கா கிரிக்கெட் நிறுவனம் ஆராய்ந்து பார்த்து, பதில் அளிப்பதற்கு 7 நாள் கால அவகாசத்தை கணக்காய்வு திணைக்களம் வழங்கியுள்ளதாகவும் விளையாட்டுத்துறை அமைச்சர் ஹரீன் பெர்னாண்டோ தெரிவித்தார்.

பத்தரமுல்லையிலுள்ள வெளிநாட்டு வேலைவாய்ப்பு அமைச்சில் நேற்று நடைபெற்ற ஊடக சந்திப்பின்போதே அவர் இதனை தெரிவித்தார்.

இதன்போது அமைச்சர் மேலும் கூறுகையில்,

“ ஸ்ரீ லங்கா நிதி தொடர்பாக ஆராய்ந்து கணக்காய்வு அறிக்கை ஒன்றை சமர்ப்பிக்குமாறு கடந்த ஜனவரி 28 ஆம் திகதியன்று கோரியிருந்தேன். இதன்படி 6 விடயங்களை மையப்படுத்தி கணக்காய்வாளர் திணைக்களத்தினால் சுமார் 2000 பக்கங்களைக் கொண்ட கணக்காய்வு மதிப்பீட்டு அறிக்கை ஒன்று எனக்கு வழங்கப்பட்டது.

இந்த மதிப்பீட்டு அறிக்கையை ஸ்ரீ லங்கா கிரிக்கெட் நிறவனத்துக்கு அனுப்பியுள்ளதுடன், அது குறித்து ஆராய்ந்து பார்ப்பதற்கு கணக்காய்வு திணைக்களத்தினால் 7 நாள் கால அவகாசம் ஸ்ரீ லங்கா கிரிக்கெட் நிறுவனத்துக்கு வழங்கப்பட்டுள்ளது.

இந்த கணக்காய்வு மதிப்பீட்டு அறிக்கை 6 விடங்களை மையப்படுத்தி ஆராயப்பட்டுள்ளதுடன், இந்த அறிக்கை குறித்த இறுதி கணக்காய்வு அறிக்கை 14 நாட்களில் கணக்காய்வு திணைக்களத்தினால் சமர்ப்பிக்கப்படும் என கணக்காய்வாளர் திணைக்களம் அறிவித்துள்ளது” என்றார்.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

உலகத் தொடர் ஓட்டத்துக்கான இலங்கை அணி...

2024-04-19 15:45:07
news-image

ஐக்கிய அரபு இராச்சிய க்ரோன் ப்றீயில் ...

2024-04-19 15:38:26
news-image

எட்டியாந்தோட்டை புனித மரியாள் பழைய மாணவர்களின்...

2024-04-19 09:45:10
news-image

ஷஷாங்க், அஷுட்டோஷ் அதிரடியால் திகிலடைந்த மும்பை...

2024-04-19 06:04:02
news-image

ஒலிம்பிக்கிலிருந்து அவுஸ்திரேலிய குத்துச்சண்டை பயிற்றுநர் வாபஸ்

2024-04-18 16:16:23
news-image

ஒலிம்பிக் வாய்ப்புக்கான உலகக்கிண்ண பளுதூக்கல் போட்டியில்...

2024-04-18 14:49:11
news-image

வுல்வார்டின் சதத்தை சமரியின் சதம் விஞ்சியதன்...

2024-04-18 10:16:00
news-image

22 வயதுக்குட்பட்ட ஆசிய குத்துச்சண்டையில் இலங்கையின்...

2024-04-18 00:00:57
news-image

குஜராத்தை குறைந்த எண்ணிக்கைக்கு சுருட்டி வெற்றிபெற்ற...

2024-04-17 23:52:38
news-image

ஆண்களுக்கான மெய்வல்லுநர் போட்டிகளில் மிகக் பழைமையான...

2024-04-17 17:42:41
news-image

நினைவிலிருந்து நீங்காத மூத்த கால்பந்தாட்ட வீரர்கள்...

2024-04-17 14:38:02
news-image

பெய்ஜிங் அரை மரதனில் சீன வீரருக்கு...

2024-04-17 12:12:35