தற்­போ­தைய அரசு சர்­வ­தே­சத்­துடன் இணைந்தே என்னை தோற்­க­டித்­தது - மஹிந்த

Published By: Daya

09 Aug, 2019 | 11:17 AM
image

 (எம்.மனோ­சித்ரா)

சர்­வ­தேச சக்­தி­க­ளுடன் ஒன்­றி­ணைந்து 2015ஆம் ஆண்டு என்னை தோல்­வி­யடையச் செய்த தற்­போ­தைய அர­சாங்கம் நாட்­டையும் நாட்டு மக்­களின் பாது­காப்­பையும் கேள்­விக்­கு­றி­யாக்­கி­விட்­டது என்று  எதிர்க்­கட்சி தலைவர் மஹிந்த ராஜ­பக்ஷ தெரி­வித்தார். 

உயிர்த்த ஞாயிறு தினத்தன்று இடம் பெற்ற தாக்­குதல் தொடர்பில் சுயா­தீன விசா­ரணை ஒன்றை நடத்­து­வ­தற்­கான கோரிக்­கை­க­ளுக்கு முன்­னு­ரிமை வழங்­கப்­பட வேண்டும் என்றும்  அவர் குறிப்­பிட்டார். 

மொரட்­டுவை மாந­கர சபையின் புதிய கட்­டட தொகு­தியை புதன்­கி­ழமை திறந்து வைத்து உரை­யாற்­று­கை­யி­லேயே அவர் மேற்­கண்­ட­வாறு தெரி­வித்தார். 

உயிர்த்த ஞாயிறு தினத்தன்று இடம்பெற்ற தாக்­குதல் தொடர்பில் சுயா­தீ­ன­மான விசா­ரணை வேண்டும் என்று பேராயர் வேண்­டுகோள் விடுக்­கின்றார். 

அதனை ஏற்­றுக்­கொண்டு சுயா­தீ­ன­மான விசா­ர­ணைகள் முன்­னெ­டுக்­கப்­பட்டு தாக்­கு­த­லுடன் தொடர்­பு­டைய உண்­மை­யான குற்­ற­வா­ளிகள் அடை­யாளம் காணப்­படவேண்டும் என்­ப­துடன் சட்­டத்தின் முன் நிறுத்­தப்­படவேண்டும். 

பொது எதி­ர­ணியை பிர­தி­நி­தித்­து­வப்­ப­டுத்தும் பாரா­ளு­மன்ற உறுப்­பி­னர்கள், உள்­ளூராட்சி மன்ற உறுப்­பி­னர்கள் மற்றும் தலை­வர்கள் உயிர்த்த ஞாயிறு தின தாக்­குதல் குறித்து சுயா­தீன விசா­ர­ணையை வலி­யு­றுத்தி ஜனா­தி­ப­தி­யையும் பிர­த­ம­ரையும் சந்­தித்து கோரிக்­கை­ விட தீர்­மா­னித்­துள்­ளனர். 

அதே­போன்று தாக்­கு­தலில் உயி­ரி­ழந்த மற்றும் காய­ம­டைந்­த­வர்­க­ளுக்கு நஷ்­ட­ஈ­டுகள் வழங்­கப்­படவேண்டும்.  நாட்டில் 30 ஆண்டு கால யுத்­தத்தை நிறைவு செய்து அபி­வி­ருத்­தியை முன்­னெ­டுத்தோம். 

ஆனால் வீழ்ச்­சி­ய­டைந்த பொரு­ளா­தா­ரத்தை கைய­ளித்­த­தாக தற்­போ­தைய ஆட்­சி­யா­ளர்கள் கூறு­கி­றார்கள். தற்­போ­தைய ஆட்சி தொடர்­பாக  மத்­திய வங்கி அறிக்­கை­யினை கவ­னத்தில் கொண்டால் உண்மை வெளிப்­படும். 

நாட்டு மக்­களால் வாழ முடி­யாத நிலை­மையே ஏற்­பட்­டுள்­ளது. இந்­நி­லையில் ஜனா­தி­பதித் தேர்தல் குறித்து பேசு­கின்­றனர். 

நல்­லாட்­சியில் சிறந்­ததோர் ஜனநா­ய­கத்தை வழங்­கு­வ­தாக உறு­தி­ய­ளித்­தனர். ஆனால் மாகா­ண­சபைத் தேர்­தலை நடத்­தாதுள்­ளனர். உள்­ளூ­ராட்­சி­மன்ற தேர்­தலை பெற்­றுக்­கொள்­வ­தற்­காக இரண்­டரை வருட காலம் போராட வேண்­டிய நிலைமை ஏற்­பட்­டுள்­ளது. அந்த தேர்தல் முடி­வு­களைக் கண்டு தேர்­தல்­களை ஒத்­தி­வைக்­கவே இந்த அர­சாங்கம் முயற்­சிக்­கின்­றது. எமது ஆட்சி காலத்தில் எவ்­வி­த­மான அச்­சமும் இன்றி தேர்­தல்­களை நடத்­தினோம். போரின் பின்னர் நாட்டின் பொரு­ள­தா­ரத்தை மேம்­ப­டுத்­தினோம். 

2015 ஆம் ஆண்டு போலி பிர­சா­ரங்­களை முன்­னெ­டுத்து சர்­வ­தேசம் மற்றும் அரச சார்­பற்ற நிறு­வ­னங்­க­ளுடன் இணைந்து எம்மை தோல்­வி­யடையச் செய்­தனர். 

இதனை தற்­போது மக்கள் உணர்ந்­துள்­ளனர். தற்­போ­தைய அர­சாங்கம் நாட்­டுக்­காக ஒன்றும் செய்­த­தில்லை. கல்வி, சுகா­தாரம் என அனைத்தும் வீழ்ச்சி கண்­டுள்­ளன. ஐக்­கிய தேசிய கட்­சிக்குள் ஜனா­தி­பதி வேட்­பாளர் தொடர்பில் போர் வெடித்­துள்­ளது. நாடு பூரா­கவும் சுவ­ரொட்­டி­களை ஒட்­டு­கின்­றனர். பத்­தி­ரி­கை­களில் விளம்­ப­ரங்­களைச் செய்­கின்­றனர். இவை அனைத்தும் மக்கள் நிதி­யாகும். ஆகவே மாற்றம் ஒன்று அவ­சி­ய­மாகும். உயிர்த்த ஞாயிறு தினத்தன்று இடம்பெற்ற தாக்­கு­தலின் பின்னர் நாட்டு மக்­க­ளுக்கு பாது­காப்­பற்ற சூழல் ஏற்­பட்­டுள்­ளது. அச்­ச­மின்றி வாழக்­கூ­டிய சூழல் இல்­லா­தொ­ழிக்­கப்­பட்­டுள்­ளது. 

கத்தோலிக்கர்களுக்கு தேவாலயங்களுக்கு செல்ல முடியவில்லை. பௌத்தர்களுக்கு விகாரைகளுக்கு செல்ல முடியவில்லை. இந்து மக்களுக்கு கோவில்களுக்கு செல்ல முடியவில்லை. இஸ்லாம் மக்களுக்கு பள்ளிவாசல்களுக்கு செல்ல முடிய வில்லை.  ஆகவே அச்சமற்ற ஒரு சூழல் நாட்டில் மீண்டும் உருவாக்கப்படவேண்டும் என்று மஹிந்த ராஜபக்ஷ தெரிவித்தார்.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

பாராளுமன்றம் ஏப்ரல் 01ஆம் திகதி மற்றும்...

2024-03-28 16:28:48
news-image

பெருந்தோட்ட கம்பனிகள் சமர்ப்பித்த முன்மொழிவை நிராகரித்த...

2024-03-28 16:19:07
news-image

கெஹெலிய ரம்புக்வெல்லவிற்கு மீண்டும் விளக்கமறியல்

2024-03-28 16:14:07
news-image

கொழும்பு கிராண்ட்பாஸ் பகுதியில் தீ பரவல்

2024-03-28 15:52:31
news-image

இன்றைய நாணய மாற்று விகிதம் 

2024-03-28 16:02:37
news-image

மீண்டும் அதிகரித்த தங்கத்தின் விலை!

2024-03-28 14:48:17
news-image

மக்களின் துயரங்களுக்கு தீர்வு காண நாட்டின்...

2024-03-28 14:26:10
news-image

இருவரைச் சுட்டுக் கொன்ற சம்பத் சமிந்தவின்...

2024-03-28 16:00:53
news-image

மாதமொன்றுக்கு 6 இலட்சம் கோழி முட்டைகள்...

2024-03-28 13:56:01
news-image

கத்தரிக்கோலால் தாக்கப்பட்டு ஒருவர் கொலை ;...

2024-03-28 12:03:22
news-image

ஆபாசப் படங்கள், நிர்வாணப் படங்கள் தொடர்பில்...

2024-03-28 12:07:47
news-image

கேப்பாப்புலவு மக்களின் நில விடுவிப்புக்கான போராட்டம்...

2024-03-28 11:32:19