வெற்றி பெற்றால் மட்­டுமே போட்­டியில் தொடர்ந்து நீடிக்க முடியும் என்ற நிலையில் இருந்த புனே நேற்­றைய ஹைத­ராபாத் அணி­யு­ட­னான போட்­டியில் 4 ஓட்டங்களால் தோல்வி கண்­டது.

இந்தப் போட்­டியில் முதலில் துடுப்­பெ­டுத்­தா­டிய சன்­ரைசர்ஸ் ஹைத­ராபாத் அணியை 137 ஓட்­டங்­க­ளுக்கு சுருட்­டி­யது புனே அணி. அந்த அணியின் இளம் சுழற்­பந்­து­வீச்­சாளர் அடம் ஸம்பா 19 ஓட்­டங்­களை மாத்­திரம் விட்­டுக்­கொ­டுத்து 6 விக்­கெட்­டு­களை வீழ்த்தி அசத்­தினார்.

நாணய சுழற்­சியில் வெற்­றி­பெற்ற ஹைத­ராபாத் அணியின் ஷிகர் தவானும், டேவிட் வோர்­னரும் ஆட்­டத்தை ஆரம்­பித்­தனர். இதில் 11 ஓட்­டங்கள் எடுத்­தி­ருந்­த­வேளை வோர்னர் ஆட்­ட­மி­ழந்தார்.

அதன்­பி­றகு தவானும் 33 ஓட்­டங்­க­ளுடன் வெ ளியே­றினார். அடுத்து வந்த யுவராஜ் சிங் 23 ஓட்­டங்­களை எடுத்து ஸம்பா பந்­து­வீச்சில் ஆட்­ட­மி­ழந்தார்.

ஸம்­பாவின் அடுத்த ஓவரில் வில்­லி­யம்ஸன் (32) வீழ்ந்தார். அடுத்த பந்தில் ஹென்றிக்ஸ் (10) வீழ்ந்தார்.

20ஆவது ஓவரை வீசிய ஸம்பா 3 விக்­கெட்­டு­களை வீழ்த்­தினார். இரண்­டா­வது பந்தில் ஹூடாவை வீழ்த்­திய அவர், 5ஆவது பந்தில் ஓஜா­வையும், 6ஆவது பந்தில் புவ­னேஷ்வர் குமா­ரையும் வீழ்த்­தினார்.

இறு­தியில் ஹைத­ராபாத் அணி 20 ஓவர்கள் முடிவில் 8 விக்­கெட்­டுக்களை இழந்து 137 ஓட்­டங்­களை எடுத்­தது.

புனே அணி சார்பில் அடம் ஸம்பா 6 விக்­கெட்­டு­களை வீழ்த்­தினார். ஆர்.பி.சிங், அஷ்வின் ஆகியோர் தலா ஒரு விக்­கெட்டை வீழ்த்­தினர்.

அதன் பிறகு 138 ஓட்­டங்கள் பெற்றால் வெற்றி என்ற நிலையில் கள­மி­றங்­கிய புனே அணியின் ஆரம்பத் துடுப்­பாட்ட வீர­ரான ரஹானே ஓட்­ட­மேதும் பெறாத நிலையில் ஆட்­ட­மி­ழந்தார். மற்­றைய வீர­ரான கவாஜா 11 ஓட்­ட­ங்க­ளுடன் ஆட்­ட­மி­ழக்க, பெய்­லி­யுடன் ஜோடி சேர்ந்த அஷ்வின் ஜோடி சற்று நிதா­ன­மாக ஆடி ஓட்­டங்­களைச் சேர்த்­தது. ஆனாலும் பெய்லி(34), அஷ்வின் (29) ஓட்­டங்­க­ளுடன் ஆட்­ட­மி­ழக்க அணி மேலும் தடு­மா­றி­யது. அதன் பிறகு ஜோடி சேர்ந்த திஸர மற்றும் டோனி அணியை தோல்­வி­யி­லி­ருந்து மீட்க கடு­மை­யாக போரா­டினர்.

ஆனாலும் போராட்டம் வீணா­னது இறுதியில் டோனியின் புனே அணி நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவர்களில் 8 விக்கெட்டுக்களை இழந்து 133 ஓட்டங்களைப் பெற்று தோல்வியைத் தழுவிக்கொண்டது.