மீண்டும் பிள­வு­படும் சுதந்­திரக்கட்சி மஹிந்த பக்கம் தாவும் மற்­றொரு அணி

Published By: Daya

09 Aug, 2019 | 10:26 AM
image

பொது­ஜன பெர­மு­னவின் ஜனா­தி­பதி வேட்­பாளர் பற்­றிய அறி­விப்பு வெளி­யி­டப்­ப­ட­வி­ருக்கும் அந்தக் கட்­சியின் மாநாட்டில் தாம் கலந்துகொள்ளப் போவ­தாக ஸ்ரீ­லங்கா சுதந்­திரக் கட்சி பாரா­ளு­மன்ற உறுப்­பி­னர்கள் சிலர் தெரி­வித்­துள்­ளனர்.



எதிர்­வரும் 11ஆம் திகதி ஸ்ரீ­லங்கா பொது­ஜன பெர­மு­னவின் மாநாடு நடை­பெ­ற­வுள்­ளது. இதில் மஹிந்த ராஜ­பக் ஷ கட்­சியின் தலை­வ­ராக பங்­கேற்­க­வுள்­ள­துடன், தமது ஜனா­தி­பதி வேட்­பா­ளரின் பெய­ரையும் அறி­விக்­க­வுள்ளார்.



இந்த மாநாட்டில் பங்­கேற்­பதா இல்­லையா என்­பது குறித்து, கடந்த 6ஆம் திகதி ஜனா­தி­ப­தியின் இல்­லத்தில் சுதந்­திரக் கட்­சியின் முக்­கிய தலை­வர்கள் கூடி ஆராய்ந்­தி­ருந்­தனர்.



இதன்­போது, மாநாட்டில் பங்­கேற்கவேண்டும் என ஒரு தரப்பும், பங்­கேற்கக்கூடாது என மற்­றொரு தரப்பும் வாதிட்­டன.



இரண்டு கட்­சி­க­ளுக்கும் இடை­யி­லான கூட்­டணி தொட­ர்­பான முடிவு இன்­னமும் எடுக்­கப்­ப­டாத நிலையில், பொது­ஜன பெர­மு­னவின் மாநாட்டில் பங்­கேற்க வேண்டாம் என சுதந்­திரக் கட்­சியின் பாரா­ளு­மன்ற உறுப்­பி­னர்­க­ளிடம் ஜனா­தி­பதி கோரி­யி­ருந்தார்.  அதன் பின்னர் அவர் நேற்­று­முன்­தினம் அதி­காலை கம்­போ­டி­யா­வுக்குப் புறப்­பட்டுச் சென்று விட்டார்.



சுதந்­திரக் கட்­சியின் இந்த முடிவை நேற்­று­முன்­தினம் கட்­சியின் பொதுச்­செ­யலர் தயா­சிறி ஜய­சே­கர அறி­வித்­தி­ருந்தார்.



எனினும், சுதந்­திரக் கட்சி தலை­மையின் இந்த முடி­வுக்குக் கட்­டுப்­படப் போவ­தில்லை என சில பாரா­ளு­மன்ற உறுப்­பி­னர்கள் தெரி­வித்­துள்­ளனர்.



தயா­சிறி ஜய­சே­கர தவிர்ந்த சுதந்­திரக் கட்­சியின் ஏனைய உறுப்­பி­னர்கள் இந்த மாநாட்டில் பங்­கேற்­க­வுள்­ள­தாக எஸ்.பி.திசாநா­யக்க தெரி­வித்தார்.



அத்­துடன் பொது­ஜன பெர­மு­னவின் ஜனா­தி­பதி வேட்­பா­ள­ருக்கு தாம் ஆசி வழங்கப் போவ­தா­கவும் அவர் கூறினார்.



தானும் இந்த மாநாட்டில் பங்­கேற்கப்போவ­தாக, சுதந்­திரக் கட்­சியின் மற்­றொரு பாரா­ளு­மன்ற உறுப்­பி­ன­ரான டிலான் பெரே­ராவும் கூறி­யுள்ளார். இதற்­கி­டையே இரண்டு கட்­சி­க­ளுக்கும் இடையில் கூட்­ட­ணியை உரு­வாக்­கு­வது தொடர்பாக பேச்சுக்கள் நடத்தப்படுகின்ற நிலையில், ஸ்ரீ­லங்கா   சுதந்திரக் கட்சித் தலைமை மாநாட்டில் பங்கேற்க தடைவிதித்துள்ளமை குறித்து பொதுஜன பெரமுன கடும் அதிருப்தி அடைந்துள்ளது.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

இன்றைய வானிலை 

2024-04-19 06:12:21
news-image

இலங்கையில் சிவில், அரசியல் உரிமைகளின் எதிர்காலம்...

2024-04-18 20:41:15
news-image

கணவன் மரணம் : மனைவி தவறான...

2024-04-19 02:57:58
news-image

வவுனியாவில் பாலித தெவரப்பெருமவுக்கு இளைஞர்கள் அஞ்சலி

2024-04-19 03:04:14
news-image

யாழ்ப்பாணத்தில் மனைவியை கூரிய ஆயுதத்தால் தாக்கிய...

2024-04-19 02:29:42
news-image

வெற்றுக் காணியில் வைத்திய கழிவுகளை கொட்டும்...

2024-04-19 02:24:21
news-image

இலங்கையில் தமது சேவை வழங்கலை இணைத்தது...

2024-04-19 02:19:10
news-image

கச்சதீவை பெற்றுக்கொள்ள இந்தியா சர்வதேச நீதிமன்றத்தை...

2024-04-19 02:01:40
news-image

அரசு கட்டமைப்புக்களின் பங்குகளைக் கொள்வனவு செய்ய...

2024-04-18 16:30:09
news-image

இளைஞர்கள் எதிர்பார்க்கும் இலங்கை கட்டியெழுப்பப்படும் -...

2024-04-18 23:45:38
news-image

யாழ்ப்பாணத்தில் கிணற்றில் விழுந்த இளம் குடும்பப்...

2024-04-18 22:24:04
news-image

சுதந்திரக் கட்சியின் உத்தியோகபூர்வமற்ற தலைவராக ரணில்...

2024-04-18 16:53:55