நாட்டை அபிவிருத்தி செய் சர்வாதிகாரம் தேவையில்லை - பிரதமர்

Published By: Vishnu

08 Aug, 2019 | 09:10 PM
image

(நா.தினுஷா)

எதிர்வரும் ஜனாதிபதி தேர்தலை முன்னிட்டு மூன்று பிரதான கட்சிகளின் தலைமையிலும் புதிய கூட்டணிகள் உருவாகவுள்ளன. இந்த மாத இறுதிக்குள் ஐக்கிய தேசிய கட்சி தலைமையிலான புதிய கூட்டணி அறிவிக்கப்படும் என்று பிரதமர் ரணில் விக்கிரமசிங்க தெரிவித்தார்.  

அத்துடன் நாங்கள் யாரையும் ஒழித்துக்கட்டவில்லை. வெள்ளை வேன் அச்சுறுத்தல்கள் அற்ற, நீதித்துறைமீதான நெருக்குதல் இல்லாத  ஜனநாயக ரீதியான புதிய  நாட்டை  உருவாக்கவே எதிர்பார்க்கிறோம். நாட்டை முன்னேற்றப் பாதையில் கொண்டு செல்ல வேண்டுமானால் எமக்கு சர்வாதிகாரம் வேண்டும் என்று ஒருசிலர் கூறுகிறார்கள். 

நாட்டை அபிவிருத்தி செய்வதற்கு சர்வாதிகாரம் ஒருபோதும் தேவையில்லை. அதற்கு, எமக்கு ஜனநாயகமும் ஒழுங்குமுறைகளுமே அவசியம்.  இவை இரண்டினூடாகவே முன்னேற்றப்பாதையில் செல்ல முடியும் என்றும் அவர் கூறினார்.

கட்டுமானத் துறையில் பணிபுரியும் ஊழியர்களை கௌரவிக்கும் வைபவம் பாரிய நகரம் மற்றும் மேல் மாகாண அபிவிருத்தி அமைச்சின் ஏற்பாட்டில் இன்று கொழும்பு சுகததாச உள்ளக விளையாட்டரங்கில் இடம்பெற்றது. இந் நிகழ்வில் பிரதம அதிதியாக கலந்து கொண்டு உரையாற்றும்போதே அவர் இவ்வாறு கூறினார்.

இந்த நிகழ்வில் அமைச்சர்களான பாட்டலி சம்பிக்க ரணவக்க, ரவி கருணாநாயக்க மற்றும் இராஜாங்க அமைச்சர் எரான் விக்ரமரத்ன ஆகியோரும் கலந்துகொண்டனர். 

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

லுணுகலை ஹொப்டன் பகுதியில் நீரில் மூழ்கி...

2024-04-19 14:03:38
news-image

கல்வி நிர்வாக சேவைக்கான பரீட்சை முடிவுகள்...

2024-04-19 13:53:47
news-image

நாட்டில் வைத்தியர்களுக்குப் பற்றாக்குறை!

2024-04-19 13:04:56
news-image

வரலாறு : கச்சதீவு யாருக்கு சொந்தம்...

2024-04-19 13:12:49
news-image

கொழும்பில் சட்டவிரோதமாக நிர்மாணிக்கப்பட்ட கட்டிடங்கள் தொடர்பில்...

2024-04-19 12:39:54
news-image

பாதாள உலக குழுக்களைச் சேர்ந்த மேலும்...

2024-04-19 12:26:04
news-image

கலால் திணைக்களத்தின் அதிகாரி பணி இடைநிறுத்தம்!

2024-04-19 12:49:10
news-image

அநுர, சஜித் சிறு பிள்ளைகள், நாட்டைக்...

2024-04-19 12:12:49
news-image

நச்சுத்தன்மைமிக்க போதைப்பொருட்களுடன் 10 பெண்கள் உட்பட...

2024-04-19 12:10:56
news-image

செவ்வாய் கிரகத்தில் வாழ்வது எப்படி :...

2024-04-19 12:31:10
news-image

கடுகண்ணாவை நகரை சுற்றுலாத் தலமாக அபிவிருத்தி...

2024-04-19 11:42:14
news-image

கூரிய ஆயுதத்தால் தாக்கப்பட்டு 71 வயதான...

2024-04-19 11:48:31