நல்லூர் வளாகத்திற்குள் இராணுவத்தை சப்பாத்து, துப்பாக்கிகளுடன் அனுமதிக்க முடியாது - ஸ்ரீதரன் 

Published By: R. Kalaichelvan

08 Aug, 2019 | 04:05 PM
image

(ஆர்.யசி, எம்.ஆர்.எம்.வசீம் )

நல்லூர் கந்தசுவாமி ஆலைய திருவிழா காலங்களில் இராணுவம் சப்பாத்துக்களுடனும் துப்பாகிகளுடனும் ஆலய வளாகத்தில் நுழைந்து தமிழர்களை சோதிக்கும் செயற்பாடுகள் உடனடியாக கைவிடப்பட வேண்டும். பிரதமரும் அரசாங்கமும் உடனடியாக இவற்றை தடுக்க  நடவடிக்கை எடுக்க வேண்டும் என தமிழ்த் தேசிய கூட்டமைப்பின் பாராளுமன்ற உறுப்பினர் எஸ்.ஸ்ரீதரன் சபையில் தெரிவித்தார்.

அபிவிருத்தி உபாயமுறைகள்  மற்றும் சர்வதேச வர்த்தக சட்டத்தின் மீதான ஒழுங்குவிதிகள் குறித்த விவாதத்தில் கலந்துகொண்டு உரையாற்றும் போதே அவர் இதனைக் குறிப்பிட்டார். அவர் மேலும் கூறுகையில். 

யாழ் நல்லூர் கந்தசுவாமி கோவில் ஆலைய திருவிழா தமிழர்களின் அடையாள நிகழ்வாக கருதப்படுகின்றது. இந்த ஆலைய  வரலாற்றில் இதுவரை ஆலையத்திற்குள்  செல்பவர்களை பரிசோதனை செய்ததாக வரலாறுகள் இல்லை.

நல்லூர் கந்தசுவாமி ஆலையம் மிகவும் புனிதமான பகுதி. ஆனால் இன்று அங்கு சப்பாதுகளுடனும் துப்பாக்கிகளுடனும் உள்நுழைந்து தமிழ் மக்களை சோதிக்கும் நிலைமை உருவாகியுள்ளது.

சீருடை தரித்த இராணுவத்தினர் ஆக்கிரமிப்பையும் மக்களை அசௌகர்யத்திற்கு உள்ளாக்கும் நிலைமைகளை ஏற்றுகொள்ள முடியாததாகும்.

ஆலைய நிருவாகமும் சரி, பொதுமக்களும் வேறு எவரும்  இவ்வாறு பாதுகாப்பு கேட்கவில்லை. இன்று அரசாங்கமே தேசிய பாதுகாப்பை உறுதிபடுத்திவிட்டதாக கூறும் அரசாங்கம் வடக்கில் மட்டும் ஏன் இவ்வாறு கெடுபிடிகளை கையாள்கின்றது என்பது தெரியவில்லை. 

யாழ்ப்பாணம் நல்லூர் ஒரு கலாசார புனித பூமி. அங்கு எமது கலாசாரத்தை நாசமாக்கும் வகையில் இராணுவம் நடந்துகொள்கின்ற என அவர் தெரிவித்தார்.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

ஈஸ்டர் தாக்குதல் சம்பவம் தொடர்பில் மைத்திரிக்கு...

2024-03-28 19:46:59
news-image

தடுப்பூசி போடப்பட்ட மாணவ குழுவில் 10...

2024-03-28 18:55:29
news-image

நன்னடத்தை பாடசாலை மேற்பார்வையாளர் பெண்ணிற்கு மீண்டும்...

2024-03-28 16:58:06
news-image

பாராளுமன்றம் ஏப்ரல் 01ஆம் திகதி மற்றும்...

2024-03-28 16:28:48
news-image

பெருந்தோட்ட கம்பனிகள் சமர்ப்பித்த முன்மொழிவை நிராகரித்த...

2024-03-28 16:19:07
news-image

கெஹெலிய ரம்புக்வெல்லவிற்கு மீண்டும் விளக்கமறியல்

2024-03-28 16:14:07
news-image

கொழும்பு கிராண்ட்பாஸ் பகுதியில் தீ பரவல்

2024-03-28 15:52:31
news-image

இன்றைய நாணய மாற்று விகிதம் 

2024-03-28 16:02:37
news-image

மீண்டும் அதிகரித்த தங்கத்தின் விலை!

2024-03-28 14:48:17
news-image

மக்களின் துயரங்களுக்கு தீர்வு காண நாட்டின்...

2024-03-28 14:26:10
news-image

இருவரைச் சுட்டுக் கொன்ற சம்பத் சமிந்தவின்...

2024-03-28 16:00:53
news-image

மாதமொன்றுக்கு 6 இலட்சம் கோழி முட்டைகள்...

2024-03-28 13:56:01