தலைநகர வீதியோரங்களில் குவியும் குப்பைகள் : பாரதூரமான சுகாதார பிரச்சினையை சந்திக்கும் ஆபத்து

Published By: R. Kalaichelvan

08 Aug, 2019 | 03:29 PM
image

(நா.தினுஷா) 

தொடர்ந்து  ஆறு நாட்களாக தெருவோர குப்பைகள் அதிகரித்து வருகின்றன. இந்த குப்பை கழிவுகள் முறையாக அகற்றப்படாமையினால் குப்பைகளை வீதியில் குவிக்கும் நிலை நேர்ந்துள்ளதாகவும் இதனால் தாம் பெரும் அசௌகரியத்தை சந்தித்து வருவதாகவும் மக்கள் விசனம் தெரிவிக்ககின்றனர்.

கடந்த சில தினங்களாக கொழும்பின்  சில பாகங்களில் தெருவோர குப்பைகளின் அதிகரித்து வருகின்றது. கொட்டாஞ்சேனை, கொச்சிக்கடை, ஜம்பட்டா வீதி, ஜிந்துபிட்டி, புதுக்கடை, மாளிகாவத்தை ,சீனா வீதி மற்றும் கிராண்ட் பாஸ் வீதி உள்ளிட்ட  இன்னும் சில பிரதேசங்களில் அதிகளாவான குப்பைகள் குவித்து காணப்படுகிறது.

இந்த குப்பைகள் குவிக்கப்பட்டுள்ளமையினால் போக்குவரத்து நெரிசல் உள்ளிட்ட பல்வேறு சுகாதார பிரச்சினைகளையும் மக்கள் சந்தித்து வருகிறனர். 

மழையுடனான காலநிலையின் காரணமாக நேற்றையதினம் குப்பை கழிவுகள் சேகரித்து வைக்கப்பட்டிருக்கும் பொது இடங்களில் கழிவு நீர் தேங்கி இருந்ததையும் குப்பைகளினால் துர்நாற்றம் வீசியதையும் காணக்கூடியதாக இருந்தது. 

'கடந்த ஆறு நாட்களாக குப்பைகள் முறையாக அகற்றப்பட வில்லை. குப்பைகளை கொட்டுவதற்கு  பொதுவான இடம் ஒன்றும் இல்லை. இதன் காரணமாக வழைமைக்கு மாறாக குப்பைகளை விதியோரங்களில் எறிவேண்டிய நிலை ஏற்பட்டுள்ளது. ' 

'நாங்கள் நடமாடும் பிரதான பாதைகள் குப்பைகளால் நிறைக்கப்பட்டுள்ளன. இன்னும் ஓரிரு தினங்களுக்கு இந்த குப்பைகள் அகற்றப்படாமல்  இருக்குமாக இருந்தால் கொழும்பின் பிரதான பாதைகளில் போக்குவரத்து பெரும் அசௌகரியத்தை வேண்டி வரும்.

பாதைகளை மூடும் அளவுக்கு குப்பைகள் அதிகரிப்பதற்கான வாய்ப்புக்களும் காணப்படுவதாக' மக்கள் கூறுகிறார்கள்.  

இந்நிலையில்  இந்த குப்பை கழிவுகளை முறையாக அகற்றி பிரச்சினைக்கு உடனடி தீர்வை காண கொழும்பு நகரசபை நடவடிக்கை எடுக்க வேண்டும். அவ்வாறு இல்லாவிட்டால் இதனால் தாம் பாரிய நெருக்கடியை சந்திக்க வேண்டி வரும் என்றும் மக்கள் கூறிகிறார்கள்.  

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

பொதுஜன பெரமுனவின் மாவட்ட மகா சம்மேளனம்...

2024-03-29 17:15:52
news-image

இனப்பிரச்சினைக்கு 13 வது திருத்தத்தின் அடிப்படையில்...

2024-03-29 16:52:41
news-image

சிவனொளிபாத மலையிலிருந்து பள்ளத்தில் விழுந்த சுற்றுலா...

2024-03-29 17:02:49
news-image

அநுராதபுரம் திறந்தவெளி சிறைச்சாலையில் இரு கைதிகள்...

2024-03-29 15:55:47
news-image

அதிகார பகிர்வினால் மாத்திரமே பொருளாதார வளர்ச்சி...

2024-03-29 15:40:08
news-image

அம்பாந்தோட்டையில் புதிய சுத்திகரிப்பு நிலையம் சினொபெக்...

2024-03-29 15:29:13
news-image

நுவரெலியாவில் ஆடை தொழிற்சாலை ஊழியர்களின் போராட்டம்...

2024-03-29 14:40:51
news-image

பெரிய வெள்ளியான இன்று மட்டக்களப்பில் திருச்சிலுவைப்...

2024-03-29 14:32:43
news-image

‘யுக்திய’ நடவடிக்கை : இதுவரை பாதாள...

2024-03-29 14:23:33
news-image

பாணந்துறை அடுக்குமாடி குடியிருப்பில் யுக்திய நடவடிக்கை...

2024-03-29 14:28:04
news-image

500 ரூபாய் இலஞ்சம் பெற்ற பொலிஸ்...

2024-03-29 13:14:04
news-image

ஈஸ்டர் தினத்தை முன்னிட்டு 6,837 பொலிஸார்...

2024-03-29 13:52:53