இந்தியாவில் ரூ.400 கோடி கள்ள நாணயத்தாள்கள் புழக்கத்தில் இருப்பதாக,  கல்கத்தாவில் இயங்கும் இந்திய புள்ளியியல் நிறுவனத்தின் ஆய்வு தகவல் தெரிவித்துள்ளது. 

நாட்டில் புழக்கத்தில் விடப்பட்டுள்ள கள்ள நாணயத்தாள்கள் குறித்து புள்ளியியல் நிறுவனம் ஆய்வு மேற்கொண்டது. 

கள்ள நாணயத்தாள்களை அண்டை நாடான பாகிஸ்தான் அச்சடித்து புழக்கத்தில் விடுகிறது. அங்கு அச்சிடப்படும் கள்ள நாணயத்தாள்கள் வங்காள தேசம், ஜார்க்கண்ட், மேற்கு வங்காளம், பீகார் வழியாக இந்தியாவுக்குள் அனுப்பபடுகிறது.

ஜார்ஜா வழியாக உணவுப் பொட்டலங்கள் என்ற பெயரில் விமானம் மூலமும் இந்தியாவுக்குள் கடத்தப்படுகின்றன. கடந்த 2015–ம் ஆண்டில் 9 முதல் 10 கடத்தல் வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளன.

எனவே, அரசு கள்ள நாணயத்தாள்கள் புழக்கத்தை தடுக்க தீவர நடவடிக்கை மேற் கொள்ள வேண்டும் என மத்திய அரசுக்கு இந்திய புள்ளியியல் நிறுவனம் அறிவுறுத்தியுள்ளது.