அணு­வா­யுத உடன்­ப­டிக்கையில் இருந்து வில­கி­யது அமெ­ரிக்கா : நிச்­ச­ய­மற்ற நிலையில் உலக பாது­காப்பு

Published By: Digital Desk 3

08 Aug, 2019 | 12:14 PM
image

வொஷிங்டன், (சின்­ஹுவா) ரஷ்­யா­வு­ட­னான நடுத்­த­ர­வீச்சு அணு­வா­யுத உடன்­ப­டிக்­கையில் இருந்து ( Intermediate -- Range Nuclear Forces (INF) Treaty)  அமெ­ரிக்கா கடந்த வெள்­ளிக்­கி­ழமை முறைப்­ப­டி­யாக வில­கிக்­கொண்­டது. இதை சர்­வ­தேச பாது­காப்பை மேலும் கூடுதல் நிச்­ச­ய­மற்ற நிலைக்குள் தள்­ளி­வி­டக்­கூ­டிய ஒரு  செயல் என்று நிபு­ணர்கள் கூறு­கி­றார்கள்.

நடுத்­த­ர­வீச்சு அணு­வா­யுத உடன்­ப­டிக்­கையிலிருந்து அமெ­ரிக்­காவின் விலகல் அணு­வா­யுதக் கட்­டுப்­பாடு மற்றும் உலக பாது­காப்­புக்கு பாரிய தாக்­கத்தை ஏற்­ப­டுத்­து­கி­றது. நித்­தி­ரையில் நடந்­து­கொண்டே புதி­ய­தொரு ஆயுதப் போட்டா போட்­டிக்குள் பிர­வே­சிக்­கிறோம் என்று முன்னாள் அமெ­ரிக்க பாது­காப்பு அமைச்சர் வில்­லியம் பெறி டுவிட்டர் சமூக ஊட­கத்தில் கருத்தைப் பதி­வு­செய்­தி­ருக்­கிறார்.

நடுத்­த­ர­வீச்சு மற்றும் குறு­கி­ய­தூர வீச்சு ஏவு­க­ணை­களை ஒழிப்­பது தொடர்பில் அமெ­ரிக்­கா­வுக்கும் சோவியத் யூனி­ய­னுக்கும் இடையே 1987 ஆம் ஆண்டில் கைச்­சாத்­தி­டப்­பட்ட  இந்த உடன்­ப­டிக்­கையை ரஷ்யா மீறு­கின்­றது என்று காரணம் கூறிக்­கொண்டு இவ்­வ­ருடம் பெப்­ர­வ­ரியிலிருந்து அமெ­ரிக்கா விலகல் செயன்­முறையை ஒரு­த­லைப்­பட்­ச­மாக ஆரம்­பித்­தது.

வாஷிங்­டனின் குற்­றச்­சாட்டை திரும்­பத்­தி­ரும்ப மறுத்த மாஸ்­கோவும் நடுத்­த­ர­வீச்சு அணு­வா­யுத உடன்­ப­டிக்­கையில்   பங்­கேற்­பதை இடை­நிறுத்­தி­யது. இந்த உடன்­ப­டிக்கை அணு­வா­யுதப் பரி­க­ரணம் தொடர்பில் இரு தரப்­பு­க­ளுக்கும் இடையில் செய்­து­கொள்­ளப்­பட்ட முத­லா­வது உடன்­ப­டிக்கை என்­ப­துடன் ஆயு­தப்­போட்­டா­போட்­டியை கட்­டுப்­ப­டுத்­து­வதை நோக்­கிய முக்­கி­ய­மான முத­லா­வது அடி­யெ­டுத்­து­வைப்­பா­கவும் அமைந்­தது என்­பது குறிப்­பி­டத்­தக்­கது.

தற்­போ­தைய நிகழ்­வுப்­போக்­குகள் உறு­திப்­பாடும் பாது­காப்பு உணர்வும் குறைந்த ஒரு உல­கத்­துக்கே இட்­டுச்­செல்லும். அமெ­ரிக்­காவும் ரஷ்­யாவும் எதிர்­கால நிகழ்­வுப்­போக்­கு­களை எதிர்­வு­கூற இய­லா­த­வை­யாகப் போய்­விடும் என்று புரூக்கிங்ஸ் நிறு­வ­னத்தின் பிர­ப­ல­மான கல்­விமான் ஸ்றீபன் பை ஃபர் கூறினார்.

 ஆயுதக் கட்­டுப்­பாடு தொடர்பில் பதி­லீ­டாக ஒரு திட்­டத்­தையும் வகுக்­காமல் நடுத்­த­ர­வீச்சு அணு­வா­யுத உடன்­ப­டிக்­கையை தூக்­கி­யெ­றி­வது ரஷ்­யா­வுடன் கட்­டுப்­பா­டின்­றிய பயங்­க­ர­மான  இரா­ணுவப் போட்டி யுக­மொன்­றுக்கே கதவைத் திறந்­து­விடும் என்று ஆயுதக் கட்­டுப்­பாட்டுச் சங்­கத்தின் நிறை­வேற்றுப் பணிப்­பா­ள­ரான டறில் கிம்பால் கூறு­கிறார்.

உண்­மையில், இது தொடர்பில் வெளிப்­ப­டுத்­தப்­படும் கவலை மிகை­யான எதி­ர்வினை அல்ல.வர­லாற்று முக்­கி­யத்­துவம் வாய்ந்த இந்த ஆயு­தக்­கட்­டுப்­பாட்டு உடன்­ப­டிக்­கையின் நிலை­கு­லை­வை­ய­டுத்து சில மணித்­தி­யா­லங்­களில் அமெ­ரிக்கா தரையில் இருந்து ஏவப்­படும் முழு­மை­யான பாரம்­ப­ரிய ஏவு­க­ணை­களைத்  தயா­ரிக்கும்  என்று பென்­டகன் அறி­வித்­தி­ருக்­கி­றது.

அணு­வா­யு­தத்தை தாங்­கி­யதோ அல்­லது பாரம்­ப­ரிய ஆயு­தத்தை தாங்­கி­யதோ எது­வாக இருந்­தாலும் நடுத்­த­ர­வீச்சு அணு­வா­யுத ரக ஏவு­க­ணைகள் உறு­திப்­பாட்டைக் குலைக்­கின்­ற­வை­யா­கவே அமையும்.ஏனென்றால், அவை ரஷ்­யா­வுக்குள் ஆழ­மாக இருக்­கக்­கூ­டிய இலக்­கு­க­ளையும் மேற்கு ஐரோப்­பா­வுக்குள் உள்ள இலக்­கு­க­ளையும் முன்­னெச்­ச­ரிக்­கை­யின்றி அல்­லது குறைந்­த­ளவு முன்­னெச்­ச­ரிக்­கை­யுடன் தாக்­கக்­கூடும். அவற்றின் குறு­கிய நேர இலக்கு ஆற்றல் ( Short time  -- to --  target  capability) நெருக்­கடி நிலை­யொன்று தோன்­றும்­போது தவ­றான கணிப்­பீ­டுகள் செய்­யப்­பட்­டு­வி­டக்­கூ­டிய ஆபத்­து­களை அதி­க­ரிக்கும் என்று கிம்பால் எச்­ச­ரிக்கை செய்­கிறார்.

நடுத்­த­ர­வீச்சு அணு­வா­யுத உடன்­ப­டிக்­கையின் மறை­வுடன் அணு­வா­யு­தப்போர் மீதான விலை­ம­திப்­பற்ற தடுப்பு ஒன்றை உலகம் இழந்­து­விட்­டது என்று ஐக்­கிய நாடுகள் செய­லாளர் நாயகம் அன்­ரோ­னியோ குற்­றெ­ரஸும் கவலை வெளி­யிட்­டி­ருக்­கிறார். மேலும், நடுத்­த­ர­வீச்சு அணு­வா­யுத உடன்­ப­டிக்­கையில் இருந்து விலகும் அமெ­ரிக்­காவின் தீர்­மானம் 2021 ஆம் ஆண்டில் காலா­வ­தி­யா­கப்­போகும்  புதிய கேந்­தி­ர­முக்­கி­யத்­துவ ஆயு­தங்கள் குறைப்பு உடன்­ப­டிக்­கையின்  (New Strategic Arms Reduction Treaty -- New START) கதி பற்­றியும் கவ­லையைக் கிளப்­பி­யி­ருக்­கி­றது. அமெ­ரிக்­கா­வி­னதும் ரஷ்­யா­வி­னதும் நீண்­ட­தூ­ர­வீச்சு அணு­குண்­டு­க­ளி­னதும் அவற்றை ஏவு­கின்ற கரு­வி­க­ளி­னதும் எண்­ணிக்­கையில் மட்­டுப்­பா­டொன்றை விதிக்கும் அந்த உடன்­ப­டிக்­கையை நீடிப்­பது தொடர்பில் அமெ­ரிக்கா இது­வ­ரையில் எந்த சமிக்­ஞை­யையும் காண்­பிக்­க­வில்லை.

அத்­த­கை­ய­தொரு உடன்­ப­டிக்கை அர­சியல் கருத்­துக்­கோ­ணத்திலிருந்து பார்க்­கும்­போது மிக­மிக முக்­கி­ய­மா­ன­தாக இருக்­கி­றது.ஏனென்றால், இரு தரப்­பி­னரும் ஒரு­வரை மற்­றவர் சோதனை செய்­வ­தற்கும் அந்­த­ரங்­க­மாக மேல­திக அணு­வா­யு­தங்கள் தயா­ரிக்­கப்­ப­ட­வில்லை என்ற நம்­பிக்­கையை குறிப்­பிட்ட ஒரு மட்­டத்தில் தோற்­று­விப்­ப­தற்கும் இன்று  இருக்­கக்­கூ­டிய ஒரே­யொரு பய­னு­று­தி­யு­டைய கருவி அது­வே­யாகும் என்று ஓய்­வு­பெற்ற ரஷ்ய கேணல் விக்டர் முறக்­கோவ்ஸ்கி கூறு­கிறார்.

புதிய கேந்­தி­ர­முக்­கி­யத்­துவ ஆயு­தங்கள் கட்­டுப்­பாட்டு உட­ன்ப­டிக்­கைக்கு பதி­லீ­டாக ஒன்றைக் கொண்­டு­வ­ராமல் அதை காலா­வ­தி­யாக அனு­ம­திப்­பது அணு­வா­யுதக் கட்­டுப்­பாட்டில் நிலை­வ­ரங்­களில் உறு­திப்­பாட்டைக் குலைத்­து­வி­டக்­கூ­டிய வெற்­றிடம் ஒன்றை தோற்­று­விக்கும் ஆபத்­துக்­களைக் கொண்­டுள்­ளது என்று வாஷிங்­டனை தள­மாகக் கொண்ட கேந்­தி­ர ­முக்­கி­யத்­துவம் மற்றும் சர்­வ­தேச கற்­கை­க­ளுக்­கான நிலை­யத்தின் நிபு­ண­ரான லெயின் கிங் கூறி­யி­ருக்­கிறார்.

புதிய கேந்­தி­ர­ முக்­கி­யத்­துவ ஆயு­தங்கள் குறைப்பு உடன்­ப­டிக்­கையை 2026வரை நீடிப்­பதே நீண்­ட­கால இலக்­கு­க­ளுக்கு சிறப்­பாக உத­வக்­கூ­டிய ஒரு தெரி­வாக இருக்கும். ஏனென்றால் அவ­வாறு நீடிப்­பது அணு­வா­யுதக் குறைப்பு உடன்­ப­டிக்­கை­களை மேம்­ப­டுத்­து­வ­தற்கும் அணு­வா­யுதக் கட்டுப்பாட்டையும் உண்மைத்தன்மையைச் சரிபார்க்கும் முறைமைகளை பலப்படுத்துவதற்கும் அது உதவும் என்று கிங் அண்மையில் தனது கட்டுரையொன்றில் தெரி வித்திருக்கிறார்.

அணுவாயுதக் கட்டுப்பாட்டு உடன்படிக்கைகளை இரத்துச் செய்வது இறுதியில் எதிர்காலத்தில் வாஷிங்டனுக்கும் மாஸ்கோவுக்கும் இடையில் கூடுதலான அளவுக்கு சிக்கலானதும் ஆபத்தானதுமான உறவுமுறையொன்றுக்கு  வழிவகுக்கும் என்று நிபுணர் கள் கவலைப்படுகிறார்கள்.

எவ்வளவுதான் குறைபாடுகளைக் கொண்ட வையாக இருந்தாலும், ஆயுதக் கட்டுப்பாடு வல்லரசுகளுக்கிடையிலான போட்டியை கையாளு வதற்கான பயனுடைய ஒரு கருவியாக இருக்கமுடியும் என்ற 1960 களின், 1980களின் பாடங்களை அவர்கள் நினைவு படுத்திக்கொள்ளக்கூடும் என்று பைஃபர் கூறினார்.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

ஈரானின் அணுஉலைகளிற்கு பாதிப்பில்லை - ஐநா...

2024-04-19 12:04:21
news-image

இஸ்ரேல் தாக்குதல் மேற்கொண்ட நகரத்தில் அணுஉலை...

2024-04-19 11:47:29
news-image

இந்தியாவின் 18 ஆவது பாராளுமன்ற தேர்தல்...

2024-04-19 11:45:04
news-image

இஸ்ரேல் தாக்குதலை மேற்கொண்ட நகரமே ஈரானின்...

2024-04-19 11:01:21
news-image

பாதுகாப்பு நிலவரம் மோசமடையலாம் - இஸ்ரேலில்...

2024-04-19 10:38:00
news-image

ஈரான் மீது இஸ்ரேல் தாக்குதல் -...

2024-04-19 10:28:27
news-image

ஈரான் மீது இஸ்ரேல் ஏவுகணை தாக்குதல்

2024-04-19 09:31:45
news-image

2024ம் ஆண்டுக்கான 100 செல்வாக்கு மனிதர்களில்...

2024-04-18 15:14:29
news-image

சிட்னி வணிகவளாக தாக்குதலில்துணிச்சலாக செயற்பட்டவருக்கு அவுஸ்திரேலியாவின்...

2024-04-18 17:05:27
news-image

என்மீது தாக்குதல் மேற்கொண்டவரை மன்னித்துவிட்டேன் -...

2024-04-18 11:24:08
news-image

புனித உம்ரா, சுற்றுலா மன்றத்தை ஏப்ரல்...

2024-04-18 17:16:17
news-image

இஸ்ரேல் பதில் தாக்குதலை மேற்கொள்ள தீர்மானித்துள்ளது...

2024-04-18 10:58:52