இன்றைய வானிலை!

Published By: Daya

08 Aug, 2019 | 09:30 AM
image

 நாட்டிலும் நாட்டைச் சூழவுள்ள கடற்பரப்புகளிலும் தற்போது காணப்படும் காற்றுடன் கூடிய நிலையும், நாட்டின் தென்மேற்குப் பிரதேசங்களில் தற்போது காணப்படும் மழை நிலையும் மேலும் தொடரும்  என வளிமண்டலவியல் திணைக்களம் எதிர்வுகூறியுள்ளது.

வடக்கு, வடமத்திய, மேல், வடமேல் மற்றும் மத்திய மாகாணங்களிலும் திருகோணமலை மாவட்டத்திலும் (மணித்தியாலத் துக்கு 50-60 கிலோ மீற்றர் வரையும்) காற்றுடன் கூடிய நிலையில் மேலும் அதிகரிப்பு ஏற்படும் என எதிர்பார்க்கப் படுகின்றது. வடக்கு மற்றும் வடமத்திய மாகாணங்களிலும் திருகோணமலை மாவட்டத்திலும் பிற்பகலிலும் இரவிலும் காற்றின் வேகமானது சடுதியாக மணித்தியாலத்துக்கு 70 கிலோ மீற்றர் வரை அதிகரித்து வீசக்கூடும் என எதிர்பார்க்கப்படுகின்றது. 

மேல், சப்ரகமுவ, மத்திய, தென் மற்றும் வடமேல் மாகாணங்களில் அவ்வப்போது மழையோ அல்லது இடியுடன் கூடிய மழையோ பெய்யக் கூடிய சாத்தியம் காணப்படுகின்றது. மன்னார், யாழ்ப்பாணம் மற்றும் அனுராதபுரம் மாவட்டங்களில் பல தடவைகள் மழை பெய்யக் கூடிய சாத்தியம் காணப்படுகின்றது. 

மேல்,மத்திய, வடமேல் மற்றும் சப்ரகமுவ மாகாணங்களிலும்காலி மற்றும் மாத்தறை மாவட்டங்களிலும் சில இடங்களில் 100 மி.மீக்கும் அதிகமான ஓரளவு பலத்த மழைவீழ்ச்சி எதிர்பார்க்கப்படுகின்றது. 

புத்தளத்திலிருந்து கொழும்பு மற்றும் காலி ஊடாக ஹம்பாந்தோட்டை வரையான கடற்பரப்புகளில் சில இடங்களில் மழையோ அல்லது இடியுடன் கூடிய மழையோ பெய்யக் கூடிய சாத்தியம் காணப்படுகின்றது. 

நாட்டைச் சூழவுள்ள கடற்பரப்புகளில் காற்றானது தென்மேற்கு திசையிலிருந்து வீசக்கூடுவதுடன் காற்றின் வேகமானது மணித்தியாலத்துக்கு 30-40 கிலோ மீற்றர் வரை காணப்படும். 

புத்தளத்திலிருந்து மன்னார், காங்கேசந்துறை மற்றும் முல்லைத்தீவு ஊடாக திருகோணமலை வரையான கடற் பரப்புகளிலும் பொத்துவிலிலிருந்து மட்டக்களப்பு வரையான கடற்பரப்புகளிலும் காற்றின் வேகமானது மணித்தியாலத்துக்கு 60-70 கிலோ மீற்றர் வரை அதிகரித்து வீசக்கூடுவதுடன் அவ்வேளைகளில் கடல் கொந்தளிப்பாகவும் காணப்படும். 

புத்தளத்திலிருந்து மன்னார், காங்கேசந்துறை மற்றும் முல்லைத்தீவு ஊடாக திருகோணமலை வரையான கடற்பரப்புகளில் பிற்பகலிலும் இரவிலும் காற்றின் வேகமானது சடுதியாக மணித்தியாலத்துக்கு 80 கிலோ மீற்றர் வரை அதிகரித்து வீசக்கூடும் என எதிர்பார்க்கப்படுகின்றது. 

இடியுடன் கூடிய மழை பெய்யும் நேரங்களில் கடற்பகுதிகளில் அவ்வப்போது பலமான காற்று வீசுவதுடன் அக்கடற்பிரதேசங்கள் ஓரளவு கொந்தளிப்பாகவும் காணப்படும். 

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

உயிர்த்த ஞாயிறுதினத்தாக்குதல் விவகாரம் : பேராயர்...

2024-04-20 08:50:08
news-image

இன்றைய வானிலை

2024-04-20 06:50:11
news-image

மக்கள் விடுதலை முன்னணியினால் அன்று செய்த...

2024-04-20 01:44:10
news-image

சு.க. ஆதரவாளர்கள் ஐக்கிய மக்கள் சக்தியுடன்...

2024-04-20 00:07:16
news-image

ஈரானிய ஜனாதிபதியின் விஜயம் தொடர்பில் எதிர்ப்பை...

2024-04-20 00:05:28
news-image

துன்பப்படும் மக்களுக்கு பக்கபலத்தை வழங்கிய சிறந்ததொரு...

2024-04-19 23:45:02
news-image

கடற்படை வீரர்கள் இருவர் உட்பட 4...

2024-04-19 22:16:12
news-image

சிறுமியின் மரணத்திற்கு நீதி கோரி தரணிக்குள...

2024-04-19 20:36:49
news-image

சர்வோதய ஸ்தாபகர் ஏ.டி. ஆரியரத்னவின் பூதவுடலுக்கு...

2024-04-19 19:21:27
news-image

பாலித தெவரப்பெருமவின் பூதவுடலுக்கு ஜனாதிபதி இறுதி...

2024-04-19 18:46:10
news-image

கோழி இறைச்சியின் விலை குறைப்பு!

2024-04-19 18:33:17
news-image

பொலிஸாரிடமிருந்து தப்பிச் செல்ல முயன்ற நபர்...

2024-04-19 18:10:41