அமைச்சரவைத் தீர்மானங்கள் ! 

Published By: Priyatharshan

07 Aug, 2019 | 04:22 PM
image

கடந்த 2019.08.06 செய்வாய்க்கிழமை இடம்பெற்ற அமைச்சரவைக் கூட்டத்தின் போது மேற்கொள்ளப்பட்ட தீர்மானங்கள் வருமாறு,

01. இலங்கை அரசாங்கத்திற்கும் நேபாள அரசாங்கத்திற்கும் இடையில் விஞ்ஞான தொழில்நுட்பம் மற்றும் புதிய தயாரிப்புத் துறையில் எட்டப்பட்ட புரிந்துணர்வு உடன்படிக்கை (நிகழ்ச்சி நிரலில் 8 ஆவது விடயம்) 

சமத்துவ அடிப்படையிலும் பரஸ்பர நன்மைகளை அடிப்படையாக கொண்டும் விஞ்ஞான தொழில்நுட்பம் புதிய உற்பத்தி தயாரிப்புத் துறையில் புரிந்துணர்வை ஏற்படுத்தும் நோக்கில் இலங்கை அரசாங்கத்திற்கும் நேபாளத்திற்கும் இடையில் விஞ்ஞான தொழில்நுட்பம் மற்றும் புதிய தயாரிப்பு தொடர்பிலான புரிந்துணர்வு உடன்படிக்கையை எட்டுவதற்காக அமைச்சரவை அந்தஸ்து அற்ற விஞ்ஞான தொழில்நுட்பம் மற்றும் ஆய்வு அமைச்சரின் கோரிக்கைக்கு அமைய ஜனாதிபதி சமர்ப்பித்த ஆவணத்திற்கு அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியுள்ளது.

2. 2016ஆம் ஆண்டில் ஏற்பட்ட வெள்ளத்தினால் பாதிக்கப்பட்ட வீடுகளுக்காக இழப்பீடு வழங்கல் (நிகழ்ச்சி நிரலில் 10ஆவது விடயம்)

2016ஆம் ஆண்டில் ஏற்பட்ட வெள்ள நிலைமையின் காரணமாக கொலன்னாவ பிரதேச செயலாளர் பிரிவில் பாதிக்கப்பட்டு இதுவரையில் சேத மதிப்பீடு மேற்கொள்ளப்படாத ஒரு வீட்டலகிற்கு தலா 20ஆயிரம் ரூபா கொடுப்பனவை கொலன்னாவ பிரதேச செயலாளர் பிரிவினால் சிபாரிசு செய்யப்பட்டுள்ள 8879 வீட்டு அலகுகளுக்காக அரச நிர்வாகம் இடர்முகாமைத்துவம் மற்றும் கால்நடை வள அபிவிருத்தி அமைச்சின் மூலம் செலுத்துவதற்கும் அதற்காக தேவையான மானியத்தை அந்த அமைச்சுக்கு பெற்றுக்கொடுப்பதற்காக பிரதமர் சமர்ப்பித்த பரிந்துரைக்கு அமைச்சரவையினால் அங்கீகாரம் வழங்கப்பட்டுள்ளது.

3. ஐக்கிய நாடுகள் சபையின் காலநிலை மாற்றம் இணக்கப்பாட்டின் போது பாரிஸ் உடன்படிக்கைக்கு அமைவாக 2030ஆம் ஆண்டளவில் எரிசக்தி துறையில் பசுமை வாயு உமிழ்வை கட்டுப்படுத்துதல் (நிகழ்ச்சி நிரலில் 17ஆவது விடயம்)

2015ஆம் ஆண்டில் பாரிஸ் நகரத்தில் நடைபெற்ற ஐக்கிய நாடுகள் சபையின் காலநிலை மாற்றம் தொடர்பிலான வரையறுக்கப்பட்ட இணக்கப்பாட்டில் பங்குதாரர்களின் 21ஆவது மகாநாட்டில் நிறைவேற்றப்பட்ட பாரிஸ் உடன்படிக்கையில் இலங்கை கைச்சாத்திட்டுள்ளது. இதற்கமைவாக 2030ஆம் ஆண்டளவில் எரிசக்தி உற்பத்தி துறையில் பசுமை வாயு உமிழ்வை 2020ஆம் ஆண்டில் உமிழ்வுக்கு அமைவாக 20 சதவீதத்தினால் குறைப்பதற்கு இலங்கை கட்டுப்பட்டுள்ளது. இந்த நிலையை கவனத்தில் கொண்டு 2020 - 2030 பத்தாண்டு காலப்பகுதிக்குள் எரிசக்தி தயாரிப்புக்காக மீள்சுழற்சி அல்லாத பயன்பாட்டின் மூலமான மின் உற்பத்தி நிலையம் நிர்மாணிக்கப்படுமாயின் சுற்றாடல் பாதுகாப்பு மற்றும் பொதுமக்களின் சுகாதார பாதுகாப்பு பசுமை வாயு உமிழ்வு போன்றவை தொடர்பில் விசேட கவனம் செலுத்துதல் மற்றும் இந்த பணிகளி;ல் தேசிய சுற்றாடல் சட்ட விதிகளில் கவனம் செலுத்தி விஞ்ஞான ரீதியிலான சுற்றாடலை மதிக்கும் செயற்பாடுகள் மூலம் வழங்கப்படும் கண்காணிப்பு மற்றும் சிபாரிசின் அடிப்படையில் மாத்திரம் தீர்மானங்களை மேற்கொள்வதின் முக்கியத்துவம் குறித்து மகாவலி அபிவிருத்தி மற்றும் சுற்றாடல் அமைச்சர் என்ற ரீதியில் அதிமேதகு ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவினால் சமர்ப்பிக்கப்பட்ட விடயங்கள் அமைச்சரவையினால் கவனத்தில் கொள்ளப்பட்டுள்ளது.

4. இலங்கை சுற்றாடல் தொழிற்துறையினரின் நிறுவனத்தை அமைத்தல் (நிகழ்ச்சி நிரலில் 18 ஆவது விடயம்)

இலங்கை சுற்றாடல் தொழிற்துறையினரின் நிறுவனத்தை ஒருங்கிணைப்பதற்காக பாராளுமன்ற உறுப்பினர் ஹர்ஷ ராஜகருணாவினால் தனிப்பட்ட திருத்த சட்டமூலமொன்று 2016ஆம் ஆண்டு பெப்ரவரி மாதம் 19ஆம் திகதி பாராளுமன்றத்தில் சமர்ப்பிக்கப்பட்டுள்ளது. தனிப்பட்ட பாராளுமன்ற உறுப்பினரின் திருத்த சட்டமூலம் தொடர்பில் பாராளுமன்ற உறுப்பினரினால் பாராளுமன்றத்தில் பதிவை மேற்கொள்வதற்கு சம்பந்தப்பட்ட செயற்பாட்டு விதிமுறைக்கு அமைவாக இந்த திருத்த சட்டமூலம் தொடர்பில் சட்டமா அதிபரினால் வழங்கப்படும் சிபாரிசின் அடிப்படையில் சட்டத் திருத்த வகுப்பு பிரிவினால் இந்த திருத்த சட்ட மூலம் திருத்தப்பட்டுள்ளது. சம்பந்தப்பட்ட நிறுவனம் அமைப்பதன் மூலம் தொழிற்துறையினர் என்ற ரீதியில் சுற்றாடல் விஞ்ஞானிகளின் தொழிற்துறையினரின் சமூக தொழில் ரீதியில் ஏற்றுக் கொள்ளுவதற்கும் அவர்களுக்கு சம்பந்தப்பட்ட தரத்துடன் ஒழுக்கக் கோட்பாட்டு கட்டமைப்பொன்றை முன்னெடுப்பதற்கும் இவர்களுக்கு உள்ளுர் மற்றும் சர்வதேச ரீதியில் தொழிலை ஏற்றுக் கொள்ளக்கூடிய வகையில் அந்த நிறுவனத்தை ஒன்றிணைப்பதற்காக அதன் திருத்த சட்டமூலத்தை பாராளுமன்றத்தில் சமர்ப்பிப்பதற்கென மகாவலி அபிவிருத்தி மற்றும் சுற்றாடல் அமைச்சர் என்ற ரீதியில் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன முன்வைத்த ஆவணத்திற்கு அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியுள்ளது.

5. இலங்கை சுற்றுலா அபிவிருத்தி அதிகார சபையில் பதிவு செய்யப்பட்டுள்ள சுற்றுலா நிறுவனங்களுக்காக சுற்றுலா அபிவிருத்தி வரி செலுத்துவதற்காக (grace ) கருணைக்காலத்தை வழங்குதல் (நிகழ்ச்சி நிரலில் 20 ஆவது விடயம்)

2019 ஏப்ரல் மாதம் 21 ஆம் திகதி ஞாயிறு அன்று இடம்பெற்ற பயங்கரவாத தாக்குதலினால் சுற்றுலா தொழிற் துறை பெருமளவில் தாக்கத்திற்குள்ளானதாகவும் இலங்கை சுற்றுலா அபிவிருத்தி அதிகார சபையில் பதிவு செய்யப்பட்டுள்ள நிறுவனங்களினால் செலுத்தப்படும் சுற்றுலா அபிவிருத்தி வரியை செலுத்துவதற்கு கால எல்லையை வழங்குவது தொடர்பில் சுற்றுலா அபிவிருத்தி வன விலங்கு மற்றும் கிறிஸ்தவ மத அலுவல்கள் அமைச்சரினால் சமர்ப்பிக்கப்பட்ட ஆவணம் கவனத்தில் கொள்ளப்பட்டது. 2019ஆம் ஆண்டு ஜனவரி மாதம் முதலாம் திகதி தொடக்கம் 6 மாத காலத்திற்காக இந்த வரியை செலுத்துவதற்காக (grace ) கருணைக் காலத்தை வழங்குவதற்கும் இந்த வரி நிதிக்கு சமமான தவணையை 12 தவணை மூலம் மீண்டும் அறவிடுவதற்காகவும் அமைச்சரவையினால் அங்கீகாரம் வழங்கப்பட்டுள்ளது.

6. யால பலட்டுபான சுற்றுலா வலயத்தில் உள்ள காணியொன்றை வரையறுக்கப்பட்ட வன்னேசர் தனியார் நிறுவன சகோதர நிறுவனத்திற்கு ஒதக்கீடு செய்தல் (நிகழ்ச்சி நிரலில் 21ஆவது விடயம்)

யால பலட்டுபான சுற்றுலா வலயத்தில் முழுமையான சுற்றுலா 28 வீடுகளைக் கொண்ட ஓய்வகத்தை அபிவிருத்தி செய்வதற்காக 7 ஏக்கர் காணி மதிப்பீட்டுத் திணைக்களத்தினால் வழங்கப்பட்டுள்ள பெறுமதிக்கு அமைவாக வருடாந்தம் செலுத்துதல் மற்றும் ஆரம்ப முற்பணம் செலுத்தப்படுவதற்கு அமைவாக டுபாயில் உள்ள வரையறுக்கப்பட்ட வன்னெச்சர் தனியார் நிறுவன சகோதர நிறுவனத்திற்கு 50 வருட காலத்திற்கு குத்தகை அடிப்படையில் வழங்குவதற்காக சுற்றுலா அபிவிருத்தி வன விலங்கு மற்றும் கிறிஸ்தவ மத அலுவல்கள் அமைச்சரினால்  சமர்ப்பிக்கப்பட்ட ஆவணத்திற்கு அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியுள்ளது.

7. கலால் வரி கட்டளைச் சட்டத்தின் கீழ் வெளியிடப்பட்ட வர்த்தமானியை பாராளுமன்ற அனுமதிக்காக சமர்ப்பித்தல் (நிகழ்ச்சி நிரலில் 24ஆவது விடயம்)

2016 மற்றும் 2017 வரவு செலவு திட்டத்தின் மூலம் கடைப்பிடிக்கப்பட்ட வகையில் வரி அல்லது சுங்க வரி செலுத்தப்படாத மதுபான பாவணையைத் தடுத்தல் சுங்க வரி வருமானத்தை மேலும் திரட்டல் மற்றும் போலியான மதுபானங்களை தடுத்தல் போன்ற நோக்கத்தை தொடர்ந்து பாதுகாத்தல் மற்றும் ஒட்டுப்படம் முகாமைத்துவ கட்டமைப்பை நடைமுறைப்படுத்துவதற்காக நிதியமைச்சரினால் தேவையான நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது. இதற்கமைவாக கலால் வரி கட்டளைச்சட்டத்தின் ஒழுங்கு விதிகளை பிரகடனப்படுத்துதல் 2019ஆம் ஆண்டு ஜூன் மாதம் 20 ஆம் திகதி இலக்கம் 2128/30 கீழான விசேட வர்த்தமானி வெளியிடப்பட்ட இல 04/2019 மீதான கலால் வரி அறிவிப்புக்கு பாராளுமன்றத்தின் அங்கீகாரத்திற்காக சமர்ப்பிப்பதற்காக நிதி அமைச்சரினால் முன்மொழியப்பட்டுள்ள பரிந்துரை அமைச்சரவையினால் அங்கீகரிக்கப்பட்டுள்ளது.

8. கொழும்பு காசல் வீதி மகளிர் வைத்தியசாலையில் துணை இனப்பெருக்க மத்திய நிலையத்தை ஸ்தாபித்தல் (நிகழ்ச்சி நிரலில் 27ஆவது விடயம்)

காசல் வைத்தியசாலை சேவைகளை விரிவுபடுத்தும் நோக்கில் கண்ணாடி குழாய்க்குள் இனப்பெருக்கத்திற்காக இரசாயனக்கூடம் மற்றும் சத்திரசிகிச்சை வசதி உள்ளடங்கும் வகையில் ஐஏகு சிகிச்சையைக் கொண்டதாக மலட்டுத்தன்மையைக்கொண்ட திருமண தம்தியினருக்கான சேவைகளை வழங்குவதற்காக துணை இனப்பெருக்க சிகிச்சை மத்திய நிலையமொன்றை தனியாக புதிய 2 மாடியில் ஸ்தாபிப்பதற்கும் அதற்கான மானியத்தை பெற்றுக் கொள்வதற்குமாக சுகாதார போஷாக்கு மற்றும் சுதேசிய வைத்திய துறை அமைச்சரினால் சமர்ப்பிக்கப்பட்ட பரிந்துரைக்கு அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியுள்ளது.

9. மாலபே தகவல் தொழில்நுட்ப பூங்காவில் உள்ள காணியை இலங்கை இரசாயனக் கூட ஆய்வு நிறுவனத்திற்கும் பேராதெனிய பல்கலைக்கழகத்திற்கும் ஒதுக்கீடு செய்தல் (நிகழ்ச்சி நிரலில் 31ஆவது விடயம்)

மாலபே தகவல் தொழில்நுட்ப பூங்காவில் உள்ள ஒரு ஏக்கர் ரூட் 0 பேர்ச் 6.40 உட்பட்ட 30 காணித்துண்டுகளை 30 வருட கால குத்தகையின் அடிப்படையில் கொலேஜ் ஒப் இன்ஜினியரிங் தனியார் நிறுவனத்திற்கு வழங்குவதற்காக அமைச்சரவையினால் இதற்கு முன்னர் அங்கீகாரம் வழங்கப்பட்டிருந்தது. இருப்பினும் அந்த நிறுவனத்தினால் இதற்காக அரசாங்கத்தின் வரியை செலுத்தாததினால் குறிப்பிட்ட தீர்மானத்தை இரத்து செய்து குறிப்பிட்ட காணியை இலங்கை இரசாயன ஆய்வு நிறுவனத்திற்கு வழங்குவதற்கும் அதற்கு மேலதிகமாக 2 ஏக்கர் 0 ரூட் 7.9 போர்ச் காணியை பேராதெனிய பல்கலைக்கழகத்திற்கும் வழங்குவதற்காக மாநகர மற்றும் மேல்மாகாண அபிவிருத்தி அமைச்சர் அவர்கள் சமர்ப்பித்த ஆவணத்திற்கு அமைச்சரவை அங்கிகாரம் வழங்கியுள்ளது.

10. அவுஸ்திரேலியாவிற்கு ஏற்றுமதி செய்யக் கூடிய மலர் மற்றும் அலங்கார தாவர வளர்ச்சியை மேம்படுத்தக்கூடிய பொருட்களின் ஒப்பேறு வாய்ப்பு நிலை ஆற்றலை தணித்தல் கரும்பு உற்பத்தியில் ஏற்படும் (வெள்ளை இலை) நோயை கட்டுப்படுத்தல் மற்றும் வெலிகம தெங்கு உற்பத்தியில் இலை அழுகி கருகும் நோயை கட்டுப்படுத்துவதற்காக கிளைபோசெட்டை பயன்படுத்துதல் (நிகழ்ச்சி நிரலில் 35ஆவது விடயம்)

அவுஸ்திரேலியாவுக்கு ஏற்றுமதி செய்யக்கூடிய மலர் மற்றும் அலங்கார தாவர வளர்ச்சியை மேம்படுத்தக்கூடிய ஒப்பேறு வாய்ப்பு நிலை ஆற்றலை தணித்தலுக்கு பயன்படுத்துவதற்காக கிளைபோசெட் 200 லீற்றர்களை இறக்குமதி அபிவிருத்தி சபையின் சிபாரிசின் அடிப்படையில் சம்பந்தப்பட்ட இறக்குமதியாளர்களிடம் வழங்குவதற்காகவும் கரும்பு உற்பத்தியில் ஏற்பட்டுள்ள நோயை கட்டுப்படுத்துவதற்காக 31815 லீற்றர் கிளைபோசெட்டை கரும்பு ஆய்வு நிறுவனத்திடம் வழங்குவதற்காகவும் வெலிகம தெங்கு உற்பத்தி ஓலைகளில் ஏற்படும் நோயை ஒழிப்பதற்காக கிளைபோசெட் 200 லீற்றரை தெங்கு ஆய்வு நிறுவனத்திடம் வழங்குவதற்காகவும் அது தொடர்பில் நியமிக்கப்பட்டுள்ள விசேட குழுவின் மூலம் சிபரிரசு ஒப்பந்தங்களுக்கு உட்பட்டவாறு வருடாந்தம் 32215 லீற்றர் கிளைபோசெட்டை இறக்குமதி செய்து சிபோசெட்கோ நிறுவனத்தின் மூலம் விநியேகிப்பதற்காக பெருந்தோட்டத்துறை அமைச்சர் அவர்களும் அபிவிருத்தி மூலோபாய மற்றும் சர்வதேச வர்த்தக அமைச்சரும் கூட்டாக சமர்ப்பித்த ஆவணத்துக்கு அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியுள்ளது.

11. களமெட்டிய கடற்றொழில் துறைமுகத்தை நிர்மாணிப்பதன் மூலம் தாக்கம் ஏற்படும் மாதெல் கடற்றொழிலாளர்களுக்கு முழுமையான இழப்பீட்டைப் பெற்றுக் கொடுத்தல் (நிகழ்ச்சி நிரலில் 38ஆவது விடயம்)

களமெட்டிய மீனவ துறைமுகத்தை நிர்மாணிப்பதனால் சிரமத்துக்கு உள்ளான களமெட்டிய மாதெல் கடற்றொழில் இறங்கு துறைமுகங்களில் பதிவு செய்து பாரிய வலை உரிமையாளர்கள் 38 பேருக்கு ஒருவருக்கு 5 மில்லியன் ரூபா வீதம் இழப்பீட்டுத் தொகையாக செலுத்துவதற்காக மானியத்தை பெற்றுக் கொள்வதற்காக விவசாய கால்நடை அபிவிருத்தி நீர்ப்பாசன மற்றும் கடற்றொழில் மற்றும் நீர் வள அபிவிருத்தி அமைச்சு மற்றும் நிதியமைச்சரினால் சமர்ப்பிக்கப்பட்ட கூட்டு முதலீட்டுக்கு அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியுள்ளது.

12. இறால் உற்பத்திக்காக வகுக்கப்பட்ட பாரிய பண்ணையை சிறிய துண்டுகாளக துண்டாடப்படுவதை தடுத்தல் (நிகழ்ச்சி நிரலில் 43ஆவது விடயம்)

இறால் உற்பத்திக்காக பயன்படுத்தப்படும் பாரிய பண்ணைகளின் வரிக்கான காலத்துக்கு பின்னர் அவற்றை துண்டுகளாக பிரித்து சிறிய பண்ணைகள் பலவற்றை ஏற்படுத்தும் போக்கு நிலவுகின்றது. இந்த நிலைமை இந்த பண்ணைகளை விஞ்ஞான ரீதியாகவும் வளம் மிக்கதுமான முகாமைத்துவத்தை முன்னெடுப்பதற்கு தடையாகும். இந்த நிலையை தடுப்பதற்காக புத்தளம் மாவட்டத்தில் தற்பொழுது இந்த உற்பத்தி மேற்கொள்ளப்படும் மற்றும் இறால் உற்பத்தி பண்ணைகள் உள்ளமை இதுவரையில் வரிக்கான காலத்தை கடந்துள்ள சிறிய பிரிவுகளாக பிரிக்கப்படுவதை இடைநிறுத்தவதற்கும் இறால் உற்பத்தி கைவிடப்பட்டுள்ள பெரும் எண்ணிக்கையிலான பண்ணைகள் அல்லது குத்தகை காலம் நிறைவடைந்துள்ள பண்ணைகள் சிறிய பகுதிகளுக்கு ஒதுக்கிடும் பொழுது ஆகக் குறைந்த வகையில் உற்பத்தியாளர் ஒருவருக்கு 4 ஏக்கர் ஆகக் கூடிய காணிகள் கிடைக்கும் வகையில் பகுதிகளாக பிரிப்பதற்கும் அந்த காணிகளில் தடாகங்களை நிர்மாணிக்கும் பொழுது அதற்காக நீர் வாழ்; உயிரின அபிவிருத்தி அதிகார சபையின் சிபாரிசுகளை பெற்றுக் கொள்வதற்கு அத்தியாவசிய நிபந்தனையாக உள்ளடக்குவதற்காகவும் இறால் உற்பத்திக்காக பயன்படுத்தப்பட்ட பாரிய பண்ணைகளை அதன் உற்பத்திகளை உள்ளடக்கியதாக மேற்கொள்ளப்படும் நீர் வாழ் உயிரின உற்பத்தி தவிர ஏனைய நடவடிக்கைகளுக்கு பயன்படுத்தாதிருப்பதற்கான ஒழுங்குளை மேற்கொள்வதற்காகவும் விவசாய கால்நடைவள அபிவிருத்தி நீர்பாசன மற்றும் கடற்றொழில் நீரியல் வள அபிவிருத்தி அமைச்சர் அவர்கள் சமர்ப்பித்த ஆவணத்திற்கு அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியுள்ளது.

13. மீரிகம பிரதேசத்தில் மும்மொழிக் கல்வியைக் கொண்ட புதிய கலப்பு தேசிய பாடசாலையொன்றை அமைத்தல் (நிகழ்ச்சி நிரலில் 53ஆவது விடயம்)

மும்மொழிக் கல்வியை உறுதி செய்யும் புதிய கலப்பு தேசிய பாடசாலையொன்றை மீரிகம பிரதேச செயலகத்திற்குள் அமைப்பதற்காக அமைச்சரவையினால் இதற்கு முன்னர் அங்கீகாரம் வழங்கப்பட்டிருந்தது. 

இதற்கமைவாக 2020ஆம் பெப்ரவரி மாதம் அளவில் இந்த பாடசாலையின் கல்வி நடவடிக்கைகளை ஆரம்பித்து தரம் 6 இற்காக மாணவர்களை உள்வாங்கக்கூடிய வகையில் அதன் நிர்மாணம் மற்றும் ஏனைய அபிவிருத்தி நடவடிக்கைகளுக்காக தேவையான நிதியை பெற்றுக் கொள்ளும் பொருட்டு கல்வி அமைச்சர் அவர்கள் சமர்ப்பித்த பரிந்துரைக்கு அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியுள்ளது.

14. இலங்கையில் தொண்டர் சேவை தொடர்பான தேசிய கொள்கை (நிகழ்ச்சி நிரலில் 56 ஆவது விடயம்)

வறுமையை ஒழித்தல், சிறுவர் பாதுகாப்புரூபவ் பெண்களை ஊக்குவித்தல், போதைப்பொருள் பாவனைக்குட்பட்டவர்களின் புனரமைப்பு, சமூக சேவை செயற்பாடு, ஊனமுற்ற நிலையுடன் காணப்படும் நபர்கள் மற்றும் முதியோர்களுக்காக உதவுதல், இடர் சந்தர்ப்பங்களில் நிவாரணங்களை வழங்குதல் மற்றும் சுற்றாடல் முகாமைத்துவம் போன்ற பல விடயங்கள் தொடர்பில் சமூக பொருளாதார துறையில் மேம்பாட்டுக்காக தொண்டர் சேவை மூலம் பல சேவைகள் வழங்கப்படுகின்றன. இதனால் இலங்கைக்குள் தொண்டர் சேவை தொடர்பில் தேசிய கொள்கை ஒன்றை அறிமுகப்படுத்துவது மிக அத்தியாவசியமாக அமைந்துள்ளது. இதற்கமைவாக சிவில் சமூகம்ரூபவ் கல்வி கற்றோர் தொழிற்துறையினர்ரூபவ் பொதுமக்கள் சம்பந்தப்பட்ட அரச மற்றும் தனியார் நிறுவனங்கள் மற்றும் தனிப்பட்ட துறையைச் சேர்ந்த நிறுவனங்கள் ஆலோசனை நிலைமை அடிப்படையில் இவர்கள் செய்துள்ள தொண்டர் சேவை தொடர்பாக தேசிய கொள்கைக்காவும் அதற்காக திருத்த சட்டமூலம் மேற்கொள்வதற்கு ஆரம்ப கைத்தொழில் மற்றும் சமூக ஊக்குவிப்பு அமைச்சர் அவர்கள் சமர்ப்பித்த ஆவணத்திற்கு அமைச்ரவையினால் கொள்கை ரீதியில் அங்கீகரிக்கப்பட்டுள்ளது.

15. மொனராகலை மாவட்ட பெரிய ஆஸ்பத்திரி சத்திர சிகிச்சை வாட் மற்றும் சத்திர சிகிச்சை கட்டிடத் தொகுதியை நிர்மாணித்தல் (நிகழ்ச்சி நிரலில் 64ஆவது விடயம்)

மக்கள் தொகை 5 இலட்சத்திற்கும் மேற்பட்டுள்ள மிகவும் பின்தங்கிய பிரதேச செயலகங்களைக் கொண்ட மொனராகலை மாடவட்டத்தில் பொதுமக்களுக்கு சிறந்த சுகாதார சேவையை வழங்குவதற்காக இந்த மாவட்டத்தில் இரண்டாம்தர சுகாதார சேவையை வழங்கும் ஒரேயொரு வைத்தியசாலையான மொனராகலை மாவட்ட வைத்தியசாலையில் தற்பொழுது உள்ள வரையறுக்கப்பட்ட இடவசதி தடையாக அமைந்துள்ளது. 

இந்த பிரச்சினையை தீர்க்கக் கூடிய வகையில் மொனராகலை மாவட்ட பெரிய ஆஸ்பத்திரிக்காக சத்திரசிகிச்சை வாட் மற்றும் அறங்கு கட்டிடத் தொகுதியை நிர்மாணிப்பத்தற்காக சுகாதார போஷாக்கு மற்றும் சுதேசிய வைத்தியத்துறை அமைச்சர் அவர்கள் சமர்ப்பித்த ஆவணத்திற்கு அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியள்ளது.

16. ஆசிய அபிவிருத்தி வங்கியின் நிதியுதவியின் கீழ் டைமுறைப்படுத்தப்பட்ட இரட்டை நகர பேண்தகு அபிவிருத்தி திட்டத்தின் மூலம் இலங்கையில் 25 உள்ளுராட்சி மன்றங்களுக்கான அடிப்படை வசதிகளை வழங்குதல் (நிகழ்ச்சி நிரலில் 67 ஆவது விடயம்)

அபிவிருத்தி சாத்தியத்துடனான நாட்டின் முக்கிய மாதிரி நகரமாக அபிவிருத்தி செய்யும் நோக்கில் இலங்கையின் உள்ளுராட்சி மன்ற நிறுனங்களின் 25 நகர்புற அடிப்படை வசதிகளை செய்வதற்காக இரட்டை நகர பேண்தகு அபிவிருத்தி திட்டத்தின் விபரங்களுடனான திட்டம் மற்றும் பெறுகை சேவைக்கான ஆலோசனை சேவை இலக்கம் 55-2/1 காலி வீதி கொழும்பு 3 என்ற முகவரியில் அமைந்துள்ள Resources Development Consultants (Pvt) Limited. (பிரதான பங்குதாரர்) மற்றும் IPE Globle Limited (IPEG) India பங்குதாரர் அங்கத்துவ நிறுவனத்திடம் வழங்குவதற்காக முதலீடு மற்றும் உள்நாட்டு அலுவல்கள் மற்றும் மாகாணசபை மற்றும் உள்ளுராட்சி மன்ற அமைச்சில் சமர்ப்பிக்கப்பட்ட உள்ளக மற்றும் பொது நிர்வாக அலுவல்கள் மற்றும் உள்ளுராட்சி மன்ற அமைச்சரினால் சமர்ப்பிக்கப்பட்ட பரிந்துரைக்கு அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியுள்ளது.

17. மாத்தறை அக்மன வீதியில் (B 275) முதல் 2 கிலோமீற்றர் வீதியை விரிவுபடுத்தல் மற்றும் மேம்படுத்தல் (நிகழ்ச்சி நிரலில் 68 ஆவது விடயம்)

மாத்தறை அக்மன வீதியில் (B 275) முதல் 2 கிலோமீற்றர் வீதியை விரிவுபடுத்தல் மற்றும் மேம்படுத்துவதற்கான ஒப்பந்தம் அமைச்சரவையினால் நியமிக்கப்பட்ட நிலையியல் பெறுகைக்குழுவின் சிபாரிசிற்கு அமைவாக M|s Maga Engineerinyg (Pvt) Ltd என்ற நிறுவனத்திற்கு வழங்குவதற்காக பெருந்தெருக்கள் மற்றும் மனிதவள அபிவிருத்தி அமைச்சர் அவர்கள் சமர்ப்பித்த ஆவணத்திற்கு அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியுள்ளது.

18. ஆசிய அபிவிருத்தி வங்கியினால் நிதி உதவி வழங்கப்படும் 2 வது ஒன்றிணைந்த வீதி அபிவிருத்தி வேலைத்திட்டத்தின் கீழ் வட மாகாணத்தில் சிவில் பணிக்கான 5 தொகுதிகளை (Package) வழங்குதல். (நிகழ்ச்சி நிரலில் 72 ஆவது விடயம்)

ஆசிய அபிவிருத்தி வங்கியினால் நிதி உதவி வழங்கப்படும் 2 ஆவது ஒன்றிணைந்த வீதி முதலீட்டுத் திட்டத்தின்  கீழ் யாழ் மாவட்டத்தில் 67.64 கிலோமீற்றர் கிராமிய வீதிகளை புனரமைத்தல் அல்லது மேம்படுத்தல் மற்றும் பராமரிப்பதற்கான ஒப்பந்த தொகுதிகளை (WKK Engineerinyg Co. (Pvt) Ltd in joint venture with world Kaihatsu kogyo Company Ltd .(Japan) (WKK Engineering- word kaihatsu JV)என்ற நிறுவனத்திடமும் இதே மாவட்டத்தில் 71.81 கிலோமீற்றர் கிராமிய வீதிகளை புனரமைத்தல் மற்றும் பராமரிப்பதற்கான ஒப்பந்த தொதியை China State Construction Engineering Corporation Ltd. (Chaina)  என்ற  நிறுவனத்திடமும்  கிளிநொச்சி மாவட்டத்தில் 60.31 கிலோமீற்றர் கிராமிய வீதியை புனரமைத்தல் அல்லது மேம்படுத்தல் மற்றும் பராமரிப்பதற்கான ஒப்பந்த தொகுதியை Sri Ram Construction என்ற நிறுவனத்திடமும் மன்னார் மாவட்டத்தில் 56.03 கிலோமீற்றர் கிராமிய வீதியையும் 61.30 கிலோமீற்றர் வீதியையும் புனரமைத்தல் மேம்படுத்தல் மற்றும் பராமரிப்பதற்கான ஒப்பந்த பொதியை K.D.A. Weerasinghe & Company (Pvt) Ltd. என்ற நிறுவனத்திடம் வழங்குவதற்காக பெருந்தெருக்கள் மற்றும் வீதி அபிவிருத்தி மற்றும் கனியவள அபிவிருத்தி அமைச்சர் சமர்ப்பித்த ஆவணத்திற்கு அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியுள்ளது.

19. 2019 ஆம் ஆண்டு வரவு செலவுத்திட்ட முன்மொழிவு இலக்க 143: இலங்கை போக்குவரத்து சபைக்கு நவீன வசதிகளை கொண்டதும் பயன்படுத்தவதற்கு வசதியான பஸ்களை பெற்றுக்கொடுத்தல். (நிகழ்ச்சி நிரலில் 74 ஆவது விடயம்)

2019 ஆம் ஆண்டு வரவு செலவுத்திட்டத்தின் மூலம் ஒதுக்கீடு செய்யப்பட்ட 1,500 மில்லியன் ரூபா மானியத்தை பயன்படுத்த பெற்றுக்கொள்ள்கூடிய பயன்பாட்டு வசதிகளைக் கொண்ட நவீன வசதிகளுடன்  குளிரூட்டலைக்கொண்ட டீசெல் பஸஸ்ரீகளை இலங்கை போக்குவரத்து சபைக்கு வழங்குவதற்காக போக்குவரத்து சிவில் விமான சேவைகள் அமைச்சரினால் சமர்ப்பித்த ஆவணத்திற்கு அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியுள்ளது.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

இந்தியப் பெருங்கடலில் 'சீனா - குவாட்'...

2024-04-18 10:36:33
news-image

'ஆரம்பிக்கலாமா?' : தமிழை கையிலெடுத்துள்ள பிரதமர்...

2024-04-17 19:36:36
news-image

சர்வதேச நீதிமன்றத்தில் ஆர்மேனியா - அஸர்பைஜான்...

2024-04-17 19:37:33
news-image

சிங்களவர்களாக ஒருங்கிணையும் இந்தியத் தமிழர் –...

2024-04-17 18:00:59
news-image

பிரித்தானியாவில் ஆளுங்கட்சி தோல்வி? சொந்த தொகுதியில்...

2024-04-17 11:04:13
news-image

பரந்த கோட்பாடுகளில் இருந்து நடைமுறையில் பிரச்சினைகள்...

2024-04-16 16:00:03
news-image

ஈரானின் அதிரடி தாக்குதல் ; இஸ்ரேல்...

2024-04-16 10:56:59
news-image

ஜனாதிபதி தேர்தலில் அரசியல் கணக்குகள்

2024-04-16 01:48:16
news-image

ஜனநாயக மக்கள் காங்கிரஸ் தேசிய கட்சியாக...

2024-04-15 19:01:13
news-image

மறுமலர்ச்சியை ஏற்படுத்த வணிக மறுமலர்ச்சி அலகு

2024-04-15 18:55:41
news-image

ரோஹிங்யா முஸ்லிம்களின் உதவியை நாடும் மியன்மார்...

2024-04-15 18:51:43
news-image

சிறிய அயல் நாடுகளின் சோதனைக் காலம்?

2024-04-15 18:49:22