மணல் அகழ்வதற்கான தடை  நீடிப்பு

Published By: Digital Desk 4

07 Aug, 2019 | 04:09 PM
image

கிளிநொச்சி பூநகரி கௌதாரி முனைப்பகுதியில் மணல் அகழ்வதற்கான தடை எதிர் வரும் செப்ரம்பர் 03ம் திகதி வரையும்  மேலும்  நீடிக்கப்பட்டுள்ளது.

கிளிநொச்சி பூநகரிப் பிரதேசத்திற்குட்பட்ட கௌதாரிமுனைப் பகுதியில் இயற்கை வளமான மணல் தொடர்ந்தும் முறையற்ற விதத்தில் அகழ்வது தொடர்பாக பிரதேச மக்கள் பல்வேறு தரப்பினரிடமும் முறைப்பாடுகளைத் தெரிவித்திருந்தனர்.

இந்நிலையிலும் மணல் அகழ்வு தொடர்ந்த நிலையில் கடந்த மாத  முற்பகுதியில் பூநகரி காவல் நிலையம்முன்பாக பொதுமக்களால் கவனயீர்ப்புப் போராட்டம் ஒன்றை முன்னெடுத்ததையடுத்து, இரு தரப்புக்களிடையே ஏற்பட்ட அமைதியின்மை தொடர்பில் பூநகரிப் பொலிசார் கிளிநொச்சி மாவட்ட நீதிவான் நீதிமன்றத்தில் வழக்குத்தாக்கல் செய்திருந்த நிலையில் குறித்த மணல் அகழ்விற்கு நேற்று (06-08-2019) வரை தடைவிதிக்கப்பட்டிருந்தது,

குறித்த வழக்கு நேற்று   (06) கிளிநொச்சி மாவட்ட நீதிவான் நீதிமன்றில் நீதிபதி ரீ.சரவணராஜா முன்னிலையில்  தவணைக்காக எடுத்துக்கொள்ளப்பட்டபோது, பாதிக்கப்பட்ட மக்கள் சார்பாக இளம் சட்டத்தரணிகளான சுப்பிரமணியம் சிவசூரியா, சரண்யா தாசுதன், நவரத்தினம்; பிருந்தா, கோகுலதீபன் தர்சா, ஆகியோர் முன்னிலையாகியிருந்தனர். 

இரு தரப்பு வாதங்களையும் கருத்தில் எடுத்தமன்று  பூநகரி கௌதாரி முனைப்பகுதியில் மணல் அகழ்வதற்கான தடையினை  எதிர் வரும் செப்ரம்பர் 03ம் திகதி வரையும்  மேலும்  நீடித்துள்ளது.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

தோட்டத் தொழிலாளர்களுக்கு அடிப்படை நாட்சம்பளமாக 2000...

2024-03-29 01:56:33
news-image

இணையவழி சிறுவர் துஷ்பிரயோகங்களை அறிக்கையிடும் புதிய...

2024-03-29 01:47:30
news-image

பழுதடைந்த உருளைக்கிழங்கு விவகாரம் : மாகாண...

2024-03-29 01:39:20
news-image

இரண்டு மாதங்களில் 983.7 மில்லியன் ரூபா...

2024-03-29 01:36:37
news-image

இராஜாங்க அமைச்சர் சிவநேசதுரை சந்திரகாந்தன் கிளிநொச்சி...

2024-03-29 01:27:15
news-image

அஜித் நிவாட் கப்ரால் உள்ளிட்ட ஐவருக்கு...

2024-03-29 00:17:44
news-image

தேர்தலை தீர்மானிக்க பஷில் ராஜபக்ஷ தேர்தல்...

2024-03-29 00:05:03
news-image

இரண்டாம் காலாண்டுக்குள் கடன்மறுசீரமைப்பு தொடர்பில் இணக்கப்பாடு...

2024-03-28 21:32:55
news-image

பரந்துப்பட்ட அரசியல் கூட்டணியின் ஜனாதிபதி வேட்பாளராக...

2024-03-28 21:31:49
news-image

தேர்தல் செலவின ஒழுங்குபடுத்தல் சட்டம் குறித்து...

2024-03-28 21:37:50
news-image

நாமலுக்கு இன்னும் காலம் இருக்கிறது ;...

2024-03-28 21:33:56
news-image

பாராளுமன்றத்தைப் பிரதிநிதித்துவப்படுத்தாத பதிவு செய்யப்பட்ட அரசியல்...

2024-03-28 21:26:04