தமிழர்களின் பிரச்சினைக்கு உணர்வுபூர்வமாக குரல் கொடுத்தவர் சுஷ்மா சுவராஜ் - த.தே.கூ.

Published By: Vishnu

07 Aug, 2019 | 02:23 PM
image

(எம்.மனோசித்ரா)

இந்தியாவின் முன்னாள் வெளியுறவுத்துறை அமைச்சரும் பாரதிய ஜனதாக் கட்சியின் மூத்த தலைவர்களில் ஒருவருமான சுஷ்மா சுவராஜின் இழப்பு ஈடுசெய்ய முடியாததாகும். தமிழ் மக்களின் பிரச்சினைக்காக உணர்வுபூர்வமாக குரல் கொடுத்த ஒரு தலைவர் அவர் என்று தமிழ் தேசிய கூட்டமைப்பின் பேச்சாளர் பாராளுமன்ற உறுப்பினர் எம்.ஏ.சுமந்திரன் தெரிவித்தார். 

வெளியுறவுத்துறை அமைச்சராக இருந்த போது தமிழ் மக்களின் பிரச்சினை தொடர்பில் மிகக் கவனமாக செயற்பட்ட ஒரு தலைவராவார். குறிப்பாக இலங்கைக்கு வருகை தந்த அனைத்து சந்தர்ப்பங்களிலும் தமிழ் தேசிய கூட்டமைப்பை சந்திக்க அவர் தவறியதில்லை என்பதோடு அது போன்ற அனைத்து சந்தர்ப்பங்களிலும் தமிழ் மக்களின் பிரச்சினை தொடர்பில் கவனம் செலுத்தியிருந்தார்.

இந்து சமுத்திர விடயம் தொடர்பாக இலங்கைக்கு வருகை தந்திருந்த போது , தமிழ் தேசிய கூட்டமைப்பின் தலைவர் இரா.சம்பந்தனையும் என்னையும் சந்தித்து பேசியிருந்த அவர் , தமிழ் மக்களுக்கு விரைவில் அரசியல் தீர்வினை வழங்குமாறு ஜனாதிபதி மற்றும் பிரதமருக்கு மிகவும் தீர்க்கமாகக் கூறியுள்ளதாகத் தெரிவித்தார். 

சுஷ்மா சுவராஜ் எதிர்க்கட்சி தலைவராக இருந்த போது இந்திய பாராளுமன்ற குழுவிற்கு தலைமை தாங்கி இலங்கைக்கு வருகை தந்திருந்தார். இந்த விஜயத்தின் போது இலங்கை தமிழ் மக்கள் பிரச்சினை தொடர்பில் காத்திரமான அறிக்கையொன்றையும் வெளியிட்டிருந்தார். மஹிந்த ராஜபக்ஷ ஆட்சி காலத்தில் இரா.சம்பந்தனுடன் இணைந்து விரைவில் அரசியல் தீர்வினை வழங்குமாறு வலியுறுத்தியிருந்தார். 

தமிழர் தொடர்பான பிரச்சினைகள் மாத்திரமின்றி ஏனைய பல விடயங்களிலும் அவர் அவதானம் செலுத்தியதோடு மாத்திரமின்றி அவற்றுக்கான தீர்வினை வழங்கியுள்ளார். கடந்த காலங்களில் இந்திய மீனவர்கள் இலங்கை கடற்பரப்பிற்குள் அத்துமீறி மீன் பிடி நடவடிக்கையில் ஈடுபடுகின்றமை தொடர்பில் ஆராய்வதற்காக அமைச்சர் மங்கள சமரவீர மற்றும் முன்னாள் அமைச்சர் மஹிந்த அமரவீர ஆகியோருடன் நானும் இந்தியா சென்றிருந்தேன். 

அதன் போது இந்திய மீனவர்கள் இலங்கை கடற்பரப்பிற்குள் அத்துமீறி மீன்பிடிக்கின்றமை தவறு என்று குறிப்பிட்டிருந்தார். அத்தோடு இவரது தலையீட்டிலேயே இழுவைப்படகுகள் முற்றாக தடை செய்யப்பட்டன. அவை தொடர்பான முழுமையான அறிக்கையும் இவரால் வெளியிடப்பட்டது. 

தனது தரப்பில் அழுத்தங்கள் பிரயோகிக்கப்பட்டாலும் நியாயத்தின் பக்கம் நின்று அதற்காக போராடிய இவரது இழப்பு ஈடுசெய்ய முடியாதது. தமிழ் தேசிய கூட்டமைப்பு தனது ஆழ்ந்த இரங்கலையும் தெரிவிக்கின்றது என்றும் சுமந்திரன் தெரிவித்தார். 

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

மக்கள் விடுதலை முன்னணியினால் அன்று செய்த...

2024-04-20 01:44:10
news-image

சு.க. ஆதரவாளர்கள் ஐக்கிய மக்கள் சக்தியுடன்...

2024-04-20 00:07:16
news-image

ஈரானிய ஜனாதிபதியின் விஜயம் தொடர்பில் எதிர்ப்பை...

2024-04-20 00:05:28
news-image

துன்பப்படும் மக்களுக்கு பக்கபலத்தை வழங்கிய சிறந்ததொரு...

2024-04-19 23:45:02
news-image

கடற்படை வீரர்கள் இருவர் உட்பட 4...

2024-04-19 22:16:12
news-image

சிறுமியின் மரணத்திற்கு நீதி கோரி தரணிக்குள...

2024-04-19 20:36:49
news-image

சர்வோதய ஸ்தாபகர் ஏ.டி. ஆரியரத்னவின் பூதவுடலுக்கு...

2024-04-19 19:21:27
news-image

பாலித தெவரப்பெருமவின் பூதவுடலுக்கு ஜனாதிபதி இறுதி...

2024-04-19 18:46:10
news-image

கோழி இறைச்சியின் விலை குறைப்பு!

2024-04-19 18:33:17
news-image

பொலிஸாரிடமிருந்து தப்பிச் செல்ல முயன்ற நபர்...

2024-04-19 18:10:41
news-image

உயிர்த்த ஞாயிறு தாக்குதல்கள் குறித்து சர்வதேச...

2024-04-19 17:53:19
news-image

கனடாவில் 6 இலங்கையர்களைக் கொலை செய்த...

2024-04-19 17:53:58