தாய்நாட்டிற்கு பெருமை சேர்த்தவர்களுக்கு ,வீடுகளை நிர்மாணிப்பதற்கான கடிதம் வழங்கி கௌரவித்த அமைச்சர் திகா..!

Published By: J.G.Stephan

07 Aug, 2019 | 01:25 PM
image

சீனாவில் இடம்­பெற்ற 53 ஆவது ஆசிய ஆண­ழகர் போட்­டியில் இலங்­கையை பிர­தி­நி­தித்­துவம்  செய்து போட்­டி­களில் பங்­கு­பற்­றிய புசல்­லா­வைப்­ ப­கு­தி­யைச் ­சேர்ந்த மாதவன் ராஜ்­குமார் மூன்றாம் இடத்­தைப்­பெற்று வெண்­கலப் பதக்கம் வென்­றமை அனை­வரும் அறிந்­ததே.

சீனாவின் ஹேர்பின் நகரில் கடந்த 26ஆம் திகதி முதல் 29ஆம் திகதி வரை நடை­பெற்ற இப்­போட்­டியில்  கடந்த ஞாயிற்­றுக்­கி­ழமை இடம்­பெற்ற  ஆண்­க­ளுக்­கான 60 கிலோ எடைப் பிரி­விலும், 23 வய­துக்­குட்­பட்ட கனிஷ்ட சம்­பி­யன்ஷிப் போட்டிப் பிரி­விலும் கள­மி­றங்­கிய ராஜ்­குமார், பலத்த போட்­டிக்கு மத்­தியில் மூன்­றா­வது இடத்தைப் பெற்று இலங்­கைக்­கான முத­லா­வது பதக்­கத்தைப் பெற்றுக் கொடுத்தார். இப்­போட்­டியில் 30 நாடு­க­ளைச் ­சேர்ந்த வீரர்கள் பங்­கு­பற்­றி­யி­ருந்­தமையும் குறிப்­பி­டத்­தக்­கது.

 இந்­நி­லையில் வெற்றி பதக்­கத்­துடன் நாடு திரும்­பிய ராஜ்­கு­மா­ருக்கு விமான நிலை­யத்­திலோ அல்­லது விளை­யாட்டு அமைச்­சிலோ உரிய வர­வேற்பு வழங்­கப்­ப­ட­வில்லை என விசனம் தெரி­விக்­கப்­பட்­டுள்­ளது. மட்­டு­மன்றி விளை­யாட்டு அமைச்சில் அவ­ருக்கு சாதா­ரண ஒரு தேநீர் கோப்­பையை பரி­ச­ளித்­தமை தமிழ் மக்­க­ளி­டையே கடும் விச­னங்ளகள் எழுந்திருந்தபோதிலும், அது முற்றிலும் முரணானது எனவும், இங்கு இன மத பேதங்கள் பார்ப்பக்கபடவில்லையென்பதற்கு சான்றாக அண்மையில், மாதவன் ராஜகுமாருக்கு பணப்பரிசு வழங்குவற்கான நடவடிக்கை எடுக்கப்படும் என விளையாட்டுத் துறை அமைச்சர்  ஹரீன் பெர்ணான்டோ தெரிவித்துள்ளார்.

அத்தோடு, இலங்கைக்கும் மலையகத்திற்கும் பெருமை சேர்த்த மாதவன் ராஜ்­குமார் மற்றும் சன்முகேஸ்வரன் ஆகியோரை கௌரவிக்கும் நிகழ்வு நேற்று (06.08.2019) மலைநாட்டு புதிய கிராமங்கள் உட்கட்டமைப்பு மற்றும் சமுதாய அபிவிருத்தி அமைச்சின் கேட்போர் கூடத்தில் இடம்பெறுள்ளது. இதில், மிஸ்டர் மலையகம் (Mr. Malaiyagam) சன்முகேஸ்வரன் ஹோர்ஸ் ஒப் மலையகம் (Horse of Malaiyagam) என பெயர் சூட்டி கௌரவிக்கப்பட்டதோடு அவர்களுக்கான 7 பேர்ச் காணியில் 10 லட்ச ரூபா பெறுமதியான வீட்டினை நிர்மாணிப்பதற்கான உத்தியோகபூர்வ கடிதங்களை அமைச்சர் பழனி திகாம்பரம் வழங்கி வைத்துள்ளார். அத்தோடு, நுவரெலியா மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் ம.திலகராஜா அவர்களால் ராஜ்­குமாரிற்கு நினைவு பரிசொன்றையும் வழங்கி வைத்துள்ளார் என்பதுவும் குறிப்பிடதக்கது. 

இந்நிகழ்வில் நுவரெலியா மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் ம.திலகராஜா, மத்திய மாகாணசபை முன்னாள் உறுப்பினர்களான சோ ஸ்ரீதரன், ராம், சரஸ்வதி சிவகுரு அமைச்சரின் இணைப்பு செயலாளர் ஜி.நகுலேஸ்வன் உட்பட பலரும் கலந்துகொண்டிருந்தமையும் குறிப்பிடதக்கது. 



முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

வீராங்கனையை முத்தமிட்ட ஸ்பானிய கால்பந்து சம்மேளன...

2024-03-29 09:43:13
news-image

ரியான் பரக்கின் அதிரடி ராஜஸ்தானை வெற்றிபெறச்...

2024-03-29 00:52:31
news-image

19 வயதின் கீழ் ஆஸி. அணியை...

2024-03-28 20:03:31
news-image

இலங்கை கால்பந்தாட்ட அணி, ஜனாதிபதியை சந்தித்தது

2024-03-28 17:49:42
news-image

எஸ்.எஸ்.சி.யின் 125 வருட கொண்டாட்ட விழா...

2024-03-28 13:22:56
news-image

பங்களாதேஷுடனான 2ஆவது டெஸ்ட்: உபாதைக்குள்ளான ராஜித்தவுக்குப்...

2024-03-28 13:22:16
news-image

19இன் கீழ் மகளிர் மும்முனை கிரிக்கெட்...

2024-03-28 00:56:33
news-image

சாதனைகள் படைக்கப்பட்ட ஐபிஎல் போட்டியில் மும்பையை...

2024-03-28 00:04:56
news-image

சில்ஹெட் டெஸ்டில் தலா 2 சதங்கள்...

2024-03-27 22:22:22
news-image

இலங்கையில் மகளிர் ரி20 ஆசிய கிண்ண...

2024-03-27 22:09:33
news-image

குஜராத்தை வீழ்த்தி இரண்டாவது நேரடி வெற்றியை...

2024-03-27 01:34:06
news-image

ஐ.பி.எல் 2024 : குஜராத் டைட்டன்ஸ்...

2024-03-26 23:43:35