இலங்கையில் தடுத்து வைத்துள்ள 7 மீனவர்களை மீட்டுத்தருமாறு குடும்பத்தினர் கோரிக்கை..!

Published By: Daya

07 Aug, 2019 | 02:12 PM
image

“இலங்கை சிறையில் தடுத்து வைக்கப்பட்டுள்ள ராமேஸ்வரம் மீனவர்கள் 7 பேரையும் உடனடியாக மீட்க வேண்டும்” என்று கோரி குறித்த மீனவர்களின் குடும்பத்தினர் ராமநாதபுரம் மாவட்ட கலெக்டரிடம் மனு அளித்தனர்.

ராமநாதபுரம் மாவட்டம் ராமேஸ்வரம் மல்லிகா நகரைச் சேர்ந்த துரைசிங்கம் என்பவரின் படகில் கடந்த 27ஆம் திகதி 7 மீனவர்கள் மீன்பிடிக்கச் சென்றனர். இவர்கள், இந்திய கடல் எல்லைக்குட்பட்ட கச்சத்தீவு பகுதி அருகே மீன்பிடித்துக் கொண்டிருந்தபோது ஏற்பட்ட இயந்திரக் கோளாறு காரணமாக, படகை மீண்டும் கரைக்கு கொண்டுவர முடியாத நிலை ஏற்பட்டது. 

அப்போது அங்கு வந்த இலங்கை கடற்படையினர், ராமேஸ்வரம் மீனவர்களின் படகை சுற்றிவளைத்து, எல்லைதாண்டி மீன்பிடித்ததாகத் தெரிவித்து படகில் இருந்த சத்திய சீலன், நாகராஜன், இன்னாசி, பெனிட்டோ, முனியசாமி, ஜோசப் பால்ராஜ், சுப்பிரமணி ஆகிய 7 பேரையும் கைது செய்து மன்னார் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தினர். பின்னர் 7 மீனவர்களும் வவுனியா சிறையில் அடைக்கப்பட்டனர்.

மீனவர்கள் சிறைபிடிக்கப்பட்டுள்ளதால் மிகுந்த மன வேதனை அடைந்த அவர்களின் குடும்பத்தினர், தமிழ்நாடு மீனவர் உரிமை பாதுகாப்பு இயக்க நிறுவனர் தீரன் திருமுருகன் தலைமையில் ராமநாதபுரம் கலெக்டர் அலுவலகத்திற்கு வந்தனர்.

அங்கு, கலெக்டர் வீர ராகவராவை சந்தித்த அவர்கள், “இலங்கை சிறையில் உள்ள 7 மீனவர்களை உடனடியாக மீட்டு கொண்டுவர மத்திய - மாநில அரசுகள் மூலம் நடவடிக்கை எடுக்க வேண்டும்” என்று கண்ணீர் மல்க கோரிக்கை மனு கொடுத்தனர்.

மனுவை பெற்றுக்கொண்ட கலெக்டர் வீர ராகவராவ், இதுகுறித்து அரசின் கவனத்திற்கு கொண்டு சென்று, 7 பேரையும் மீட்க நடவடிக்கை எடுப்பதாக உறுதி அளித்தார். இதையடுத்து அவர்கள் ஊருக்கு புறப்பட்டு சென்றனர்.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

ஈரானின் அணுஉலைகளிற்கு பாதிப்பில்லை - ஐநா...

2024-04-19 12:04:21
news-image

இஸ்ரேல் தாக்குதல் மேற்கொண்ட நகரத்தில் அணுஉலை...

2024-04-19 11:47:29
news-image

இந்தியாவின் 18 ஆவது பாராளுமன்ற தேர்தல்...

2024-04-19 11:45:04
news-image

இஸ்ரேல் தாக்குதலை மேற்கொண்ட நகரமே ஈரானின்...

2024-04-19 11:01:21
news-image

பாதுகாப்பு நிலவரம் மோசமடையலாம் - இஸ்ரேலில்...

2024-04-19 10:38:00
news-image

ஈரான் மீது இஸ்ரேல் தாக்குதல் -...

2024-04-19 10:28:27
news-image

ஈரான் மீது இஸ்ரேல் ஏவுகணை தாக்குதல்

2024-04-19 09:31:45
news-image

2024ம் ஆண்டுக்கான 100 செல்வாக்கு மனிதர்களில்...

2024-04-18 15:14:29
news-image

சிட்னி வணிகவளாக தாக்குதலில்துணிச்சலாக செயற்பட்டவருக்கு அவுஸ்திரேலியாவின்...

2024-04-18 17:05:27
news-image

என்மீது தாக்குதல் மேற்கொண்டவரை மன்னித்துவிட்டேன் -...

2024-04-18 11:24:08
news-image

புனித உம்ரா, சுற்றுலா மன்றத்தை ஏப்ரல்...

2024-04-18 17:16:17
news-image

இஸ்ரேல் பதில் தாக்குதலை மேற்கொள்ள தீர்மானித்துள்ளது...

2024-04-18 10:58:52