(க.கிஷாந்தன்)

 

அக்கரப்பத்தனை பொலிஸ் பிரிவுக்குட்பட்ட டெல் தோட்டத்திலுள்ள தேயிலை மலையிலிருந்து உயிருடன் சிறுத்தைக் குட்டியொன்று இன்று மீட்கப்பட்டுள்ளது.

 

தேயிலைத் தோட்டத்தில் இன்று காலை வேலை செய்துகொண்டிருந்த தொழிலாளர்கள், சிறுத்தைக் குட்டியொன்று தேயிலைச் செடிக்குள் பதுங்கி இருப்பதைக் கண்டுள்ளனர். 

இதனையடுத்து,தொழிலாளர்கள் அனைவரும்  இணைந்து சிறுத்தைக் குட்டியை பிடித்துள்ளனர்.

 

தோட்ட நிர்வாகத்தின் வேண்டுகோளுக்கு இணங்க, மாவட்ட வன ஜீவராசிகள் திணைக்கள அதிகாரிகளுக்கும் அக்கரப்பத்தனை பொலிஸாருக்கும் இது குறித்த தகவல் வழங்கியுள்ளனர்.

 

சம்மந்தப்பட்ட இடத்திற்கு சென்ற நுவரெலியா மாவட்ட வன ஜீவராசிகள் திணைக்கள அதிகாரிகள் குறித்த சிறுத்தைக் குட்டியை மீட்டுக் கொண்டு சென்றுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.