UPDATE : பாது­காப்பு செயற்­பா­டுகள் மந்த நிலையிலே - பாதுகாப்பு இராஜாங்க அமைச்சர்

Published By: Vishnu

07 Aug, 2019 | 10:24 AM
image

(ஆர்.யசி )

கடந்த காலங்­களில் பாது­காப்பு செயற்­பா­டுகள் மந்த நிலையில் கையா­ளப்­பட்­டன என்­பதை நான் உணர்­கிறேன். பாது­காப்பு அமைச்சின் ஒரு நிலை­யா­னதும் உறு­தி­யா­ன­து­மான  நிலைப்­பாடு இருக்­க­வில்லை. ஜனா­தி­ப­திக்கும் அர­சாங்­கத்­திற்கும் இடை­யி­லான முரண்­பா­டு­களே இதற்­கான காரணம் என நான் நினைக்­கிறேன், அதேபோல் நான் பாது­காப்பு இரா­ஜாங்க அமைச்­ச­ராக இருந்­தாலும் எனக்கு தீர்­மானம் எடுக்கும் அதி­கா­ரங்கள் இருக்­க­வில்லை எனவும்  பாது­காப்பு இரா­ஜாங்க அமைச்சர் ருவான் விஜ­ய­வர்­தன பாரா­ளு­மன்ற தெரி­வுக்­குழு முன்­னி­லையில்  நேற்று சாட்­சி­ய­ம­ளிக்­கையில்  தெரி­வித்தார். 

உயிர்த்த ஞாயிறு தாக்­குதல் குறித்து விசா­ரணை நடத்தி பாரா­ளு­மன்­றத்­திற்கு அறிக்கை சமர்ப்­பிக்க நிய­மிக்­கப்­பட்ட விசேட பாரா­ளு­மன்ற தெரி­வுக்­குழு முன்­னி­லையில் நேற்று செவ்­வாய்க்­கி­ழமை சாட்­சி­ய­ம­ளிக்க வர­வ­ழைக்­கப்­பட்ட பாது­காப்பு இரா­ஜாங்க அமைச்சர் ருவான் விஜ­ய­வர்­தன தெரி­வுக்­குழு முன்­னி­லையில்  இவ்­வாறு சாட்­சி­ய­ம­ளித்தார்.   அவரின் சாட்­சியம் வரு­மாறு, 

குழு :- உங்­களை இங்கு அழைக்க சில கார­ணிகள் உள்­ளன, இதற்கு முன்னர் விசா­ர­ணை­களை முன்­னெ­டுத்தபோது சில கார­ணிகள் முன்­வைக்­கப்­பட்­டன. நீங்கள் பாது­காப்பு இரா­ஜாங்க அமைச்­ச­ராக இருக்­கின்ற காலத்தில் இது குறித்து உங்­களின் நினை­விலுள்­ள­வற்றை கூற முடி­யுமா?

பதில்:- 2017 ஆம் ஆண்டு பாது­கப்பு சபைக் கூட்­டத்தில் காத்­தான்­குடி பிர­தேச  மோதல் குறித்து பேசப்­பட்­டது. பயங்­க­ர­வாத நபர்கள் குறித்து பேச­வில்லை. அப்­போது சட்டம் ஒழுங்கு அமைச்சும் வேறு அமைச்­ச­ரிடமிருந்­தது. எவ்­வாறிருப்­பினும் உயிர்த்த ஞாயிறு தாக்­குதல் ஒன்று இடம்­பெறும் என்ற கார­ணிகள் பேசப்­ப­ட­வில்லை. தாக்­கு­தலின் பின்னர் தான் இந்த தாக்­குதல் குறித்த முன்­கூட்­டிய தக­வல்கள் பகி­ரப்­பட்­டமை குறித்து அறிந்து கொண்டேன். 

தாக்­கு­தலின் பின்னர் முதல் கூட்­டத்தை  கூட்ட எவரும் ஒத்­து­ழைப்பு வழங்­க­வில்லை. பாது­காப்பு செய­லா­ளரை தொடர்­பு­கொண்ட போது அவர்­களும் களத்தில் இருந்­தனர். தாக்­குதல் இடம்­பெற்ற இடங்­களில் அதி­கா­ரிகள் இருந்­தனர். பின்னர் கூட்­டப்­பட்ட பாது­காப்பு கூட்­டத்தில்  இந்த தாக்­கு­தல்கள்  நிலை­மைகள் குறித்து பேசினோம். பிர­த­மரும் தொலை­பே­சியில்  என்­னிடம் தொடர்­பு­கொண்டு பேசினார். கொழும்­புக்கு வெளிப் பிர­தே­சத்தில் இருக்­கின்ற கார­ணத்­தினால் அவர் வந்­த­வுடன் உட­ன­டி­யாக  கூட்ட நட­வ­டிக்கை எடுக்கக் கூறினார். அவர்  கொழும்­புக்கு வந்­த­வுடன் பாது­காப்பு கூட்­டத்தை கூட்ட கூறினார். ஆனால் அதனைக் கூட்ட அதி­கா­ரிகள் அக்­கறை காட்­ட­வில்லை. ஒரு மணி­நே­ரத்தின் பின்னர் மீண்டும்  பிர­தமர் அழைத்தார். அப்­போதும் பாது­காப்பு அதி­கா­ரிகள் அக்­கறை செலுத்­த­வில்லை. மூன்­றா­வது தட­வை­யாக பிர­தமர் தொலை­பே­சியில் அழைத்து நீங்கள் இங்கு வர­வில்லை என்றால் நான் அங்கு வரவா என கேட்டார். இங்கு நிலை­மைகள் சரி­யில்லை நீங்கள் இங்கு வந்தால் நல்­லது  என கூறினேன். அவர் பாது­காப்பு அமைச்­சுக்கு வந்தும் காத்­தி­ருந்தார். பின்­னரே கூட்டம் நடத்­தப்­பட்­டது. 

கேள்வி:- பாது­காப்பு இரா­ஜாங்க அமைச்­ச­ராக உங்­களின் அதி­காரம் என்ன ?

பதில்:- நான் பாது­காப்பு இராஜாங்க அமைச்­ச­ராக இருந்த காலத்தில் எனக்­கி­ருந்த அதி­கா­ரங்கள் முப்­ப­டையோ அல்­லது புல­னாய்வு அதி­கா­ரமோ அல்ல.  நலன்­புரி, மற்றும் சில சாதா­ரண விட­யங்­களை நான் கையாள்­கிறேன். எனக்கும் பாது­காப்பு கூட்­டத்தில் பேசும் விட­யங்­களே தெரியும். புல­னாய்வு  குழுக்கூட்­டங்­களில் பேசும் விட­யங்­களும் தெரியும்.

கேள்வி:- நீங்கள் பத­வியில் இருந்­தாலும் அதி­காரம் இல்­லையா ?

பதில்:- ஆம், வர்த்­த­மா­னியில் எனக்­கான அதி­கா­ரங்கள்  இருந்­தாலும் நடை­மு­றையில் அவ்­வாறு இல்லை.

கேள்வி:- அப்­ப­டி­யென்றால்  பாது­காப்பு அமைச்­ச­ருக்கா அதி­காரம் இருந்­தது? 

பதில்:- முப்­படை அதி­கா­ரங்கள் மற்றும் நிரு­வாக அதி­கா­ரங்கள்  ஜனா­தி­ப­தி­யி­டமே  உள்­ளன. 

கேள்வி:- நீங்கள் பாது­காப்பு சபை கூட்­டத்தில் உறுப்­பி­ன­ராக உள்­ளீர்­களா?

பதில்:- கடந்த ஆண்டு அர­சியல் புரட்­சியின் பின்னர் என்னை அழைக்­க­வில்லை, அதற்கு முன்னர் இருந்தேன். 51 நாட்கள் அர­சியல் பிரச்­சி­னையில்  அர­சாங்­கத்­திற்கும் ஜனா­தி­ப­திக்கும் இருந்த முரண்­பா­டுகள் கார­ண­மாக அதன் பின்னர் என்னை அழைக்­க­வில்லை.

கேள்வி:- பாது­காப்பு கூட்­டத்தில் சஹ்ரான் குறித்து பேசவே இல்­லையா? 

பதில்:- அப்­போது காத்­தான்­குடி பள்­ளி­வாசல் மோதல் மற்றும் அடிப்­ப­டை­வாத குழுக்கள் குறித்தும், சிரி­யா­வுக்கு சென்ற குடும்பம்  குறித்தும் பேசப்­பட்­டது. அதற்கு அப்பால் பயங்­க­ர­வாத  தாக்­குதல் குறித்து பேசப்­ப­ட­வில்லை.முஸ்லிம் அடிப்­ப­டை­வாதம் என்ற கதை­களும்  சிரியா சென்ற குடும்பம் மற்றும் காத்­தான்­குடி பிர­தேச சம்­பவம் ஆகிய விட­யங்கள்  மட்­டுமே பேசப்­பட்­டன.

கேள்வி:- பாது­காப்பு குழுக்கூட்­டத்தில்  பேசப்­ப­டு­கின்­றதே தவிர  நட­வ­டிக்கை எடுக்­க­ப்ப­டு­வ­தில்­லையா ?

பதில் :- இல்லை, நட­வ­டிக்­கைகள் எடுக்­கப்­பட்­டுள்­ளன.  

கேள்வி:- மாவ­னல்லை பிரச்­சி­னையில் தான் இது ஆரம்­ப­மா­கி­யுள்­ளது. இது குறித்து பேசப்­ப­ட­வில்­லையா ?

பதில்:- அந்த காலத்தில் நான் பாது­காப்பு குழுக்கூட்­டங்­க­ளுக்கு செல்­வ­தில்லை. ஆனால் பேசப்­பட்­டி­ருக்கும் என நம்­பு­கிறேன். 

கேள்வி:- நீங்கள் புல­னாய்வு கூட்­டங்­க­ளுக்கு  தலைமை தாங்­கி­ய­தாக கூறப்­ப­டு­கின்­றமை உண்­மையா ?

பதில்:- நான் தலைமை தாங்­க­வில்லை, பாது­காப்பு செய­லாளர் கூட்­டங்­களை கூட்­டுவார். நான் கூட்­டங்­களில் கலந்­து­கொண்டு நடத்­தி­யுள்ளேன். ஆனால் முழு­மை­யாக அவ்­வாறு  கூறவும் முடி­யாது. 

கேள்வி:- யார் உங்­க­ளுக்கு அழைப்பு விடுப்­பார்கள் ? 

பதில்:- பாது­காப்பு செய­லாளர் 

கேள்வி:- எவ்­வாறு இருந்­தாலும் வழ­மை­யாக கூட்டம் நடப்­பது   உங்­க­ளுக்கு தெரியும் தானே ?

பதில்:- ஆம்

கேள்வி:- நீங்கள் எவ்­வா­றான தீர்­மா­னங்­களை புல­னாய்வு கூட்­டங்­களில் எடுத்­தீர்கள் ?

பதில்:- பெரும்­பாலும் தீர்­மா­னங்­களை பாது­காப்பு குழுக்கூட்­டங்­க­ளுக்கு கொண்­டு­செல்­வ­துண்டு. 

கேள்வி:- புல­னாய்வு  கூட்­டங்கள் மற்றும் பாது­காப்பு கூட்­டங்­களில் காத்­தான்­குடி மோதல் குறித்து வெறு­மனே பேசப்­பட்­டுள்­ளமை மற்றும் சிரியா சென்­ற­வர்கள் குறித்தும் பேசப்­பட்­டுள்­ளமை தவிர வேறு எந்த கார­ணிகள் குறித்தும் பேச­வில்லை.  அப்­ப­டியா ?

பதில்:- அப்­படி அல்ல. சமூ­கங்­க­ளுக்கு இடையில் முரண்­பா­டுகள் பற்­றியும் பேசி­யுள்ளோம். பயங்­க­ர­வாதம் குறித்து பேச­வில்லை.

கேள்வி:- உங்­க­ளுக்கு முறைப்­பா­டுகள் முன்­வைக்­கப்­பட்­டுள்­ளதா ?

பதில்:- மட்­டக்­க­ளப்­புக்கு நான் சென்­ற­போது பல முஸ்லிம் மக்கள் கூறி­னார்கள். ஆனால் காத்­தான்­கு­டியின் அமை­தி­யின்மை குறித்து ஏற்­க­னவே அறிந்து வைத்­தி­ருந்தோம். எனினும்  பயங்­க­ர­வாத அமைப்­பொன்று உரு­வா­வது குறித்து அறிந்­தி­ருக்­க­வில்லை. 

கேள்வி:- நீங்கள் எப்­போது பாது­காப்பு கூட்­டங்­களில்  கலந்­து­கொண்­டீர்கள் ?

பதில்:- அர­சியல் பிரச்­சி­னைக்கு முன்னர் கலந்­து­கொண்டேன். ஒக்­டோபர்  2 ஆம் திகதி. 

கேள்வி:- பாது­காப்பு புல­னாய்வு  கூட்­டத்தில்  எப்­போது இறு­தி­யாக சென்­றீர்கள் ?

பதில்:-   அர­சியல்  பிரச்­சி­னைக்கு முன்னர்.

கேள்வி:-  பாது­காப்பு கூட்­டத்­துக்கு அழைக்­கப்­ப­டு­வீர்கள் என்­பதை எதிர்­பார்த்­தீர்­களா?  

பதில்:- இல்லை 

கேள்வி:- கடந்த  அர­சியல் புரட்­சிக்கு பின்­னரில் இருந்து ஏப்ரல் தாக்­குதல் வரையில் பாது­காப்பு கூட்டம் குறித்து பாது­காப்பு செய­லா­ள­ரிடம்  நீங்கள் கேட்­க­வில்­லையா ?

பதில்:- நான் பாது­காப்பு செய­லா­ள­ரிடம் பேசினேன். பாது­காப்பு கூட்டம் கூடு­வது இல்லை என அவர் கூறினார். முப்­படை மற்றும் புல­னாய்வு துறை­யுடன்  ஜனா­தி­பதி தேவைப்­பட்டால் பேசி தீர்­மானம் எடுக்­கலாம்   என்றார்.

கேள்வி:- நீங்கள் பாது­காப்பு இரா­ஜாங்க அமைச்சர், ஜனா­தி­பதி  பாது­காப்பு அமைச்சர். ஏன் நீங்கள் ஜனா­தி­ப­தி­யிடம் நேர­டி­யாக இது குறித்து கேட்­க­வில்லை? 

பதில்:- நான் அவ்­வாறு கேட்­க­வில்லை. அப்­போது இருந்த அர­சியல் நெருக்­க­டியில் ஒரு மட்­டத்தில் முரண்­பா­டுகள் இருந்த கார­ணத்­தினால் என்னை அழைக்­கா­மைக்கு    கார­ண­மாக இருந்­தி­ருக்­கலாம்  என நினைத்தேன். ஆனால் பாது­காப்பு குழுக்கூட்டம் கூட்­டப்­ப­ட­வில்லை என்­பதை செய­லாளர் மூல­மாக அறிந்­து­கொண்டேன். 

கேள்வி:- புல­னாய்வு கூட்­டங்­க­ளி­லுமா  கேட்­க­வில்லை?

பதில்:- மார்ச் மாதத்தில் கேட்டேன். அடுத்த கூட்­டத்­துக்கு அழைப்பு விடுப்­ப­தாக கூறி­னார்கள். ஆனால் அழைக்­கப்­ப­ட­வில்லை.  அர­சியல் முரண்­பா­டுகள் தான் கார­ண­மாக இருக்கும் என நினைத்தேன். 

கேள்வி:-  இந்த கூட்­டங்கள் இடம்­பெ­று­வது உங்­க­ளுக்கு தெரி­யுமா?

பதில்:- தெரியும். ஆனால் அழைப்பு விடுக்­கப்­ப­ட­வில்லை.

கேள்வி:- நீங்­களும் பாது­காப்பு அமைச்சின் கட்­டி­டத்தில் இருப்­பதால், இவ்­வாறு கூட்­டங்கள் கூடு­கின்­றன என்­பது உங்­க­ளுக்கு தெரி­யாதா ?

பதில்:- தெரியும், ஆனால் வழ­மை­யாக  அவ்­வாறு வரு­வதால் நான் பொருட்­ப­டுத்­த­வில்லை. 

கேள்வி:- நீங்கள் ஜனா­தி­ப­தி­யிடம் எதிர்ப்பை தெரி­விக்­க­வில்­லையா ?

பதில்:- அதனால் தான் பாது­காப்பு செய­லா­ளரை வின­வினேன். வர்த்­த­மானி அறி­வித்­த­லுக்கு அமைய எனக்கு அதி­கா­ரங்கள் இல்லை. எனினும் நான்  அதி­கா­ரி­க­ளிடம் கேட்டேன். 

கேள்வி:- இந்த விட­யத்தில்  தகவல் பரி­மாற்றல் குறை­பாடு என்­பது தெரி­கின்­றதா ?

பதில்:- தொடர்­பாடல்  இல்­லா­மையே காரணம். புல­னாய்­வு­த்து­றை­யினர் வெவ்­வே­றாக  செயற்­ப­டு­வது எனக்கு தெரிந்­தது. 2015 தொடக்கம் இப்­போது வரையில் ஐந்து பாது­காப்பு செய­லா­ளர்கள்  மாற்­றப்­பட்­டுள்­ளனர். இது­வெல்லாம் குறை­பா­டுகள் தானே. 

கேள்வி:- புல­னாய்வு விட­யங்­களில் உங்­களின் ஒத்­து­ழைப்பை பெற­வில்­லையா ?

கேள்வி:- செவ்­வாய்க்­கி­ழமை கூட்­டங்­களில் நான் கலந்­து­கொண்டேன். சில நேரங்­களில் வேறு வேலை­களில் இருந்தால் நான் செல்லமாட்டேன். இவை அர­சியல் பிரச்­சி­னைக்கு முன்னர்  இருந்த நிலை­யாகும். இந்த கூட்­டங்­களில் பேசும் விட­யங்­களை பாது­காப்பு கூட்­டங்­களில் கொண்டு செல்வேன். 

கேள்வி:- பாது­காப்பு விட­யங்­களில் பாரா­ளு­மன்­றத்தில் நீங்கள் தானே பதில் கூற­வேண்டும்? 

பதில்:- ஆம் 

கேள்வி:- ஆனால் அதி­காரம் வழங்­கப்­ப­ட­வில்லை?

பதில்:- ஆம், தீர்­மானம் எடுக்க எனக்கு அதி­காரம் வழங்­க­வில்லை 

கேள்வி:- அப்­ப­டி­யென்றால் பாரா­ளு­மன்­றத்தில் உங்­க­ளிடம் பொறுப்­புக்­கொ­டுப்­பது நெருக்­க­டி­யான விட­யமா?

பதில்:- ஆம் சற்று கடி­ன­மா­கவே  இருக்கும். 

கேள்வி:- நீங்கள் பாது­காப்பு இரா­ஜாங்க அமைச்சர், உங்­க­ளுக்கு பாது­காப்பு செயற்­பா­டுகள் குறித்து எதுவும் தெரி­யுமா? மன்­னிக்­கவும் உங்­களை அவ­ம­திக்க அவ்­வாறு கேட்­க­வில்லை. 

பதில்:- பர­வா­யில்லை, எனக்கு தெரி­யாது.

கேள்வி:- உங்­க­ளுக்கு இதனை விட அனு­பவம், அறிவு இருந்தால் நல்­ல­தென  நீங்கள் நினைக்­கின்­றீர்­களா ?

பதில்:- ஆம் அவ்­வாறு இருந்­தி­ருந்தால் நல்­லது.  

சரத் பொன்­சேகா:- ஜனா­தி­பதி இல்­லாத நேரங்­களில் நீங்கள் தானே பொறுப்­ப­தி­காரி. அவ்­வாறு இருக்­கையில் ஒன்றும் தெரி­யாது செயற்­பட முடி­யாதே?

பதில்:- ஆம், நீங்கள் கூறு­வது சரிதான். இப்­போது ஓர­ளவு பாது­காப்பு அறிவு  இருக்­கின்­றது. உங்­க­ளிடம் கோரிக்கை விடுக்­கப்­பட்­டது. சட்டம் ஒழுங்கு அமைச்சை  எடுக்க வேண்டும் என்ற எதிர்­பார்ப்பு இருந்­தது. ஆனால் உங்­க­ளுக்கு கிடைக்­க­வில்லை. 

கேள்வி:- புல­னாய்வு அறிக்­கையில்கூட சஹ்ரான் குறித்து அறிந்­தி­ருக்­க­வில்­லையா ?

பதில் :- காத்­தான்­குடி சம்­ப­வத்தில் தான் அறிந்­து­கொள்ள முடிந்­ததே தவிர அவர் பயங்­க­ர­வாத செயற்­பா­டு­களில் இருப்­பதை  அறிந்­து­கொள்ள முடி­ய­வில்லை. 

கேள்வி:- பாது­காப்பு குழுக் கூட்­டத்தில் எப்­போ­தா­வது சஹ்ரான், என்.டி.ஜே குறித்து எடுத்த நட­வ­டிக்கை தொடர்பில்  பாது­காப்பு அமைச்­ச­ரிடமிருந்து கோரிக்கை வந்­த­தாக தெரி­யுமா ?

பதில்:- அவ்­வாறு பதில் கிடைத்­த­தாக நினைவில் இல்லை. பேசப்­பட்­டது. 

கேள்வி:- இதனை தடுக்க எந்த நட­வ­டிக்­கையும் கோரிக்­கையும் வர­வில்­லையா ?

பதில்:- இது சட்டம் நீதி அமைச்­ச­ருக்கு வலி­யு­றுத்­தப்­பட்­டது. விசா­ரணை நடத்த கூறப்­பட்­டது. 

கேள்வி:- குண்டு வெடிக்கும் வரையில் விசா­ர­ணையே இடம்­பெற்­றது. ஜனா­தி­பதி இவற்றை தடுக்க நட­வ­டிக்கை எடுக்­க­வில்­லையா ?

பதில்:- அவ்­வாறு ஒன்றும் இருக்­க­வில்லை. தடுக்க பல வாய்ப்­புகள் இருந்­தன. விசா­ர­ணைகள் சரி­யாக இடம்­பெற்­றி­ருந்தால் தடுத்­தி­ருக்க முடியும் என நினைக்­கிறேன். 

கேள்வி:- அர­சியல் புரட்­சிக்கு முன்னர் எத்­தனை கூட்­டங்கள் நடந்­தன?

பதில்:- எத்­தனை நாட்கள் கூடி­யது என எனக்கு தெரி­யாது. அவ்­வப்­போது ஜனா­தி­பதி தேவைப்­படும் நாட்­களில் கூட்­டுவார். 

கேள்வி:- மாதத்­திற்கு ஒரு தட­வை­யா­வது கூடி­யி­ருக்­குமா ?

பதில்:- ஆம் மாதத்­திற்கு ஒரு முறை கூடி­யி­ருக்கும். ஆனால் முறை­யாக கூட­வில்லை.

கேள்வி:- நீங்கள் பாது­காப்பு அமைச்­ச­ராக இருக்க முன்னர் யார் பத­வியில் இருந்­தது ?

பதில்:- அவ்­வாறு இருக்­க­வில்லை, இறு­தி­யாக லலித் அது­லத்­மு­தலி இருந்தார்.

கேள்வி:- உங்­க­ளுக்கு வழங்­கி­யுள்ள அதி­கா­ரத்தில் நான்கு அதி­கா­ரங்கள் வழங்­கப்­பட்­டுள்­ளன. அதற்கு அப்பால் அதி­கா­ரங்கள் உள்­ளதா?

பதில்:- கடந்த ஆண்டு அர­சியல் புரட்­சியின் பின்னர் மேலும் சில அதி­கா­ரங்கள் இருந்­தன. 

கேள்வி:- உங்­களின் அதி­கா­ரங்­களை கொண்டு பாது­காப்பு குழுக் கூட்­டத்தில் பேச ஒன்றும் இல்லை என்றே நினைக்­கிறேன் ?

பதில்:- ஆம் எனக்கு உள்ள அதி­கா­ரங்கள் கொண்டு பேச ஒன்றும் இல்லை. 

கேள்வி:- அப்­ப­டி­யென்றால் புல­னாய்வு கூட்­டங்­களில் தலை­மை­யேற்று நடத்த எங்­கி­ருந்து அதி­காரம் கிடைக்கும் ?

பதில்:- அவ்­வாறு எங்­கி­ருந்தும் வராது கூட்­டங்­க­ளுக்கு அழைப்­பார்கள்.

கேள்வி:- இந்த கூட்­டங்­க­ளுக்கு ஜனா­தி­பதி வரு­வாரா ?

பதில்:- இல்லை.

கேள்வி:- நீங்கள் செல்­லாத நேரங்­களில் யார் உங்­க­ளுக்கு நடந்­த­வற்றை கூறு­வார்கள் ?

பதில்:- அவ்­வாறு யாரும் அறி­விக்கமாட்­டார்கள். நான் தலைமை ஏற்­ப­தில்லை. கூட்­டங்­களை முன்­னின்று   நடத்த நபர்கள் உள்­ளனர். புல­னாய்வு அதி­கா­ரிகள் பாது­காப்பு செய­லாளர் உள்­ளனர். 

கேள்வி:- புல­னாய்வு கடி­தத்தை நீங்கள் எப்­போது பார்த்­தீர்கள் ?

பதில்:- தாக்­கு­தலின் பின்னர் 

கேள்வி:- பிர­புக்கள் பாது­காப்பு பிரிவின் மூல­மா­கவும்கூட உங்­க­ளுக்கு அறி­விக்­க­வில்­லையா ?

பதில்:- இல்லை, தாக்­கு­தலின் பின்னர் நானாக கேட்டேன். கடிதம் கிடைத்­த­தாக கூறினர். ஏன் எனக்கு கூற­வில்லை என கேட்டேன்.  எமது கடமை உங்­களை பாது­காப்­பது மாறாக உங்­க­ளுக்கு கூறு­வ­தில்லை என அதற்கும் பதில் கூறி­னார்கள். 

கேள்வி:- திகன சம்­ப­வத்தின் பின்னர்கூட இந்த இஸ்­லா­மிய அமைப்­புகள் அடிப்­ப­டை­வாத குழுக்கள் குறித்து பேச­வில்­லையா ?

பதில் :- இல்லை. 

கேள்வி:- அரச புல­னாய்வு அதி­கா­ரி­யுடன் உங்­களின் தொடர்பு எவ்­வாறு உள்­ளது ?

பதில்:- அவ்­வப்­போது பேசிக்­கொள்வோம். ஆனால் அவர்­களின் பொறுப்பில் அவர்­களின் தொடர்­பாடல் கட்­ட­மைப்பு ஒன்று உள்­ளது. அவ்­வப்­போது பேசி சம்­ப­வங்கள் குறித்து அறி­விப்பார். 

கேள்வி:- தாக்­குதல் குறித்த தகவல் ஏப்ரல் நான்காம் திகதி கிடைத்து 9 ஆம் திகதி உறு­திப்­ப­டுத்­தப்­பட்­டுள்­ளது. உங்­க­ளுக்கு எதுவும் அறி­விக்­கப்­ப­ட­வில்­லையா ?

பதில்:- இல்லை.

கேள்வி:- இது குறித்து உங்­களின் நிலைப்­பாடு என்ன ?

பதில்:- வருத்­த­ம­ளிக்­கி­றது, எனக்கு எந்த தக­வ­லையும் எவரும் வழங்­க­வில்லை. முன்­னரே இது குறித்து பகி­ரப்­பட்­டுள்­ளது என்­பதை  தாக்­கு­தலின் பின்­னரே அறிந்­து­கொண்டேன். 

கேள்வி:- இந்த பயங்­க­ர­வாதம் குறித்து பாது­காப்பு கூட்­டங்­களில் முக்­கி­யத்­துவம் கொடுக்­க­வில்லை அப்­ப­டித்­தானே ?

பதில்:- இல்லை பேசப்­பட்­டது, ஆனால் பயங்­க­ர­வாதம் வரையில் செல்லும் என கரு­த­வில்லை. 

கேள்வி:- தவ்ஹித் ஜமாஅத் அமைப்பை தடை­செய்ய கூறவும் இல்­லையா ?

பதில்:- அப்­போது கூற­வில்லை. ஆனால் தாக்­கு­தலின் பின்னர் முதல் பாரா­ளு­மன்ற உரையில் நானும்  இந்த அமைப்பை தடை­செய்ய வேண்டும் என்றே கூறினேன். 

கேள்வி:- 21ஆம் திகதி தாக்­கு­தலின் பின்னர் பாது­காப்பு கூட்­டங்­க­ளுக்கு  நீங்கள் சென்றபோது வேறு குண்­டுகள் வெடிக்கும் என்ற அச்­சு­றுத்தல் விடுக்­கப்­பட்­டதா ?

பதில்:- ஆம், இன்னும் ஒன்று அல்­லது இரண்டு குண்­டுகள் வெடிக்க இட­முள்­ளது என புல­னாய்வு அதி­கா­ரிகள் கூறி­னார்கள். 

கேள்வி:- ஏன் வர­வில்லை என எவரும் கூறி­னார்­களா ?

பதில்:- அவ்­வாறு எவரும் கூற­வில்லை. 

கேள்வி:- நீங்கள் கேட்­க­வில்­லையா ?

பதில்:- நான் கேட்டேன், பிர­தமர் பார்த்­துக்­கொண்டுள்ளார் பாது­காப்பு கூட்­டங்­களை கூட்­டுங்கள் என கூறினேன். ஆனால் சற்று பொறுங்கள் என கூறிக்­கொண்டு இருந்­தனர். 

கேள்வி:- இந்த காலங்­களில் ஜனா­தி­பதி நாட்டில் இருக்­க­வில்­லையா ?

பதில் :-இல்லை 

கேள்வி :-இந்த தாக்­குதல் குறித்து நீங்கள்  எவ்­வாறு தெரிந்­து­கொண்­டீர்கள் ?

பதில்:- இந்த தாக்­குதல் குறித்து பிர­தமர் தான் எனக்கு அறி­வித்தார். பாது­காப்புக் கூட்­டத்தை கூட்­டவும் வலி­யு­றுத்­தினார். 

கேள்வி:- தாக்­கு­த­லுக்கு ஆறு மாதங்­க­ளுக்கு முன்­னரே இரா­ஜாங்க அமைச்சர், பிர­தமர், பொலிஸ்மா அதி­பரை பாது­காப்பு கூட்­டங்­களில் அழைக்­க­வில்லை என்பது தெரியுமா ?

பதில்:- அப்போது அறிந்திருக்கவில்லை, பொலிஸ்மா அதிபரை ஒருமுறை சந்தித்த போது அவர் கேட்டார். எனக்கு அழைப்பு வரவில்லை என அப்போது நான் கூறினேன். தனக்கும் அழைப்பு வரவில்லை என்று கூறினார்.  நான்கரை ஆண்டுகளில் எனக்கும் ஒரு எல்லை வகுக்கப்பட்டது. அதற்கு அப்பால் என்னால் செயற்பட முடியவில்லை. 2015ஆம் ஆண்டு எனக்கு அமைச்சு வழங்கப்பட்ட காலத்தில் எனக்கான அதிகாரங்கள் குறித்து ஊடகங்களில் வெளிவந்தது. எவ்வாறு இருப்பினும் எனது எல்லைக்குள் எனது கடமைகளை நான் செய்துள்ளேன். இந்த காலங்களில் பாதுகாப்பு செயற்பாடுகள் மந்த நிலையில் கையாளப்பட்டது என்பதை நான் உணர்கிறேன். பாதுகாப்பு அமைச்சின் ஒரு நிலையான அல்லது உறுதியான நிலைப்பாடு இருக்கவில்லை. அவ்வப்போது அதிகாரிகள் மாற்றப்படுகின்றமை என்றமை முரண்பாடான காரணிகளாக இருந்தது. 

கேள்வி:- ஜனாதிபதிக்கும்  அரசாங்கத்திற்கும் இடையில் இருந்த முரண்பாடுகளா இதற்கு காரணம்?

பதில் :- ஆம், நீங்கள் கூறுவது சரி. 

கேள்வி:- நியூசிலாந்து தாக்குதலுக்கு பழிதீர்க்கும் வகையில் இந்த தாக்குதல் இடம்பெற்றது என கூறினீர்கள் எவ்வாறு அதனை கூறினீர்கள்? 

பதில்:- இன்ஸாப் என்ற பயங்கரவாதி தாக்குதலை நடத்த முன்னர் தனது மனைவிக்கு குரல்பதிவு ஒன்றினை அனுப்பியுள்ளார். அதில் சில காரணிகளை கூறியுள்ளார். சிரியா பிரச்சினை, மியன்மார் மற்றும் கிரைஸ்ட்சேர்ச் தாக்குதல் குறித்தும் பேசியுள்ளார். இது சி.ஐ.டி எனக்கு கூறிய விடயங்கள் அதன் அடிப்படையில்தான் நான் அவ்வாறு கூறினேன்.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

தோட்டத் தொழிலாளர்களுக்கு அடிப்படை நாட்சம்பளமாக 2000...

2024-03-29 01:56:33
news-image

இணையவழி சிறுவர் துஷ்பிரயோகங்களை அறிக்கையிடும் புதிய...

2024-03-29 01:47:30
news-image

பழுதடைந்த உருளைக்கிழங்கு விவகாரம் : மாகாண...

2024-03-29 01:39:20
news-image

இரண்டு மாதங்களில் 983.7 மில்லியன் ரூபா...

2024-03-29 01:36:37
news-image

இராஜாங்க அமைச்சர் சிவநேசதுரை சந்திரகாந்தன் கிளிநொச்சி...

2024-03-29 01:27:15
news-image

அஜித் நிவாட் கப்ரால் உள்ளிட்ட ஐவருக்கு...

2024-03-29 00:17:44
news-image

தேர்தலை தீர்மானிக்க பஷில் ராஜபக்ஷ தேர்தல்...

2024-03-29 00:05:03
news-image

இரண்டாம் காலாண்டுக்குள் கடன்மறுசீரமைப்பு தொடர்பில் இணக்கப்பாடு...

2024-03-28 21:32:55
news-image

பரந்துப்பட்ட அரசியல் கூட்டணியின் ஜனாதிபதி வேட்பாளராக...

2024-03-28 21:31:49
news-image

தேர்தல் செலவின ஒழுங்குபடுத்தல் சட்டம் குறித்து...

2024-03-28 21:37:50
news-image

நாமலுக்கு இன்னும் காலம் இருக்கிறது ;...

2024-03-28 21:33:56
news-image

பாராளுமன்றத்தைப் பிரதிநிதித்துவப்படுத்தாத பதிவு செய்யப்பட்ட அரசியல்...

2024-03-28 21:26:04