துன்புறுத்தல்கள் மற்றும் வன்முறைகளை உடன் அறிவியுங்கள்  : பாதுகாப்பு அமைச்சு பொதுமக்களிடம் கோரிக்கை 

Published By: R. Kalaichelvan

06 Aug, 2019 | 04:38 PM
image

(எம்.மனோசித்ரா)

தனி நபர் ஒருவரினால் அல்லது குழுவொன்றினால் சட்டத்திற்கு முரணாக  இடையூறுகள்,  துன்புறுத்தல்கள் மற்றும் வன்முறை சம்பவங்கள் மேற்கொள்ளப்பட்டால் அவை தொடர்பில் முறைப்பாடளிப்பதற்கு அல்லது தகவல் வழங்குவதற்கு பாதுகாப்பு அமைச்சு நடவடிக்கைகளை முன்னெடுத்துள்ளது.

அதற்கிணங்க தேசிய பொலிஸ் ஆணைக்குழு, இலங்கை மனித உரிமைகள் ஆணைக்குழு, பொலிஸ் விஷேட புலனாய்வுப் பிரிவு மற்றும் உடனுக்குடனான முறைப்பாட்டுத்தளம் ஆகியவற்றில் முறைப்பாடுகளை பதிவு செய்வதற்கான ஏற்பாடுகள் பாதுகாப்பு அமைச்சினால் மேற்கொள்ளப்பட்டுள்ளன. 

காணாமல் போனோர் குடும்பங்களின் அங்கத்தவர்கள் , மனித உரிமை மீறல்களுக்காக குரல் கொடுக்கும் நபர்கள் அடங்கலாக பொதுவான சட்ட முறையற்ற கண்காணிப்புக்கள் மற்றும் துன்புறுத்தல்கள் பற்றிய சம்பவங்களை பாதுகாப்பு அமைச்சு அவ்வப்போது அறிந்து வந்துள்ளது. 

அரசாங்கம் சகல பிரஜைகளினதும் பாதுகாப்பை எல்லா சந்தர்ப்பங்களிலும் உறுதி செய்வதற்கு கடமைப்பட்டுள்ளது.

 எனவே பொலிஸாருக்கு ஏதாவது சம்பவம் பற்றி முறைப்பாடு செய்யப்படுகின்ற நேரத்தில் பொலிஸ் அத்தகைய சம்பவங்கள் தொடர்பில் உடனடியாக கவனம் செலுத்தி, சட்டத்திற்கு அமைய விசாரணைகளை நடத்துகிறதா என்பதையும் அரசாங்கம் உறுதி செய்ய வேண்டியுள்ளது. 

எனவே எவரேனும் தனி நபர் ஒருவரினால் அல்லது நபர்கள் குழுவினால் சட்ட முறையற்ற விதத்தில் இடையூறுகள் விளைவிக்கப்பட்டால் அல்லது துன்புறுத்தப்பட்டால் வன்முறை சம்பவங்கள் மேற்கொள்ளப்பட்டால் அல்லது அத்தகைய செயற்களினால் பொது மக்கள் பாதிக்கப்பட்டால் அத்தகைய செயல்களை அறிந்தால் அவை தொடர்பில் அறிவிக்க தொலை பேசி இலக்கங்கள் வழங்கப்பட்டுள்ளன. 

இவை தொடர்பான தகவல்களை தேசிய பொலிஸ் ஆணைக்குழுவின் 1960 என்ற அவசர தொலைபேசி இலக்கம் அல்லது 011-5107722 என்ற இலக்கத்திற்கு அழைத்து தெரிவிக்கலாம். 

1996 , 011-2505575 என்ற தொலைபேசி இலக்கங்கள் ஊடாக இலங்கை மனித உரிமைகள் ஆணைக்குழுவில் முறைப்பாடு செய்யலாம். இலங்கை பொலிஸ் விஷேட புலனாய்வுப் பிரிவிற்கு 119 என்ற இலக்கத்திற்கு அழைப்பினை மேற்கொண்டு முறைபாடளிக்கலாம். 

தொலைபேசி இலக்கங்கள் தவிரTELL IGP என்ற உடனுக்குடனான முறைப்பாட்டுத்தளத்திலும் முறைப்பாடுகளை பதிவு செய்யலாம். www.telligp.police.lk  என்ற இணையதள முகவரிக் கூடாக குறித்த இணைய தளத்திற்குள் பிரவேசித்து முறைப்பாடுகளை பதிவு செய்ய முடியும்.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

நாட்டில் வைத்தியர்களுக்குப் பற்றாக்குறை!

2024-04-19 13:04:56
news-image

வரலாறு : கச்சதீவு யாருக்கு சொந்தம்...

2024-04-19 13:12:49
news-image

கொழும்பில் சட்டவிரோதமாக நிர்மாணிக்கப்பட்ட கட்டிடங்கள் தொடர்பில்...

2024-04-19 12:39:54
news-image

பாதாள உலக குழுக்களைச் சேர்ந்த மேலும்...

2024-04-19 12:26:04
news-image

கலால் திணைக்களத்தின் அதிகாரி பணி இடைநிறுத்தம்!

2024-04-19 12:49:10
news-image

அநுர, சஜித் சிறு பிள்ளைகள், நாட்டைக்...

2024-04-19 12:12:49
news-image

நச்சுத்தன்மைமிக்க போதைப்பொருட்களுடன் 10 பெண்கள் உட்பட...

2024-04-19 12:10:56
news-image

செவ்வாய் கிரகத்தில் வாழ்வது எப்படி :...

2024-04-19 12:31:10
news-image

கடுகண்ணாவை நகரை சுற்றுலாத் தலமாக அபிவிருத்தி...

2024-04-19 11:42:14
news-image

கூரிய ஆயுதத்தால் தாக்கப்பட்டு 71 வயதான...

2024-04-19 11:48:31
news-image

பிரிட்டிஸ் சிறுவர்களிற்கு வழங்கும் அதேபாதுகாப்பை டியாகோர்கார்சியாவில்...

2024-04-19 11:32:34
news-image

சுதந்திரக் கட்சியின் உள்ளக விவகாரங்களில் தலையிடும்...

2024-04-19 11:35:43