150 ஆடுகள் பலியிட்டு மூவாயிரம் பேருக்கு அன்னதானம்..!

Published By: Digital Desk 4

06 Aug, 2019 | 04:45 PM
image

தமிழகத்தின் நாமக்கல் அருகே, ஆண்கள் மட்டுமே கொண்டாடிய கோயில் திருவிழாவில், 150க்கும் அதிகமான ஆடுகள் வெட்டி, மூவாயிரம்   பேருக்கு சமபந்தி விருந்து பறிமாறப்பட்டது.

இந்தியாவின் தமிழகத்தின் நாமக்கல் மாவட்டம் நாமகிரிப்பேட்டை ஒன்றியம் வடுகத்தை அடுத்த மலையாம்பட்டி கிராமத்தில், பொங்களாயி அம்மன் கோயில் உள்ளது. பிரசித்தி பெற்ற இந்தக் கோயிலில் ஆண்டுதோறும் ஆடி மாதம் மூன்றாவது ஞாயிற்றுக் கிழமை கிடா வெட்டி பூஜை நடக்கும்; இந்த விழாவில், ஆண்கள் மட்டுமே பங்கேற்பது வழக்கம்.

இந்த ஆண்டின் விழா கடந்த வாரம் துவங்கியது. கடந்த 4ம் திகதி இரவு 12 மணிக்கு, பொங்களாயி அம்மன் கோயில் வளாகத்தில் உள்ள காளியம்மன் மற்றும் இண்டங்காட்டு கருப்பசாமிக்கு 150க்கும் அதிகமான ஆடுகள் பலியிடப்பட்டு பொங்கல் வைத்து, பூஜை நடந்தது.

இதையடுத்து, பலியிடப்பட்ட ஆடுகளை சமைத்து, காலை 5 மணி முதல் சமபந்தி விருந்து பறிமாறப்பட்டது. இதில், புதுப்பட்டி, ராசிபுரம், சேலம், நாமக்கல், ஈரோடு, கள்ளக்குறிச்சி, சின்ன சேலம், ஆத்துார், சென்னை உள்ளிட்ட பகுதிகளில் இருந்து வந்திருந்த சுமார் 3 ஆயிரம் பேர் கலந்துகொண்டனர்.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

தென் ஆபிரிக்க முன்னாள் ஜனாதிபதி ஸுமா...

2024-03-29 12:42:02
news-image

இஸ்ரேலின் தாக்குதலில் 36 சிரிய இராணுவத்தினர்...

2024-03-29 11:21:33
news-image

காசாவிற்கு தடையற்ற விதத்தில் உணவுப்பொருட்களையும் மருந்துகளையும்...

2024-03-29 10:23:49
news-image

தென்னாபிரிக்காவில் தவக்கால யாத்திரீகர்கள் சென்ற பஸ்...

2024-03-29 12:25:44
news-image

தலைமுடி அடிப்படையிலான பாரபட்சங்களுக்கு தடை: பிரெஞ்சு...

2024-03-28 19:33:27
news-image

லாவோஸில் 54 பேருக்கு அந்த்ராக்ஸ் தொற்று:...

2024-03-28 16:11:44
news-image

சுவீடனில் குர்ஆனை எரித்தவர் நோர்வேயில் புகலிடம்...

2024-03-28 14:08:37
news-image

அமெரிக்காவில் கத்திக்குத்து தாக்குதலில் நால்வர் பலி...

2024-03-28 12:32:13
news-image

2 ஆவது சந்திர இரவை கடந்து...

2024-03-28 12:12:27
news-image

நான்கு வருடங்கள் இன்ஸ்டாவில் ஒன்றாக தோன்றி...

2024-03-28 12:02:59
news-image

காங்கிரஸ் கட்சியின் வங்கிக்கணக்கு முடக்கம் -...

2024-03-28 11:26:20
news-image

கொலம்பியாவில் 11 கோடியே 30 இலட்சம்...

2024-03-28 10:41:47