காங்கிரஸ் துணைத் தலைவர் ராகுல் காந்தி கடுமையான காய்ச்சலில் அவதிப்படும் காரணமாக தமிழகம், கேரளா மாநிலங்களில் தான் மேற்கொள்ளவிருந்த தேர்தல் சுற்றுப் பயணங்களை இரண்டு நாட்களுக்கு இரத்து செய்துள்ளார்.

இது தொடர்பாக அவர் நேற்று இரவு தனது டுவிட்டர் பக்கத்தில், "துரதிர்ஷ்டவசமாக கடந்த ஞாயிற்றுக்கிழமை முதல் எனக்கு கடுமையான காய்ச்சல் ஏற்பட்டுள்ளது. மருத்துவர்கள் இரண்டு நாட்களுக்கு ஓய்வு எடுக்குமாறு அறிவுறுத்தியுள்ளனர்.

இதனால் 10ஆம் 11ஆம் திகதிகளில் திட்டமிடப்பட்டிருந்த பிரசார பயணங்கள் இரத்து செய்யப்படுகிறது. புதுச்சேரி, தமிழ்நாடு, கேரள மாநில மக்கள் என்னை மன்னிக்க வேண்டுகிறேன். மறு திகதி விரைவில் அறிவிக்கப்படும்" எனக் கூறியுள்ளார்.

இதேவேளை , முன்னாள் மத்திய அமைச்சரும் காங்கிரஸ் கட்சியின் அகில இந்திய பொதுச்செயலாளருமான நாராயணசாமியின் வீட்டிற்கு கடந்த திங்கட்கிழமை ராகுல்காந்தி பிரசார மேடையில் இருக்கும்போது குண்டு வைத்து தகர்ப்போம்’’ என்று மர்ம கடிதம் மூலம் தேர்தல் பிரசாரத்துக்காக புதுச்சேரி கொலை மிரட்டல் விடுக்கப்பட்டிருந்தது. எனவே, பாதுகாப்பு காரணங்களுக்காக அவரது பிரசாரப் பொதுக்கூட்டம் இரத்து செய்யப்பட்டிருக்காம் எனவும் கூறப்படுகிறது