ராஜகுமாருக்கு பணப்பரிசு வழங்க ஹரீன் நடவடிக்கை

Published By: Digital Desk 4

05 Aug, 2019 | 06:38 PM
image

(எம்.எம்.சில்வெஸ்டர்)

சீனாவில் அண்மையில் நடைபெற்ற 53 ஆவது ஆசிய ஆணழகன் போட்டியில் வெற்றியீட்டிய மாதவன் ராஜகுமாருக்கு பணப்பரிசு வழங்குவற்கான நடவடிக்கை எடுக்கப்படும் என விளையாட்டுத் துறை அமைச்சர்  ஹரீன் பெர்ணான்டோ தெரிவித்தார்.

கொழும்பு - 07 இல் விளையாட்டுத்துறை அமைச்சின் 'மினி' கேட்போர் கூடத்தில்  இன்று நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பின்போது ‘வீரகேசரி இணையத்தளம்’ எழுப்பிய கேள்விக்கு பதிலளிக்கையிலேயே அமைச்சர் இதனை தெரிவித்தார்.

இவ்விடயம் குறித்து அமைச்சர் ஹரீன்  பெர்னாண்டோ பதிலளிக்கையில்,

“அவருக்கு (மாதவன் ராஜகுமார்) எமது அமைச்சு பணப்பரிசில் வழங்கும். எனினும், அவர் பங்கேற்ற போட்டியின் வகை மற்றும் தரம் குறித்து ஆராய்ந்து பார்த்து அவருக்கான பணப்பரிசு வழங்குவது தொடர்பில் நடவடிக்கைகளை எடுக்குமாறு உரிய அதிகாரிகளுக்கு உத்தரவிட்டுள்ளேன்.அவரின் ஆற்றல் மற்றும் திறமையை நான் மதிக்கிறேன். அதற்கான சன்மானம் வழங்கப்படும்” என்றார்.

இதற்கிடையே குறுக்கிட்ட விளையாட்டுத்துறை அபிவிருத்தி திணைக்கள பணிப்பாளர் தம்மிக்க முத்துகல,

“எமது திணைக்களத்துக்கு வரும் வீர, வீராங்கனைகள் ஒவ்வொருவருக்கும் இந்த குவளையை நினைவுச்சின்னமாக வழங்குவது வழக்கம். அதுபோன்றுதான் அவருக்கும் அந்த குவளையை நான் வழங்கினேன். அது நினைவுச் சின்னமாக வழங்கப்பட்டதே, தவிர அது பரிசல்ல” என்றார்.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

இலங்கை கால்பந்தாட்ட அணி, ஜனாதிபதியை சந்தித்தது

2024-03-28 17:49:42
news-image

எஸ்.எஸ்.சி.யின் 125 வருட கொண்டாட்ட விழா...

2024-03-28 13:22:56
news-image

பங்களாதேஷுடனான 2ஆவது டெஸ்ட்: உபாதைக்குள்ளான ராஜித்தவுக்குப்...

2024-03-28 13:22:16
news-image

19இன் கீழ் மகளிர் மும்முனை கிரிக்கெட்...

2024-03-28 00:56:33
news-image

சாதனைகள் படைக்கப்பட்ட ஐபிஎல் போட்டியில் மும்பையை...

2024-03-28 00:04:56
news-image

சில்ஹெட் டெஸ்டில் தலா 2 சதங்கள்...

2024-03-27 22:22:22
news-image

இலங்கையில் மகளிர் ரி20 ஆசிய கிண்ண...

2024-03-27 22:09:33
news-image

குஜராத்தை வீழ்த்தி இரண்டாவது நேரடி வெற்றியை...

2024-03-27 01:34:06
news-image

ஐ.பி.எல் 2024 : குஜராத் டைட்டன்ஸ்...

2024-03-26 23:43:35
news-image

ஸ்ரீ லயன்ஸ் அழைப்பு வலைபந்தாட்டப் போட்டியில்...

2024-03-26 19:25:58
news-image

பூட்டானை வீழ்த்தியது இலங்கை : கால்பந்தாட்டத்திலிருந்து...

2024-03-26 16:48:31
news-image

சீன கால்பந்தாட்டச் சங்கத்தின் முன்னாள் தலைவருக்கு...

2024-03-26 11:53:22