எதிர்கட்சி தலைவர் , ஜனாதிபதி  விரைவில் கூட்டணி அமைப்பதற்கான நடவடிக்கைகளை மேற்கொள்ளவேண்டும் :நாணயக்கார 

Published By: R. Kalaichelvan

05 Aug, 2019 | 05:01 PM
image

(எம்.ஆர்.எம்.வஸீம்)

எதிர்க்கட்சி தலைவர் மஹிந்த ராஜபக்ஷ மற்றும் ஜனாதிபதி  மைத்திரிபால சிறிசேன விரைவில் சந்தித்து கூட்டணி அமைப்பதற்கான நடவடிக்கைகளை மேற்கொள்ளவேண்டும். 

இதன் போது மைத்திரிபால சிறிசேனவுக்கு பிரதி பிரதமர் பதவியை வழங்க பொதுஜன பெரமுன இணக்கம் தெரிவிக்கவேண்டும். இதன் மூலமே சக்திமிக்க கூட்டணியை அமைக்கலாம் என ஜனநாயக இடதுசாரி முன்னணியின் தலைவரும் பாராளுமன்ற உறுப்பினருமான வாசுதேவ நாணயக்கார தெரிவித்தார்.

சோசலிச மக்கள் முன்னணி இன்று கொழும்பில் நடத்திய செய்தியாளர் சந்திப்பில் கலந்துகொண்டு கருத்து தெரிவிக்கையிலேயே இவ்வாறு குறிப்பிட்டார்.

அவர்அங்கு தொடர்ந்து தெரிவிக்கையில்,

ஜனாதிபதி தேர்தலுக்கு தற்போது அனைத்து கட்சிகளும் ஆயத்தமாகி வருகின்றன. அதன் பிரகாரம் பொதுஜன பெரமுன கட்சியும் தேர்தல் பிரசாரத்தினை ஆரம்பித்திருக்கின்றது. 

இருந்தபோதும் பொதுஜன பெரமுன கூட்டு எதிர்க்கட்சிகளுடன் இணைந்தே எதிர்வரும் ஜனாதிபதி தேர்தலுக்கு முகம்கொடுக்க தீர்மானித்திருக்கின்றது. 

இருந்தபோதும் ஐக்கிய தேசிய கட்சிக்கு பெரும் சவாலை ஏற்படுத்தும் வகையில் நாங்கள் ஸ்ரீலங்கா சுதந்திர கட்சியுடனும் பேச்சுவார்த்தை நடத்தி எமது கூட்டணிக்குள் இணைத்துக்கொள்ளவேண்டுமென அவர் தெரிவித்தார்.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

தேர்தல் திருத்தச் சட்டம் : ஹக்கீம்...

2024-03-29 11:25:08
news-image

கூரிய ஆயுதத்தால் தாக்கப்பட்டு ஒருவர் கொலை...

2024-03-29 11:11:34
news-image

பிளவை நோக்கி பொதுஜனபெரமுன- டெய்லிமிரர்

2024-03-29 09:59:01
news-image

எந்த தேர்தலில் முதலில் நடைபெறவேண்டும் என்பதை...

2024-03-29 09:42:41
news-image

இன்று பெரிய வெள்ளி

2024-03-29 09:47:02
news-image

முல்லைத்தீவு புதுக்குடியிருப்பில் கசிப்பு உற்பத்தி நிலையம்...

2024-03-29 09:20:02
news-image

பொது சுகாதார பரிசோதகர் மீது துப்பாக்கிச்...

2024-03-29 09:27:51
news-image

இன்றைய வானிலை

2024-03-29 06:43:30
news-image

தோட்டத் தொழிலாளர்களுக்கு அடிப்படை நாட்சம்பளமாக 2000...

2024-03-29 01:56:33
news-image

இணையவழி சிறுவர் துஷ்பிரயோகங்களை அறிக்கையிடும் புதிய...

2024-03-29 01:47:30
news-image

பழுதடைந்த உருளைக்கிழங்கு விவகாரம் : மாகாண...

2024-03-29 01:39:20
news-image

இரண்டு மாதங்களில் 983.7 மில்லியன் ரூபா...

2024-03-29 01:36:37