அக்கரபத்தனை பகுதியில் உயிரிழந்த நிலையில் மீட்கப்பட்ட சிறுத்தை விஷம் கலந்த உணவு உட்கொண்டதன் பின்னரே உயிரிழந்துள்ளதாக வன ஜூவராசிகள் திணைக்களத்தின் நிறைவேற்று பணிப்பாளர் சுமித் பிலப்பிட்டிய தெரிவித்துள்ளார்.

 குறித்த சிறத்தை உயிரிழந்திருந்த இடத்திற்கு அண்மையில் நாய்கள் இரண்டும் உயிரழந்துகிடந்தமை குறிப்பிடத்தக்கது.

 அந்த நாய்களுக்கு விஷம் கலந்து உணவை வழங்கி சிறுத்தையை கொலை செய்திருக்கலாம் என திணைக்களத்தின் நிறைவேற்று பணிப்பாளர் மேலும் தெரிவித்துள்ளார். இது தொடர்பில் விசாரணைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளதாகவும் அவர் மேலும் தெரிவித்துள்ளார்.

இவ்வாறான சம்பவங்களை தவிர்த்து கொள்வதற்காக இராணுவத்தினரை குறித்த பகுதிக்கு பாதுகாப்பிற்காக அனுப்புவதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

 கடந்த 2 மாதங்களில் மாத்திரம் 5 சிறுத்தைகள் உயிரிழந்துள்ளமை குறிப்பிடத்தக்கது. அக்கரபத்தனை பொலிஸ் பிரிவிற்குட்பட்ட பிரஸ்டன் தோட்டத்தில் நேற்றும் நேற்றுமுன் தினமும் சிறுத்தையின் உடல்கள் மீட்கப்பட்டது.

 தங்களின் வீடுகளில் உள்ள செல்லப்பிராணிகளை சிறுத்தைகள் கொன்று உட்கொள்வதாக பிரதேசவாசிகள் தெரிவிக்கின்றனர். சில சமயங்களில் தங்களையும் தாக்கியுள்ளதாக பிரதேசவாசிகள் மேலும் தெரிவித்தனர்.

(க.கிஷாந்தன்)