ஐ.தே.க.வுடனோ, சஜித்துடனோ இனியொருபோதும் சுதந்திர கட்சி இணையாது: சஜித்தை ஜனாதிபதியாக்க வேண்டிய அவசியமும் எமக்கில்லை

Published By: J.G.Stephan

05 Aug, 2019 | 02:40 PM
image

(எம்.மனோசித்ரா)

சஜித் பிரேமதாசவுடன் இணைந்து ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன  புதிய கூட்டணியை உருவாக்க உள்ளதாக வெளியாகியுள்ள செய்திகளில் எவ்விதமான உண்மை தன்மையும் கிடையாது.

அவ்வாறு சஜித் பிரேமதாசவை ஜனாதிபதியாக்க வேண்டிய அவசியம் சுதந்திர கட்சிக்கு கிடையாது என தெரிவித்த அந்த கட்சியின் பொதுச் செயலாளர் -  தயாசிறி ஜயசேகர, பொதுஜன பெரமுனவுடன் கூட்டணி சாத்தியமாவதற்கு வாய்ப்பில்லை .  தனித்து பயணிப்பது தொடர்பாக மத்திய குழு கூட்டத்தில் ஆராயப்படும் என்றும் குறிப்பிட்டார். 

சஜித்  - மைத்திரி புதிய கூட்டணி குறித்து கருத்து தெரிவிக்கையிலேயே அவர் இதனை தெரிவித்துள்ளார். 

மேலும், கடந்த வருடம் ஒக்டோபர் மாதம் ஏற்பட்ட அரசியல் மாற்றத்தின் போது சஜித் பிரேமதாசவை பிரதமராகப் பதவியேற்றுக் கொள்ளுமாறு ஜனாதிபதி கேட்டிருந்தார். இதனை அடிப்படையாகக் கொண்டே இவ்வாறான உண்மைக்கு புறம்பான செய்திகள் பரப்பப்படுகின்றதாகவும், தற்போது ஐக்கிய தேசிய கட்சிக்குள் ஜனாதிபதி வேட்பாளர் குறித்து முரண்பாடுகள் எழுந்துள்ளதாகவும் அவர் தெரிவித்துள்ளார். 

இந்நிலையில், மீண்டும் ஐ.தே.கவுடனோ அல்லாது சஜித்துடனோ இனியொருபோதும் சுதந்திர கட்சி இணையாது என்ற நிலைப்பாட்டில் நாம் உறுதியாகவுள்ளோம் என அவர் மேலும் தெரிவித்துள்ளார். 

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

கத்தரிக்கோலால் தாக்கப்பட்டு ஒருவர் கொலை ;...

2024-03-28 12:03:22
news-image

ஆபாசப் படங்கள், நிர்வாணப் படங்கள் தொடர்பில்...

2024-03-28 12:07:47
news-image

கேப்பாப்புலவு மக்களின் நில விடுவிப்புக்கான போராட்டம்...

2024-03-28 11:32:19
news-image

நியூமோனியாவால் உயிரிழந்த நபரின் நுரையீரலில் கண்டுபிடிக்கப்பட்ட...

2024-03-28 11:04:51
news-image

கூரகல பள்ளிவாசல் விவகாரம் : கலகொட...

2024-03-28 11:03:40
news-image

மட்டக்களப்பு - களுவாஞ்சிகுடியில் விபத்தில் மாணவர்...

2024-03-28 11:01:55
news-image

இறக்குமதி செய்யப்படும் அரிசி, பெரிய வெங்காயத்தின்...

2024-03-28 10:40:46
news-image

பாதாள உலக நபருக்கு ஆதரவாக செயற்பட்ட...

2024-03-28 10:45:32
news-image

பாதாள உலகக் குழுக்களை சேர்ந்த 10...

2024-03-28 10:21:44
news-image

வடக்கில் 50 ஆயிரம் சூரிய மின்...

2024-03-28 09:56:59
news-image

மாஓயாவில் நீராட சென்ற 4 மாணவர்கள்...

2024-03-28 09:50:11
news-image

காலநிலை மாற்றத்திலிருந்து சிறுவர்களை பாதுகாக்க விசேட...

2024-03-28 09:46:04