66 மில்லியன் ஆண்டுகளுக்கு முன் வாழ்ந்த டைனோசரின் முட்டை மீட்பு !

Published By: Digital Desk 3

05 Aug, 2019 | 03:24 PM
image

சீனாவில், நதிக்கரையோரம் மண்ணில் புதைந்து கிடந்த டைனோசர் முட்டை ஒன்றை 10 வயது சிறுவன் கண்டுபிடித்துள்ளான். 

குயாங்டாங்கில் வசித்து வரும் சாங் யாங்ஷீ (Zhang Yangzhe) என்ற சிறுவன் டைனோசர்களை பற்றி அறிந்து கொள்வதில் மிகுந்த ஆர்வம் காட்டி வந்துள்ளான்.

அண்மையில், அங்குள்ள நதிக்கரையோரம் யாங்ஷீ விளையாடிக்கொண்டிருந்தபோது, பெரிய அளவிலான முட்டை வடிவத்திலிருந்த கல்லை அவதானித்துள்ளான்.

இது சாதாரண கற்களை காட்டிலும் வித்தியாசமாக இருப்பதை அறிந்து கொண்ட சிறுவன், தனது தாய் மூலம் உள்ளூர் அருங்காட்சியகத்துடன் தொடர்பு கொண்டுள்ளான்.

அதனைத்தொடர்ந்து முட்டையை ஆய்வு செய்ததில், அது 66 மில்லியன் ஆண்டுகளுக்கு முன் வாழ்ந்த டைனோசரின் முட்டை என்பது உறுதியாகியுள்ளது.

சிறுவன் கூறிய அதே இடத்தில், ஆராய்ச்சியாளர்கள் தோண்டியபோது, மேலும் 10 முட்டைகள் கிடைத்தன. இந்த முட்டைகளை கொண்டு, டைனோசர்கள் பற்றிய பல அரிய தகவல்களை கண்டறிய முடியும் என ஆராய்ச்சியாளர்கள் தெரிவித்துள்ளார்கள். 

சீனாவின் 'டைனோசர்களின் வீடு' என்று பெருமையுடன் அறியப்படும் யேயுவானின் மக்கள் தொகை 3 மில்லியனுக்கும் அதிகமாகும். 1996 முதல், நகரத்தை சுற்றியுள்ள பகுதியில் 17,000 க்கும் மேற்பட்ட புதைபடிவ டைனோசர் முட்டைகள் கண்டுபிடிக்கப்பட்டுள்ளன.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

நுவரெலியாவில் ஆடை தொழிற்சாலை ஊழியர்களின் போராட்டம்...

2024-03-29 14:40:51
news-image

பெரிய வெள்ளியான இன்று மட்டக்களப்பில் திருச்சிலுவைப்...

2024-03-29 14:32:43
news-image

‘யுக்திய’ நடவடிக்கை : இதுவரை பாதாள...

2024-03-29 14:23:33
news-image

பாணந்துறை அடுக்குமாடி குடியிருப்பில் யுக்திய நடவடிக்கை...

2024-03-29 14:28:04
news-image

500 ரூபாய் இலஞ்சம் பெற்ற பொலிஸ்...

2024-03-29 13:14:04
news-image

ஈஸ்டர் தினத்தை முன்னிட்டு 6,837 பொலிஸார்...

2024-03-29 13:52:53
news-image

அமைப்பு முறை மாற்றம் ஏற்பட்டால் மாத்திரமே...

2024-03-29 12:22:11
news-image

கரையோர மார்க்கத்தில் ரயில் சேவைகள் தாமதம்

2024-03-29 12:04:59
news-image

இலங்கையில் எச்.ஐ.வி தொற்று அதிகரிப்பு!

2024-03-29 12:58:38
news-image

மக்களே அவதானமாக இருங்கள் ; சமூக...

2024-03-29 12:09:37
news-image

இரு மாணவர்கள் மின்சாரம் தாக்கி வைத்தியசாலையில்...

2024-03-29 12:02:26
news-image

தேர்தல் திருத்தச் சட்டம் : ஹக்கீம்...

2024-03-29 11:25:08