“நாட்டுக்காக ஒன்றிணைவோம்” கம்பஹா மாவட்ட நிகழ்ச்சித்திட்டத்தின் இறுதி நிகழ்வு ஜனாதிபதி தலைமையில்

Published By: Vishnu

05 Aug, 2019 | 06:10 PM
image

“நாட்டுக்காக ஒன்றிணைவோம்” கம்பஹா மாவட்ட நிகழ்ச்சித்திட்டத்தின் இறுதி நிகழ்வு ஜனாதிபதி மைத்ரிபால சிறிசேன தலைமையில் இன்று (05) முற்பகல் திவுலபிட்டிய பொது விளையாட்டரங்கில் இடம்பெற்றது.

கடந்த 29 ஆம் திகதி கம்பஹா மாவட்டத்தை மையப்படுத்தி ஆரம்பிக்கப்பட்ட நாட்டுக்காக ஒன்றிணைவோம் 6 ஆவது நிகழ்ச்சித்திட்டம் 6 நாட்களாக 13 பிரதேச செயலாளர் பிரிவுகளிலும் வெற்றிகரமாக நடைமுறைப்படுத்தப்பட்டுள்ளதுடன். 

சுமார் மூன்று இலட்சத்து 25 ஆயிரத்துக்கும் மேற்பட்டவர்களுக்கு பயன்களை வழங்கும் வகையில் நடைமுறைப்படுத்தப்பட்ட 4 ஆயிரத்துக்கும் மேற்பட்ட நிகழ்ச்சித்திட்டங்களுக்காக 123 மில்லியன் ரூபா செலவிடப்பட்டுள்ளது.

இன்றைய தினமும் கம்பஹா மாவட்ட மக்களுக்கு பல்வேறு நன்மைகள் பகிர்ந்தளிக்கப்பட்டதுடன். “கமரெக்கும” அமைப்பு பதிவு உறுதிப்பத்திரம் வழங்குதல், சமூர்த்தி வீடமைப்பு நிகழ்ச்சித்திட்டத்தின் கீழ் தலா 2 இலட்சம் ரூபா காசோலை வழங்குதல், என்டர்பிரைசஸ் ஸ்ரீ லங்கா கடனுதவி, விவசாய, கமநல சபையின் விவசாய ஓய்வூதிய புத்தகங்கள் வழங்குதல், கமநல அபிவிருத்தி திணைக்களத்தின் கடன் உதவிகள், சிறுவர்களை பாதுகாப்போம் நிகழ்ச்சித்திட்டத்தின் கீழ் பாடசாலை உபகரணங்கள் வழங்குதல், கலை நிறுவனங்களுக்கான உபகரணங்கள், சுயதொழில் உபகரணத் தொகுதிகளை வழங்குதல், ரணவிரு சேவா அதிகார சபையினூடாக வீடுகள் வழங்குதல் உள்ளிட்ட பல்வேறு நிகழ்ச்சித்திட்டங்கள் நடைமுறைப்படுத்தப்பட்டன.

“புனரோதய” சுற்றாடல் பாதுகாப்பு தேசிய நிகழ்ச்சித்திட்டத்தின் கீழ் நாட்டுக்காக ஒன்றிணைவோம் கம்பஹா மாவட்ட நிகழ்ச்சித்திட்டத்துடன் இணைந்ததாக காணி பயன்பாட்டு திணைக்களத்தின் வழிகாட்டலில் நீரேந்துப் பிரதேசங்களை பாதுகாக்கும் 6 திட்டங்களை நடைமுறைப்படுத்துவதற்காக ஜனாதிபதி அலுவலகத்தினால் வழங்கப்படும் நிதி ஏற்பாடுகள் ஜனாதிபதியினால் கம்பஹா மாவட்ட செயலாளர் சுனில் ஜயலத்திடம் கையளிக்கப்பட்டன.

மேலும் ஸ்மார்ட் ஸ்ரீ லங்கா திட்டத்தில் பொறுப்பளிக்கும் கடிதங்கள் ஜனாதிபதி வழங்கிவைக்கப்பட்டது.

மேல் மாகாண ஆளுநர் ஏ.ஜே.எம்.முஸம்மில், இராஜாங்க அமைச்சர் அஜித் மான்னப்பெரும, பாராளுமன்ற உறுப்பினர் லசந்த அழகியவன்ன, ஹர்ஷன ராஜகருணா, சந்தன ஜயக்கொடி, அஜித் பஸ்நாயக்க உள்ளிட்ட அரசியல் பிரதிநிதிகளும் ஜனாதிபதியின் செயலாளர் உதய ஆர். செனவிரத்ன, மாவட்ட செயலாளர் சுனில் ஜயலத் உள்ளிட்ட அரசாங்க அதிகாரிகளும் இந்த நிகழ்வில் கலந்துகொண்டனர்.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

கூரிய ஆயுதத்தால் தாக்கப்பட்டு ஒருவர் கொலை...

2024-03-29 11:11:34
news-image

பிளவை நோக்கி பொதுஜனபெரமுன- டெய்லிமிரர்

2024-03-29 09:59:01
news-image

எந்த தேர்தலில் முதலில் நடைபெறவேண்டும் என்பதை...

2024-03-29 09:42:41
news-image

இன்று பெரிய வெள்ளி

2024-03-29 09:47:02
news-image

முல்லைத்தீவு புதுக்குடியிருப்பில் கசிப்பு உற்பத்தி நிலையம்...

2024-03-29 09:20:02
news-image

பொது சுகாதார பரிசோதகர் மீது துப்பாக்கிச்...

2024-03-29 09:27:51
news-image

இன்றைய வானிலை

2024-03-29 06:43:30
news-image

தோட்டத் தொழிலாளர்களுக்கு அடிப்படை நாட்சம்பளமாக 2000...

2024-03-29 01:56:33
news-image

இணையவழி சிறுவர் துஷ்பிரயோகங்களை அறிக்கையிடும் புதிய...

2024-03-29 01:47:30
news-image

பழுதடைந்த உருளைக்கிழங்கு விவகாரம் : மாகாண...

2024-03-29 01:39:20
news-image

இரண்டு மாதங்களில் 983.7 மில்லியன் ரூபா...

2024-03-29 01:36:37
news-image

இராஜாங்க அமைச்சர் சிவநேசதுரை சந்திரகாந்தன் கிளிநொச்சி...

2024-03-29 01:27:15