மிக அண்­மையில் கட்­சியில் இணைந்­த­வர்­களை வேட்­பா­ள­ராக்­கினால் வெளியே­றுவோம் ; ஐ.தே.க.வின் பின்­வ­ரிசை உறுப்­பி­னர்­கள்

Published By: R. Kalaichelvan

05 Aug, 2019 | 11:51 AM
image

(எம்.ஆர்.எம்.வஸீம்)

ஐக்­கிய தேசிய கட்­சியின் ஜனா­தி­பதி வேட்­பா­ள­ராக தெரிவு செய்­யப்­ப­டு­பவர் பரம்­பரை ஐக்­கிய தேசிய கட்சி உறுப்­பி­ன­ராக இருக்­க­வேண்டும்.

அவ்­வாறு இல்­லாமல் அண்­மையில் கட்­சியில் இணைந்­த­வர்­களை வேட்­பா­ள­ராக நிய­மித்தால் அர­சி­ய­லி­லி­ருந்து வில­கிக்­கொள்வோம் என ஐக்­கிய தேசிய கட்சி பின்­வ­ரிசை உறுப்­பி­னர்­க­ளான ஹேஷான் விதா­னகே மற்றும் சமிந்த விஜே­சிறி ஆகியோர் கூட் ­டாக தெரி­வித்­துள்­ளனர்.

 அவர்கள் இரு­வரும்  நேற்று முன்­தினம் நடத்­திய செய்­தி­யாளர் சந்­திப்­பி­லேயே  அவர்கள்  இதனை குறிப்­பிட்­டனர். 

அவர்கள் இரு­வரும் அங்கு மேலும்  தெரி­விக்­கையில்,

ஐக்­கிய தேசிய கட்சி கூட்­டணி அமைத்­துக்­கொண்டு எதிர்­வரும் ஜனா­தி­பதி தேர்­த­லுக்கு முகம்­கொ­டுக்க நட­வ­டிக்கை எடுத்­து­வ­ரு­கின்­றது. கூட்­டணி அமைப்­பதில் எந்த பிரச்­சி­னையும் இல்லை. ஆனால் ஜனா­தி­பதி தேர்­தலில் ஐக்­கிய தேசிய கட்­சி­யைச்­சேர்ந்த ஒரு­வரே வேட்­பா­ள­ராக நிய­மிக்­கப்­ப­ட­வேண்டும். இது­தொ­டர்­பாக நாங்கள் கட்­சியின் மேலி­டத்­துக்கு அறி­வித்­தி­ருக்­கின்றோம்.

தேர்தல் காலங்­களில் ஐக்­கிய தேசிய கட்­சி­யுடன் இணைந்து சிறிய கட்­சிகள் இதற்கு முன்­னரும் போட்­டி­யிட்­டி­ருக்­கின்­றன. தற்­போது அனைத்து கட்­சி­க­ளையும் இணைத்­துக்­கொண்டு முன்­னணி ஒன்றை அமைக்க நட­வ­டிக்கை எடுக்­கப்­பட்டு வரு­கின்­றது. முன்­னணி அமைப்­ப­தற்கு நாங்கள் எதிர்ப்­பு­ தெ­ரி­விக்­க­வில்லை.  ஆனால் முன்­ன­ணியின் யாப்பு அமைக்கும் போது அதில் பிர­தான பத­விகள் ஐக்­கிய தேசிய கட்­சிக்கே இருக்­க­வேண்டும்.

அத்­துடன் ஜனா­தி­பதி வேட்­பா­ள­ராக பொது வேட்­பாளர் ஒரு­வரை இம்­முறை நிய­மிக்க ஆத­ர­வ­ளிக்­க­மாட்டோம். தகு­தி­யான வேட்­பா­ளர்கள் கட்­சிக்குள் இருக்­கின்­றனர். இதற்கு முன்னர் பொது வேட்­பா­ளர்­களை நிய­மித்­ததால் கட்­சிக்கு பாரி­ய­ளவில் பாதிப்பு  ஏற்­பட்­டி­ருக்­கின்­றது. அதனால் மீண்டும் அந்த நிலை ஏற்­ப­டு­வ­தற்கு இட­ம­ளிக்க முடி­யாது. அதே­போன்று ஐக்­கிய தேசிய கட்சியில் அண்­மையில் இணைந்­து­கொண்­ட­வர்கள் நினைத்­த­வாறு கட்­சியை வழி­ந­டத்த இட­ம­ளிக்க முடி­யாது. ஏனெனில் ஐக்­கிய தேசிய கட்சி ஆத­ர­வா­ளர்கள் எப்­போதும் ஐக்­கிய தேசிய கட்சி உறுப்­பினர் ஒருவர் ஜனா­தி­பதி வேட்­பா­ள­ராக வரு­வதே விரும்­பு­கின்­றனர். 

ஆத­ர­வா­ளர்­களை மீறி கட்சி தீர்­மா­னிக்க முடி­யாது. அவ்­வாறு ஐக்­கிய தேசிய கட்சி அல்­லாத வேறு ஒரு­வரை ஜனா­தி­பதி வேட்­பா­ள­ராக நிய­மிக்க தீர்­மா­னிக்­கப்­பட்டால் நாம் எமது அர­சி­யலில் இருந்து வில­கிக்­கொள்வோம் என்றனர்.

இதேவேளை, ஐக்கிய தேசிய கட்சியின் ஜனாதிபதி வேட்பாளராக சஜித் பிரேமதாசவை நியமிக்கவேண்டும் என தெரிவித்து 10 இலட்சம் கையொப்பங்களை சேகரிக்க ஆதரவாளர்கள் நடவடிக்கை எடுத்திருக்கின்றனர். அதன் ஆரம்ப நிகழ்வு நேற்று முன்தினம் சனிக்கிழமை கடவத்தையில் ஆரம்பிக்கப்பட்டது.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

தோட்டத் தொழிலாளர்களுக்கு அடிப்படை நாட்சம்பளமாக 2000...

2024-03-29 01:56:33
news-image

இணையவழி சிறுவர் துஷ்பிரயோகங்களை அறிக்கையிடும் புதிய...

2024-03-29 01:47:30
news-image

பழுதடைந்த உருளைக்கிழங்கு விவகாரம் : மாகாண...

2024-03-29 01:39:20
news-image

இரண்டு மாதங்களில் 983.7 மில்லியன் ரூபா...

2024-03-29 01:36:37
news-image

இராஜாங்க அமைச்சர் சிவநேசதுரை சந்திரகாந்தன் கிளிநொச்சி...

2024-03-29 01:27:15
news-image

அஜித் நிவாட் கப்ரால் உள்ளிட்ட ஐவருக்கு...

2024-03-29 00:17:44
news-image

தேர்தலை தீர்மானிக்க பஷில் ராஜபக்ஷ தேர்தல்...

2024-03-29 00:05:03
news-image

இரண்டாம் காலாண்டுக்குள் கடன்மறுசீரமைப்பு தொடர்பில் இணக்கப்பாடு...

2024-03-28 21:32:55
news-image

பரந்துப்பட்ட அரசியல் கூட்டணியின் ஜனாதிபதி வேட்பாளராக...

2024-03-28 21:31:49
news-image

தேர்தல் செலவின ஒழுங்குபடுத்தல் சட்டம் குறித்து...

2024-03-28 21:37:50
news-image

நாமலுக்கு இன்னும் காலம் இருக்கிறது ;...

2024-03-28 21:33:56
news-image

பாராளுமன்றத்தைப் பிரதிநிதித்துவப்படுத்தாத பதிவு செய்யப்பட்ட அரசியல்...

2024-03-28 21:26:04