இங்கிலாந்தின் வெற்றிக்கு இன்னும் 385 ஓட்டம் 

Published By: Vishnu

05 Aug, 2019 | 11:49 AM
image

ஆஷஸ் முதலாவது டெஸ்ட் போட்டியில் அவுஸ்திரேலிய அணி இங்கிலாந்து அணிக்கு வெற்றியிலக்காக 398 ஓட்டங்களை நிர்ணயத்துள்ளது.

இங்கிலாந்துக்கு சுற்றுப் பயணம் மேற்கொண்டுள்ள டிம் பெய்ன் தலைமையிலான அவுஸ்திரேலிய அணி ஜோ ரூட் தலைமையிலான இங்கிலாந்து அணியுடன் ஐந்து போட்டிகள் கொண்ட ஆஷஸ் டெஸ்ட் தொடரில் விளையாடி வருகிறது.

இதில் கடந்த முதலாம் திகதி பேர்மிங்கமில் ஆரம்பமான முதலாவது போட்டியில் முதல் இன்னிங்சில் முறையே அவுஸ்திரேலிய அணி 284 ஓட்டங்களையும், இங்கிலாந்து அணி 374 ஓட்டங்களையும் எடுத்திருந்தன.

90 ஓட்டம் என்ற பின்தங்கிய நிலையில் 2 ஆவது இன்னிங்ஸை ஆரம்பித்த அவுஸ்திரேலிய அணி மூன்றாவது நாள் முடிவில் 3 விக்கெட்டுக்களை இழந்து 124 ஓட்டங்களை பெற்றிருந்தது. ஆடுகளத்தில் ஸ்டீவ் ஸ்மித் 46 ஓட்டத்துடனும், டிராவிஸ் ஹெட் 21 ஓட்டத்துடனும் ஆட்டமிழக்காதிருந்தனர்.

124 ஓட்டத்துடன் நான்காம் நாளான நேற்றைய தினம் இரண்டாவது இன்னிங்ஸை தொடங்கிய அவுஸ்திரேலிய அணி 7 விக்கெட்டுக்களை இழந்து 487ஓட்டங்களை பெற்றிருந்தபோது ஆட்டத்தை நிறுத்தியது.

அவுஸ்திரேலிய அணி சார்பில் ஸ்டீவ் ஸ்மித் 142 ஓட்டத்தையும், மேத்யூ வேட் 110 ஓட்டத்தையும், டிராவிஸ் ஹெட் 51 ஓட்டத்தையும், அதிகபடியாக பெற்றனர். 

பந்து வீச்சில் இங்கிலாந்து அணி சார்பில் பென் ஸ்டோக்ஸ் 3 விக்கெட்டுக்களையும், மொயின் அலி 2 விக்கெட்டுக்களையும், ஸ்டீவர்ட் பிரோட், கிறிஸ் வோக்ஸ் ஆகியோர் தலா ஒவ்வொரு விக்கெட்டுக்களையும் வீழ்த்தினர்.

இதனால் இங்கிலாந்து அணிக்கு 398 ஓட்டம் என்ற வெற்றியிலக்கு நிர்ணயிக்கப்பட்டது. 398 என்ற வெற்றியிலக்கை நோக்கி துடுப்பெடுத்தாட ஆரம்பித்த இங்கிலாந்து அணி நேற்றைய நான்காம் நாள் ஆட்ட முடிவின்போது 7 ஓவர்கள் நிறைவில் 13 ஓட்டங்களை பெற்றது.

ஆடுகளத்தில் ரோரி பேர்ன்ஸ் 7 ஓட்டத்துடனும், ஜேசன் ரோய் 6 ஓட்டத்துடனும் ஆட்டமிழக்காதிருக்க இங்கிலாந்தின் வெற்றிக்கு இன்னும் 385 ஓட்டம் தேவை என்ற நிலையில் இருந்தது.

இந் நிலையில் போட்டியின் ஐந்தாம் நாள் ஆட்டம் இன்றாகும்.

Australia 1st Innings  - 284-10 (80.4)

England 1st Innings    - 374-10 (135.5)

Australia 2nd Innings - 487-7 (112)

England 2nd Innings   - 13-0 (7)*

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

ஷஷாங்க், அஷுட்டோஷ் அதிரடியால் திகிலடைந்த மும்பை...

2024-04-19 06:04:02
news-image

ஒலிம்பிக்கிலிருந்து அவுஸ்திரேலிய குத்துச்சண்டை பயிற்றுநர் வாபஸ்

2024-04-18 16:16:23
news-image

ஒலிம்பிக் வாய்ப்புக்கான உலகக்கிண்ண பளுதூக்கல் போட்டியில்...

2024-04-18 14:49:11
news-image

வுல்வார்டின் சதத்தை சமரியின் சதம் விஞ்சியதன்...

2024-04-18 10:16:00
news-image

22 வயதுக்குட்பட்ட ஆசிய குத்துச்சண்டையில் இலங்கையின்...

2024-04-18 00:00:57
news-image

குஜராத்தை குறைந்த எண்ணிக்கைக்கு சுருட்டி வெற்றிபெற்ற...

2024-04-17 23:52:38
news-image

ஆண்களுக்கான மெய்வல்லுநர் போட்டிகளில் மிகக் பழைமையான...

2024-04-17 17:42:41
news-image

நினைவிலிருந்து நீங்காத மூத்த கால்பந்தாட்ட வீரர்கள்...

2024-04-17 14:38:02
news-image

பெய்ஜிங் அரை மரதனில் சீன வீரருக்கு...

2024-04-17 12:12:35
news-image

ஜொஸ் பட்லர் 2ஆவது சதத்தைக் குவித்து...

2024-04-17 01:29:43
news-image

பண்டைய ஒலிம்பியாவில் ஒலிம்பிக் சுடர் ஏற்றப்பட்டது

2024-04-16 23:45:09
news-image

நுவரெலியாவில் சித்திரை வசந்த கால கொண்டாட்டம்...

2024-04-16 17:38:49