மகனை காப்பாற்றும் முயற்சியில் தந்தையும் தாயும் பலி- டெக்சாஸ் சம்பவத்தில் துயரம்

Published By: Rajeeban

05 Aug, 2019 | 10:49 AM
image

டெக்சாசின் எல்பசோ வோல்மார்ட் வணிக வளாகத்தில் இடம்பெற்ற துப்பாக்கி ரயோகத்தின் போது தங்கள் குழந்தையை காப்பாற்றுவதற்காக பெற்றோர் தங்கள் உயிரை பணயம் வைத்து பலியான சம்பவம் இடம்பெற்றுள்ளது.

ஜோர்டனும் அன்ரே அன்சொன்டேயும் தங்கள் இரண்டுவயது குழந்தையை காப்பற்றும் முயற்சியில் கொல்லப்பட்டு;ள்ளனர்.

குழந்தை காயமடைந்துள்ள போதிலும் பெற்றோரின் தியாகத்தினால் காப்பாற்றப்பட்டுள்ளது என அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

மனைவி ஜோர்டனை காப்பாற்றுவதற்காக கணவன் துப்பாக்கிதாரியின் முன்னாள் நின்றார் ஜோர்டன் தனது குழந்தையை பாதுகாக்க முயன்றார் என சம்பவத்தை நேரில் பார்த்த அவர்களின் உறவினரான மொனிக் டெரி தெரிவித்துள்ளார்.

ஜோர்டன் எப்படிப்பட்டவர் என்பதை இது புலப்படுத்துகின்றது அவர் தனது பிள்ளைக்காக அனைத்தையும் இழந்தார் என டெரி தெரிவித்துள்ளார்.

குழந்தைக்கு ஏற்பட்டுள்ள காயங்களை பார்க்கும்போது ஜோர்டன் மகனை காப்பாற்ற முயன்றுள்ளமை புலனாகின்றது என ஜோர்டனின் சகோதரி தெரிவித்துள்ளார்.

அவர்மீது துப்பாக்கி பிரயோகம் மேற்கொள்ளப்பட்டவேளை அவர் மகனை தூக்கிவைத்துக்கொண்டிருந்துள்ளார் இதன் காரணமாக அவர் மகன்மீது விழுந்து இறந்துள்ளார் என சகோதரி தெரிவித்துள்ளார்.

இதன் காரணமாக குழந்தையின் சில எலும்புகள் முறிந்துள்ளன ஆனால் அவர் குழந்தையை காப்பாற்றிவிட்டார் என ஜோர்டனின் சகோதரி தெரிவித்துள்ளார்.

தந்தையும் உயிர் தப்பிவில்லை என்பதை பின்னர் அறிந்தோம் அவர் வோல்மார்ட்டிலேயே மரணித்துள்ளார் என ஜோர்டனின் குடும்பத்தவர்கள் தெரிவித்துள்ளனர்.

அவர்களிற்கு மூன்று பிள்ளைகள் உள்ளனர் பெற்றோர்களிற்கு என்ன நடந்தது என்பது அவர்களிற்கு விளங்கவில்லை அவர்கள் பெற்றோர் எங்கே என கேட்கின்றனர் என குடும்பத்தவர்கள் தெரிவித்துள்ளனர்.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

தென் ஆபிரிக்க முன்னாள் ஜனாதிபதி ஸுமா...

2024-03-29 12:42:02
news-image

இஸ்ரேலின் தாக்குதலில் 36 சிரிய இராணுவத்தினர்...

2024-03-29 11:21:33
news-image

காசாவிற்கு தடையற்ற விதத்தில் உணவுப்பொருட்களையும் மருந்துகளையும்...

2024-03-29 10:23:49
news-image

தென்னாபிரிக்காவில் தவக்கால யாத்திரீகர்கள் சென்ற பஸ்...

2024-03-29 12:25:44
news-image

தலைமுடி அடிப்படையிலான பாரபட்சங்களுக்கு தடை: பிரெஞ்சு...

2024-03-28 19:33:27
news-image

லாவோஸில் 54 பேருக்கு அந்த்ராக்ஸ் தொற்று:...

2024-03-28 16:11:44
news-image

சுவீடனில் குர்ஆனை எரித்தவர் நோர்வேயில் புகலிடம்...

2024-03-28 14:08:37
news-image

அமெரிக்காவில் கத்திக்குத்து தாக்குதலில் நால்வர் பலி...

2024-03-28 12:32:13
news-image

2 ஆவது சந்திர இரவை கடந்து...

2024-03-28 12:12:27
news-image

நான்கு வருடங்கள் இன்ஸ்டாவில் ஒன்றாக தோன்றி...

2024-03-28 12:02:59
news-image

காங்கிரஸ் கட்சியின் வங்கிக்கணக்கு முடக்கம் -...

2024-03-28 11:26:20
news-image

கொலம்பியாவில் 11 கோடியே 30 இலட்சம்...

2024-03-28 10:41:47