முரண்பாடுகளைக் களைந்து சிலதினங்களில் ஒப்பந்தத்தை கைச்சாத்திட தீர்மானம்

Published By: Digital Desk 3

05 Aug, 2019 | 10:44 AM
image

(ஆர்.யசி )

ஐக்­கிய தேசிய கட்­சியின் தலை­மையில் ஐக்­கிய தேசிய முன்­ன­ணியின் கட்­சிகள் இன்று பொதுக்­கூட்­ட­ணியை அமைப்­ப­தற்­கான உடன்­ப­டிக்­கையில்  கைச்­சாத்­திட தீர்­மா­னிக்­கப்­பட்­டி­ருந்த போதிலும் பொதுக் கூட்­டணி அமைக்கும் தீர்­மானம்  ஒத்­தி­வைக்­கப்­பட்­டுள்­ளது. ஐக்­கிய தேசிய கட்­சியின் தலை­மை­யி­லான ஐக்­கிய தேசிய முன்­ன­ணியின் யாப்­பினை திருத்தும் வரையில் பொதுக்­கூட்­ட­ணியை அமைக்கும் தீர்­மா­னங்­களை ஒத்­தி­வைக்­கப்­பட்­டுள்­ள­தாக ஐக்­கிய தேசிய கட்­சியின்  பொதுச் செய­லரும்  அமைச்­ச­ரு­மான அகி­ல­விராஜ் காரி­ய­வசம் உறு­திப்­ப­டுத்­தினார். 

ஐக்­கிய தேசிய கட்­சியின் தலை­மையில் ஐக்­கிய தேசிய முன்­ன­ணியின் கட்­சிகள் மற்றும் புதிய கட்­சிகள் இணைந்து பொதுக் கூட்­ட­ணியை  இன்­றைய தினம் அமைக்க தீர்­மானம் எடுக்­கப்­பட்ட போதிலும் கூட கடந்த சில தினங்­க­ளாக கட்­சிக்குள் நிலவும் மாற்றுக் கருத்­துக்கள் கார­ண­மாக உறு­தி­யான தீர்­மா­னங்­களை எடுக்க முடி­யா­தி­ருந்­தது. 

இந்­நி­லை­யி­லேயே   நேற்று முன்­தினம் இரவு   ஐக்­கிய தேசிய முன்­ன­ணியின் கட்சி தலை­வர்கள்  கூட்டம் பிர­தமர் ரணில் விக்­கி­ர­ம­சிங்க தலை­மையில் அல­ரி­மா­ளி­கையில் கூடி­யது. 

இதன்­போதே இவ்­வாறு ஒரு சில தினங்­க­ளுக்கு கூட்­ட­ணியை அமைக்கும் செயற்­பாட்டை ஒத்­தி­வைப்­ப­தற்­கான  தீர்­மானம் எடுக்­கப்­பட்­டுள்­ளது, 

இது குறித்து அமைச்சர் அகில விராஜ் காரி­ய­வ­ச­மிடம் வின­வி­ய­போது அவர் குறிப்­பி­டு­கையில்,

நாம் ஐக்­கிய தேசிய  கட்­சியின் உறுப்­பி­னர்­களின் நிலைப்­பாடு குறித்து கலந்­து­ரை­யா­டினோம். சக­லரும் இணங்கும் வகை­யி­லேயே தீர்­மா­னங்­களை எடுக்க வேண்டும். கட்­சிக்குள் முரண்­பா­டு­களை வைதுக்­கொண்டு கூட்­ட­ணி­களை அமைக்க முடி­யாது. 

ஆக­வேதான் முதலில் ஐக்­கிய தேசிய முன்­ன­ணியின் யாப்பில் உரிய திருத்­தங்­களை முன்­னெ­டுத்து பொது இணக்­கப்­பாடு ஒன்­றினை எட்­டிய பின்னர் பொதுக்­கூட்­ட­ணியை அமைக்க முடியும் என்ற தீர்­மானம் எடுக்­கப்­பட்­டுள்­ளது. 

பிர­தமர் ரணில் விக்­கி­ர­ம­சிங்க அதற்­கான இணைக்­கத்தை  தெரி­வித்­துள்ளார். ஆகவே இந்த ஒரு சில தினங்­களில் கூட்­ட­ணிக்­கான யாப்பு திருத்­தங்­களால் முன்­னெ­டுக்­கப்­பட்ட பின்னர் விரைவில் பொதுக் கூட்­ட­னியை அமைப்போம் .  ஐக்­கிய தேசிய முன்­ன­ணியின் சகல கட்­சி­க­ளி­னதும்  இணக்­கத்­துடன் புதிய யாப்பினை உருவாக்கிய பின்னர் கூட்டணியை அமைக்க சகல தரப்பும் இணைக்கம் தெரிவித்துள்ளன . நாளை (இன்று ) முன்னெடுக்கவிருந்த பொதுக் கூட்டணிக்கான கைச்சாத்து நிகழ்வையும் ஒத்திவைக்க தீர்மானம் எடுக்கப்பட்டுள்ளது என்றார்.  

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

தோட்டத் தொழிலாளர்களுக்கு அடிப்படை நாட்சம்பளமாக 2000...

2024-03-29 01:56:33
news-image

இணையவழி சிறுவர் துஷ்பிரயோகங்களை அறிக்கையிடும் புதிய...

2024-03-29 01:47:30
news-image

பழுதடைந்த உருளைக்கிழங்கு விவகாரம் : மாகாண...

2024-03-29 01:39:20
news-image

இரண்டு மாதங்களில் 983.7 மில்லியன் ரூபா...

2024-03-29 01:36:37
news-image

இராஜாங்க அமைச்சர் சிவநேசதுரை சந்திரகாந்தன் கிளிநொச்சி...

2024-03-29 01:27:15
news-image

அஜித் நிவாட் கப்ரால் உள்ளிட்ட ஐவருக்கு...

2024-03-29 00:17:44
news-image

தேர்தலை தீர்மானிக்க பஷில் ராஜபக்ஷ தேர்தல்...

2024-03-29 00:05:03
news-image

இரண்டாம் காலாண்டுக்குள் கடன்மறுசீரமைப்பு தொடர்பில் இணக்கப்பாடு...

2024-03-28 21:32:55
news-image

பரந்துப்பட்ட அரசியல் கூட்டணியின் ஜனாதிபதி வேட்பாளராக...

2024-03-28 21:31:49
news-image

தேர்தல் செலவின ஒழுங்குபடுத்தல் சட்டம் குறித்து...

2024-03-28 21:37:50
news-image

நாமலுக்கு இன்னும் காலம் இருக்கிறது ;...

2024-03-28 21:33:56
news-image

பாராளுமன்றத்தைப் பிரதிநிதித்துவப்படுத்தாத பதிவு செய்யப்பட்ட அரசியல்...

2024-03-28 21:26:04