முஸ்லிம் பெண் பரீட்­சார்த்­திகளுக்கு இலங்கை முஸ்லிம் கவுன்சில் முக்கிய அறிவுறுத்தல்

Published By: Vishnu

05 Aug, 2019 | 09:44 AM
image

பொதுப்­ப­ரீட்­சை­க­ளுக்கு தோற்றும் முஸ்லிம் பெண் பரீட்­சார்த்­தி­களின் உடை தொடர்­பான  கலந்­து­ரை­யாட­லொன்றை இலங்கை முஸ்லிம் கவுன்சில் ஒழுங்கு செய்­தி­ருந்­தது. 

கொழும்பு, இஸ்­லா­மிய கற்­கைகள் மத்­திய நிலை­யத்தில்  இடம்­பெற்ற இக்­க­லந்­து­ரை­யா­டலில், அகில இலங்கை ஜம்­மி­யத்துல் உலமா சபை, ஜமா­அத்தே இஸ்­லாமி அமைப்பு, அல்­முஸ்­லிமாத் முஸ்லிம் வாலிபர் சங்கம், அகில இலங்கை முஸ்லிம் கல்வி மாநாடு மற்றும் சிவில் சமூக  அமைப்­பு­ ஆகியவற்றின் பிர­தி­நி­திகள்,  கொழும்­பி­லுள்ள  பிர­பல முஸ்லிம் மகளிர் பாட­சா­லை­களின் அதி­பர்கள்,   தென்­கி­ழக்குப் பல்­க­லைக்­க­ழக முன்னாள் உப­வேந்தர் பேரா­சி­ரியர் ஹுஸைன் இஸ்­மாயில்,  பரீட்­சைகள் திணைக்­கள முன்னாள் பிரதி ஆணை­யாளர் எம்.எம்.முஹம்மத்  ஆகியோர் கலந்து கொண்­டனர். 

முஸ்லிம் பெண் பரீட்­சார்த்­தி­களின் உடை கார­ண­மாக 2018 ஆம் ஆண்டு  நடை­பெற்ற க.பொ.த. உயர்­தரப் பரீட்­சையின் போது  எழுந்த பல்­வேறு சர்ச்­சைகள் பற்­றியும் சில முஸ்லிம் பெண் பரீட்­சார்த்­திகள் பரீட்சை விதி­களை மீறி நடந்து கொண்­டமை பற்­றியும் வெளியே இருந்து தக­வல்கள் பெற்­றது தொடர்­பான குற்­றச்­சாட்­டுகள் பற்­றியும் இதன்போது ஆழ­மாக கலந்­து­ரை­யா­டப்­பட்­டது. 

ஷரீஆ அனு­ம­தித்த வரம்­பு­க­ளுக்குள் அரசின் சட்­டங்கள், பரீட்சை விதி­மு­றைகள் என்­ப­வற்றை அனு­ச­ரித்து முஸ்லிம் பெண் பரீட்­சார்த்­தி­களின் உடை தொடர்­பாக பின்­வரும் அம்­சங்­களில்  இதன்­போது உடன்­பாடு ஏற்­பட்டது. 

அதா­வது பாது­காப்பு நோக்கம், பரீட்சை விதி­க­ளுக்கு அமைய முகத்­தையும் மணிக்­கட்­டுக்கு வெளியே உள்ள பகு­தியும் தெரி­யக்­கூ­டிய உடை­ய­ணிதல் 

ஹிஜாப் என்­பது தனியே கறுப்பு நிற அபா­யாக்கள் அணி­வதை மட்டும் வலி­யு­றுத்­த­வில்லை. பல்­வேறு நிறங்­களில் பல்­வேறு வடி­வ­மைப்­பு­டைய உடை­களை அணிந்து வரு­வது வர­வேற்­கத்­தக்­கது. இதனால் பரீட்சை மேற்­பார்­வை­யா­ளர்­க­ளது மனப்­பான்­மையில் இது நல்­ல­தொரு மாற்­றத்தை ஏற்­ப­டுத்தும்.

பாட­சாலை பரீட்­சார்த்­திகள் பாட­சாலை சீருடை அணி­யலாம். இங்கு முக்­கி­ய­மான ஒரு விட­யத்தைக் கவ­னிக்க வேண்டும். சில பாட­சா­லை­களின்  சீரு­டையில் ஒரு பெரிய புடவைத் தொப்பி பின்னால் முது­கு­வரை தொங்­க­வி­டப்­ப­டு­கி­றது. இதனை அணி­வதால் பரீட்சை விதி­களை மீறு­வது இலகு. ஆகவே மேற்­பார்­வை­யாளர் இவர்­களை கடு­மை­யாக பரி­சோ­திக்க வேண்­டி­வரும். இதனால் சில பரீட்சை மண்­ட­பங்­களில் அசம்­பா­வி­தங்­களும் நடந்­துள்­ளன. ஆகவே காதை மூடி ‘ஸ்கார்ப்’ அணி­வது  நல்­லது.

முஸ்லிம் பெண்கள் காதை மூடு­வது கட்­டாயம் என பலர் எடுத்­துக்­கூ­றினர். காது ஐம்­பு­லன்­களில் ஒன்று. அதில் சில நுண் கரு­வி­களை பொருத்தி வெளி­யி­லி­ருந்து தக­வல்­களை பெற­மு­டியும் என கண்­ட­றி­யப்­பட்­டுள்­ளது. சில இடங்­களில் இவ்­வா­றான சம்­ப­வங்கள் நடை­பெற்­றுள்­ள­தா­கவும் பரீட்சைகள் ஆணை­யாளர் குறிப்­பிட்டார். ஆகவே பெண் பரீட்­சார்த்­திகள் காதை மூடி ‘ஸ்கார்ப்’ (Scarf) அணிந்து வந்து பரீட்சை மண்­ட­பத்தில் மட்டும் காதைத் திறந்து விடு­வது சந்­தே­கங்­களை நீக்கும் என எதிர்­பார்க்­கலாம்.

அதி­பர்கள், ஆசி­ரி­யர்கள், பெற்­றோர், பரீட்­சார்த்­திகள் மேற்­கு­றிப்­பிட்ட அம்சங்களில் கரிசனை காட்டுமாறு அன்புடன் வேண்டுகிறோம். இவ்வாறாக  நாம் நெகிழ்ச்சியுடன் செயல்படுவது நமது பெண் பிள்ளைகள் மனத்தாக்கங்கள் எதுவுமின்றி, மகிழ்ச்சியாக பரீட்சை எழுதுவதற்கான சூழ்நிலையை ஏற்படுத்தும் என அகில இலங்கை முஸ்லிம் கல்வி மாநாடு எதிர்பார்க்கின்றது.  

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

அமைப்பு முறை மாற்றம் ஏற்பட்டால் மாத்திரமே...

2024-03-29 12:22:11
news-image

கரையோர மார்க்கத்தில் ரயில் சேவைகள் தாமதம்

2024-03-29 12:04:59
news-image

இலங்கையில் எச்.ஐ.வி தொற்று அதிகரிப்பு!

2024-03-29 12:58:38
news-image

மக்களே அவதானமாக இருங்கள் ; சமூக...

2024-03-29 12:09:37
news-image

இரு மாணவர்கள் மின்சாரம் தாக்கி வைத்தியசாலையில்...

2024-03-29 12:02:26
news-image

தேர்தல் திருத்தச் சட்டம் : ஹக்கீம்...

2024-03-29 11:25:08
news-image

கூரிய ஆயுதத்தால் தாக்கப்பட்டு ஒருவர் கொலை...

2024-03-29 11:11:34
news-image

பிளவை நோக்கி பொதுஜனபெரமுன- டெய்லிமிரர்

2024-03-29 09:59:01
news-image

எந்த தேர்தலில் முதலில் நடைபெறவேண்டும் என்பதை...

2024-03-29 09:42:41
news-image

இன்று பெரிய வெள்ளி

2024-03-29 09:47:02
news-image

முல்லைத்தீவு புதுக்குடியிருப்பில் கசிப்பு உற்பத்தி நிலையம்...

2024-03-29 09:20:02
news-image

பொது சுகாதார பரிசோதகர் மீது துப்பாக்கிச்...

2024-03-29 09:27:51