இன்று ஆரம்பமாகிறது கண்டி எசலா பெரஹரா

Published By: Vishnu

05 Aug, 2019 | 08:38 AM
image

உலகின் பழமையான மத விழாக்களில் ஒன்றான கண்டி எசலா பெரஹரா ஊர்வலம் இன்று ஆரம்பமாகிறது.

வரலாற்று சிறப்பு மிக்க மத்திய மலைநாட்டின் தலைநகரத்தில் வருடாந்தம் இடம்பெறும் இந்நிகழ்வினை கண்டுகளிக்க பக்தர்கள் மற்றும் வெளிநாட்டு சுற்றுலா பயணிகள் என பல்லாயிரக்கணக்கானோர் கலந்துகொள்ளவுள்ளனர்.

இன்று ஆரம்பமாகும் இத் திருவிழாவானது அடுத்த பத்து நாட்கள் (ஆகஸ்ட் 15) இடம்பெறும். 1000 க்கும் மேற்பட்ட நடனக் கலைஞர்கள் மற்றும் சுமார் 50 யானைகள் இதில் கலந்து கொள்கின்றன.

இந்த ஆண்டு ஏப்ரல் மாதம் துரதிர்ஷ்டவசமான உயிர்த்த ஞாயிறு குண்டுவெடிப்பைத் தொடர்ந்து எழுந்த புதிய வடிவ அச்சுறுத்தல்களை எதிர்கொள்ள இந்த ஆண்டு ஒரு சிறப்பு பாதுகாப்பு நடவடிக்கைகள் அமுலில் இருக்கும்.

இந்த ஆண்டு நடைமுறையில் உள்ள சிறப்பு பாதுகாப்பு ஏற்பாடுகளை வலுப்படுத்துவதற்கென பொலிஸ் , முப்படை , விஷேட அதிரடிப்படை ஆகியன இணைந்து தமது சொந்த உளவுபிரிவு மற்றும் பிற ஆயுத அணிகளை ஈடுபடுத்தியுள்ளன.

வீதி தடைகளுடன் நகரத்தின் அனைத்து முக்கிய இடங்களிலும் நிலையான கண்காணிப்பு தொடந்து முன்னெடுக்கப்படவுள்ளது. அத்துடன் தலதா மாளிகை மற்றும் நகரத்தை சூழவுள்ள பிரதேசங்களில் சிறப்பு சோதனைகள் மற்றும் நடமாடும் சோதனைச் சாவடிகள் என்பன ஏற்படுத்தப்படவுள்ளதுடன் மோட்டார் சைக்கிள் மூலமான ரோந்துப்பணிகளும் தொடர்ந்து முன்னெடுக்கப்படவுள்ளது.

நகரத்தில் வசிப்போரின் ஆளடையாளங்களை உறுதிப்படுத்தல் மற்றும் ஹோட்டல் மற்றும் பிற தங்குமிடங்களில் முன்பதிவு செய்த பார்வையாளர்களின் அடையாளங்களை பரீட்சிக்க பொலிசார் நடவடிக்கை எடுத்துள்ளனர். 

இதற்கு மேலதிகமாக , முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக பெரஹர பாதைக்கு நேரடியாக அமைந்துள்ள நகரத்தின் கழிவுநீர் சீரமைப்பு திட்டம் உட்பட நகரத்திற்குள் உள்ள அனைத்து முக்கிய கட்டுமான பணிகளையும் தற்காலிகமாக நிறுத்தவும், நெரிசலற்ற போக்குவரத்தினை முன்னெடுக்கவும் நடவடிக்கை எடுத்துள்ளனர். 

பார்வையாளர்களின் பாதுகாப்பிற்கு அச்சுறுத்தலாக இருக்கும் கட்டிடங்களாக அடையாளம் காணப்பட்ட கட்டிடங்களின் உரிமையாளர்களுக்கு பாதுகாப்புக்கு ஏற்றவகையில் திருத்த பணிகளை மேற்கொள்ள அறிவுறுத்தப்பட்டுள்ளனர். இதற்கு உரிமையாளர்கள் இணங்கியுள்ளதுடன் மற்றும் அத்தகைய கட்டிடங்களின் பழுதுபார்க்கும் பணிகளைத் தொடங்கியுள்ளனர்.

விஷேட தேவைகளுக்காக கண்டி ஏரியில் படகுகள் தரித்து வைக்கப்படவுள்ள, அதேவேளை முறையே கடற்படை மற்றும் விமானப்படையினர் தயார் நிலையில் வைக்கப்படவுள்ளனர். அத்துடன் வான்வழி கண்காணிப்புக்கும் ட்ரோன்கள் பயன்படுத்தப்படும். அனைத்து பெரஹேர கலைஞர்களுக்கும் சிறப்பு அடையாள அட்டைகள் வழங்கப்படும், மேலும் சந்தேகத்திடமானவர்கள் எனக் கருதப்படுபவர்கள் நுழைய அனுமதிக்கப்பட மாட்டார்கள். அத்துடன் அனைத்து பாதுகாப்பு நடவடிக்கைகளையும் ஒருங்கிணைக்கும் வகையில் ஒரு சிறப்பு செயல்பாட்டு அறை ஏறடுத்தப்படவுள்ளது.

அனைத்து உட்செல்லும் / வெளியேறும் இடங்களும் பாதுகாப்புப் படையினர் மற்றும் காவல்துறையினரால் நிர்வகிக்கப்படவுள்ளதுடன் போக்குவரத்து நெரிசல்களைத் தவிர்க்க சிறப்பு போக்குவரத்துத் திட்டமும் அமுல்படுத்தப்படவுள்ளது. மாற்று வழிகள் அடையாளம் காணப்பட்டு, நகரத்திற்குள் நுழையாமல் மற்ற பகுதிகளுக்கு பயணிப்பவர்களுக்கு போக்குவரத்து திருப்பி விடப்படும். பெரஹெர காலப்பகுதியில் ரயில் சேவையை அதிகரிப்பதற்கான கோரிக்கைகளுக்கு ரயில்வே அதிகாரிகளும் சாதகமாக பதிலளித்துள்ளனர்.

இந்த ஏற்பாடுகளுக்கு மேலதிகமாக சுற்றியுள்ள பகுதிகளில் உள்ள பொலிஸ் நிலையங்களும் பாதுகாப்பு சோதனைகள் மற்றும் வீதி தடை சோதனைகள் ஆகியவற்றை முன்னெடுக்கவுள்ளன.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

தடுப்பூசி போடப்பட்ட மாணவ குழுவில் 10...

2024-03-28 18:55:29
news-image

நன்னடத்தை பாடசாலை மேற்பார்வையாளர் பெண்ணிற்கு மீண்டும்...

2024-03-28 16:58:06
news-image

பாராளுமன்றம் ஏப்ரல் 01ஆம் திகதி மற்றும்...

2024-03-28 16:28:48
news-image

பெருந்தோட்ட கம்பனிகள் சமர்ப்பித்த முன்மொழிவை நிராகரித்த...

2024-03-28 16:19:07
news-image

கெஹெலிய ரம்புக்வெல்லவிற்கு மீண்டும் விளக்கமறியல்

2024-03-28 16:14:07
news-image

கொழும்பு கிராண்ட்பாஸ் பகுதியில் தீ பரவல்

2024-03-28 15:52:31
news-image

இன்றைய நாணய மாற்று விகிதம் 

2024-03-28 16:02:37
news-image

மீண்டும் அதிகரித்த தங்கத்தின் விலை!

2024-03-28 14:48:17
news-image

மக்களின் துயரங்களுக்கு தீர்வு காண நாட்டின்...

2024-03-28 14:26:10
news-image

இருவரைச் சுட்டுக் கொன்ற சம்பத் சமிந்தவின்...

2024-03-28 16:00:53
news-image

மாதமொன்றுக்கு 6 இலட்சம் கோழி முட்டைகள்...

2024-03-28 13:56:01
news-image

கத்தரிக்கோலால் தாக்கப்பட்டு ஒருவர் கொலை ;...

2024-03-28 12:03:22