கல்முனை விவகாரத்தில் இறுதி தீர்மானம் இன்னுமில்லையென்கிறார் எச்.எச்.எம்.ஹரீஸ்: சிறப்புச் செவ்வி

Published By: J.G.Stephan

04 Aug, 2019 | 03:58 PM
image

கல்­முனை விட­யத்தில் இறு­தித்­தீர்­வுக்­கான முயற்­சிகள் தொடர்ச்­சி­யாக இடம்­பெற்று வரு­கின்ற நிலையில், தமிழ்த் தரப்­பு­ட­னான பேச்­சு­வார்த்­தைகள் முன்­னேற்றம் கண்­டி­ருக்­கின்­ற ­போதும் இது­வ­ரையில் இறு­தி­யான இணக்­கப்­பா­டுகள் எட்­டப்­ப­ட­வில்லை என்று ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்­கி­ரஸின் பிரதித் தலை­வரும் முன்னாள் இரா­ஜாங்க அமைச்­ச­ரு­மான பாரா­ளு­மன்ற உறுப்­பினர் எச்.எச்.எம்.ஹரீஸ் வீர­கே­சரி வார­வெ­ளி­யீட்­டுக்கு வழங்­கிய செவ்­வியில் தெரி­வித்தார். அச்­செவ்­வியின் முழு­வ­டிவம் வரு­மாறு,


"கிழக்கு மாகாண சபையில் ஆட்சி அமைப்பது குறித்து கூட்டமைப்புடனான பேச்சுவார்த்தையின் போது சம்பந்தன் ஐயா  முதலமைச்சர் பதவி பற்றி பேசவேயில்லை"



கேள்வி:- கல்­முனை விவ­கா­ரத்­திற்­கான தீர்­வுக்­கா­கவா அல்­லது முஸ்­லிம்கள் எதிர்­கொள்ளும் நெருக்­க­டி­க­ளுக்கு முற்­றுப்­புள்ளி ஏற்­பட வேண்டும் என்­ப­தற்­கா­கவா அமைச்­சுப்­ப­த­வியை ஏற்­காது இருக்­கின்­றீர்கள்?

பதில்:- உயிர்த்த ஞாயிறு தாக்­கு­தல்­களின் பின்­ன­ரான நிலை­மையைக் கருத்­திற்­கொண்டே நாம் இரா­ஜி­னாமா செய்­தி­ருந்தோம். இருப்­பினும் மீண்டும் பத­வி­க­ளை­ பெ­று­வ­தற்­கான கோரிக்கை விடுக்­கப்­பட்­ட­போது மு.காவின் உயர்­பீடம் கூடி அது­தொ­டர்பில் ஆராய்ந்­தி­ருந்­தது. இதன்­போது கல்­முனை விடயம் சம்­பந்­த­மா­கவும் கவனம் செலுத்­தப்­பட்டு அதற்கும் தீர்­வினை பெற­வேண்டும் என்று வலி­யு­றுத்­தப்­பட்­டது. எனினும் அமைச்­சுப்­ப­த­வியை ஏற்­கு­மாறு பிர­தமர் உட்­பட அரச தரப்பின் அழுத்தம் தொடச்­சி­யாக வந்­தது. 

இந்­நி­லையில் கூடிய எமது உயர்­பீடம் முஸ்லிம் விவ­கா­ரச்­சட்டம் உள்­ளிட்ட முக்­கிய விட­யங்கள் பாரா­ளு­மன்­றுக்கு வர­வுள்­ள­மையால் கட்­சித்­த­லை­வர்கள் மீண்டும் அமைச்­சுப்­ப­த­வி­களை ஏற்க வேண்டும் என்று தீர்­மா­னிக்­கப்­பட்­டது. கல்­முனை விட­யத்­திற்கு நிரந்­தரத் தீர்வு காணும் வரை­யிலும், வாழைச்­சேனை, தோப்பூர் விட­யங்­க­ளுக்கும் தீர்வு எட்­டப்­பட வேண்டும். அது­வ­ரையில் பத­வியை ஏற்­ப­தில்லை என்று எனது நிலைப்­பாட்­டினை தலை­மை­யிடம் அறி­வித்­தி­ருந்தேன். எனது தீர்­மா­னத்­திற்கு வலுசேர்க்கும் வகையில் பைசல் காசீம், அலி­சாஹிர் மௌலானா ஆகி­யோரும் பத­வி­களை ஏற்­றி­ருக்­க­வில்லை.

கேள்வி:- அமைச்­சுப்­ப­த­வியை நீங்கள் பொறுப்­பேற்க மறுத்­த­மையால் தலை­மை­யுடன் முரண்­பா­டுகள் அதி­க­ரித்­துள்­ள­தாக கூறப்­ப­டு­கின்­றதே?

பதில்:- இல்லை. அது புனை­கதை. இவ்­வா­றான கருத்­துக்கள் பரப்­பப்­பட்ட­வுடன் நான் நேரில் தலை­மையைச் சந்­தித்து கலந்­து­ரை­யா­டினேன். அவர் எனது முடிவு குறித்து புரிந்­து­ணர்­வுடன் உள்ளார்.

கேள்வி:- கல்­முனை விவ­கா­ரத்­தினை தீர்ப்­ப­தற்­காக உங்­க­ளு­டைய தரப்பில் தற்­போது எவ்­வி­த­மான நட­வ­டிக்­கைகள் எடுக்­கப்­பட்­டுள்­ளன?

பதில்:- தற்­போ­துள்ள கல்­முனை மாந­கர சபையை, கல்­முனை தமிழ் பிரிவு (அவர்கள் விரும்­பினால் உள் ளூராட்சி சபையை அமைக்­கலாம்) கல்­முனை மாந­கர சபை, சாய்ந்தம­ருது நக­ர­சபை, மரு­த­முனை மற்றும் நற்­பிட்­டி­மு­னையை இணைத்து பிர­தேச சபை என நான்­காக பிரிப்­ப­தற்­கான வரை­பொன்றை  அமைச்சர் வஜிர அபே­வர்த்­த­ன­வி­டத்தில் கைய­ளித்­துள்ளோம். இதனை அனைத்து தரப்­புக்­களும் ஏற்­றுக்­கொண்­டுள்­ளன. இது முத­லா­வது வெற்­றி­யாகும். இத­னை­வி­டவும் இவ்­வி­ட­யத்­திற்கு முற்­றுப்­புள்ளி வைப்­ப­தற்­காக பேரா­சி­ரியர் நிரஞ்சன் விக்­கி­ர­ம­ரட்ன தலை­மையில் குழு­வொன்று அமைக்­கப்­பட்டு தொடர்ச்­சி­யான அமர்­வு­களை நடத்தி ஆராய்ந்து வரு­கின்­றது. இத­னை­வி­டவும் முஸ்லிம் தரப்­பி­னரும், மாவை.

சேனா­தி­ராஜா தலை­மை­யி­லான தமிழ்த் தரப்பும் பேச்­சுக்­களை முன்­னெ­டுத்து வரு­கின்­றன. இதன்­போது கல்­முனை பள்­ளி­வாசல் சமூ­கத்­தினால் முன்­வைக்­கப்­பட்ட நியா­ய­மான கோரிக்­கை­களை உள்­ள­டக்­கிய வரைபை நாம் கைய­ளித்­துள்ளோம். இருப்­பினும், கூட்­ட­மைப்பு அவ்­வ­ரைபு குறித்த இறு­தி­யான தீர்­மா­னத்­தினை எம்­மி­டத்தில் கூற­வில்லை. இந்­நி­லையில் தான் எதிர்­வரும் 10ஆம் திக­திக்கு முன்­ன­தாக இவ்­வி­ட­யத்­திற்கு தீர்வு ஏற்­ப­டுத்­தப்­பட வேண்டும் என்று பாரா­ளு­மன்றக் குழுவில் தீர்­மா­னித்­துள்ளோம்.

கேள்வி:- கல்­முனை வடக்கு உப அல­கிற்கு கணக்­கா­ளரை நிய­மிப்­ப­தற்­கான அனு­ம­தியை அர­சாங்கம் வழங்­கி­யுள்­ள­தாக கூட்­ட­மைப்பு கூறு­கின்­ற­போதும் இன்­னமும் நிய­மனம் இடம்­பெ­ற­வில்லை. எனினும் அந்த நிய­ம­னத்­திற்கு உங்கள் தரப்பில் எதிர்ப்பு தெரி­விப்­பது ஏன்?

பதில்:- கல்­முனை விட­யத்­திற்கு இறுதி தீர்வு எட்­டப்­பட்ட பின்னர் கணக்­காளர் நிய­மனம் உள்­ளிட்ட எந்­த­வி­ட­யங்­க­ளையும் முன்­னெ­டுக்க முடியும். அதற்கு முன்­ன­தாக எவ்­வி­த­மான விட­யங்­க­ளையும் முன்­னெ­டுக்கக் கூடாது என்று முஸ்லிம் பாரா­ளு­மன்றக் குழு தீர்­மா­னித்து பிர­த­ம­ரி­டத்தில் கூறி­ய­போது பிர­தமர் அதனை ஏற்­றுக்­கொண்டு இணக்­கப்­பாட்­டி­னையும் வெளி­யிட்­டி­ருந்தார். ஆகவே தான் அனைத்து விட­யங்­க­ளையும் உள்­வாங்கி இறுதித் தீர்­வினை எட்­டுவோம் எனக் ­கோ­ரு­கின்றோம்.

கேள்வி:- நீங்கள் கூட்­ட­மைப்­புடன் பேச்­சுக்­களை முன்­னெ­டுத்­த­போது கணக்­காளர் விடயம் குறித்து கலந்­து­ரை­யா­டி­னீர்­களா?

பதில்:- இல்லை. அவர்­களும் எம்­முடன் அது­கு­றித்து கலந்­து­ரை­யா­ட­வில்லை.

கேள்வி:- கல்­முனை தமிழ்ப் பிரிவு, சாய்ந்தம­ருது நக­ர­சபை, மரு­த­முனை மற்றும் நற்­பிட்டி முனையை இணைத்து தனி அலகு இவை அனைத்­துக்கும் ஒரு­மித்து 10ஆம் திக­திக்குள் தீர்வு எட்­டு­வது சாத்­தி­யப்­ப­டுமா?

பதில்:- சாய்ந்­த­ம­ருது, மரு­த­முனை விட­யத்தில் எல்லை நிர்­ண­யப்­ பிரச்­சி­னைகள் எவையும் கிடை­யாது. ஆனால் கல்­முனை தமிழ்ப்­பி­ரிவு தர­மு­யர்த்­தப்­ப­டு­கின்றபோது எல்லை நிர்­ணயம் தொடர்­பான பிரச்­சி­னை­க­ளுக்கு தீர்வு காண­வேண்­டி­யுள்­ளது. தற்­போது வரையில் எல்லை நிர்­ணயம் தொடர்­பான விட­யத்தில் எவ்­வி­த­மான இணக்­கப்­பா­டு­களும் ஏற்­ப­ட­வில்­லை­யென இத­ய­சுத்­தி­யுடன் கூறு­கின்றேன். 

எல்லை நிர்­ணய ஆணைக்­குழு மூல­மாக நட­வ­டிக்­கைகள் எடுப்­பதைக் காட்­டிலும் அவ்­வி­ட­யத்தில் அர­சியல் மற்றும் சிவில் தரப்­புக்கள் இணக்­கப்­பாட்­டினை ஏற்­ப­டுத்­திய பின்னர் அதனை ஆணைக்­கு­ழு­விற்கு பரிந்­து­ரைத்து அமு­லாக்­கலாம் என்­ப­தற்­கா­கவே பிர­தமர் தலைமையிலும் எமக்­குள்ளும் கலந்­து­ரை­யா­டல்­களில் ஈடு­பட்டு வரு­கின்றோம்.

கேள்வி:- கல்­முனை விடயம் உண்ணா­வி­ரதம் வரையில் சென்று நிலை­மைகள் மோச­ம­டை­வ­தற்கு முன்ன­தாக உரிய பேச்­சுக்­களை மேற்­கொண்­டி­ருக்­க­லா­மல்­லவா?

பதில்:- கடந்த வரவு – செல­வுத்­திட்­டத்­திற்கு இறுதித் தீர்வு காண்­ப­தற்கு முன்­ன­தா­கவே கல்­முனை விட­யத்­திற்கு இறுதித் தீர்வு காணப்­ப­ட­வேண்டும் என்­ப­தற்­கான பேச்­சு­வார்த்­தைகள் பிர­தமர் தலை­மை­யிலும், தமிழ்த் தரப்­பு­டனும் ஆரம்­பிக்­கப்­பட்­டி­ருந்­தன. அத­ன­டிப்­ப­டையில் இவ் 

வி­ட­யத்தில் பிர­தா­ன­மா­க­வுள்ள எல்லை நிர்­ணயம் தொடர்­பான விட­யத்­திற்கு தீர்­வினை ஏற்­ப­டுத்­துவ­தற்­காக குழு­வொன்று நிய­மிக்­கப்­பட்டு இரண்டு மூன்று மாதங்­க­ளுக்குள் இறுதி முடி­வினை எட்­டு­வ­தென்று இணக்­கப்­பாடு ஏற்­பட்­டி­ருந்­தது. 

எனினும் ஈஸ்டர் குண்டு வெடிப்பு அரச இயந்­தி­ரத்­தினை செயற்­ப­டு­வ­தற்கு இட­ம­ளித்­தி­ருக்­கா­த­தோடு இனங்­க­ளுக்கு இடை­யி­லான உறவு நிலை­மை­க­ளிலும் மாற்­றத்­தினை ஏற்­ப­டுத்­தி­விட்­டது. இந்த நிலை­மையில் தான் கல்­முனை விகா­ரா­தி­பதி உண்­ணா­வி­ர­தத்­தினை ஆரம்­பித்தார். அவ­ருடன் கூட்­ட­மைப்பின் மாந­கர உறுப்­பி­னர்­களும் இணைந்து கொண்­டனர். இதனை நாம் எதிர்­பார்த்­தி­ருக்­க­வில்லை.

கேள்வி: -சாய்ந்தம­ரு­துக்­கான தனி அலகு உரு­வா­கு­வ­தற்கு நீங்கள் தடை­யாக இருப்­ப­தாக விமர்­சிக்­கப்­ப­டு­கின்­றதே?

பதில்:- தற்­போ­தைய சூழலில் பிரி­வினை என்­பதை எந்­த­வொரு தரப்பும் விரும்­பு­வ­தில்லை. எனினும் கல்­முனை மாந­கர சபை­யினை அங்கு வாழும் மக்­களின் கோரிக்­கைக்கு அமை­வாக நான்­காக பிரிப்­ப­தற்கு தலைப்­பட்­டி­ருக்­கின்றோம். 

அவ்­வாறு பிரிக்­கப்­ப­டு­கின்­ற­போது சாய்ந்­த­ம­ரு­துக்­கான நக­ர­சபை வழங்­கப்­பட வேண்டும் என்­பதில் நான் மாற்­றுக்­க­ருத்­தி­னைக் ­கொள்­ள­வில்லை. ஆனால் கல்­முனை உப அலகு தர­மு­யர்த்தல், மரு­த­முனை பிர­தேச சபை கோரிக்கை உள்­ளிட்ட அனைத்­தையும் ஒன்­றாக மேற்­கொள்ள வேண்டும் என்று தான் என்­னுடன் பல­சுற்றுப் பேச்­சுக்­களை முன்­னெ­டுத்­தி­ருந்த சாய்ந்த­ம­ருது தரப்­பி­ன­ரி­டத்தில் கூறி­யி­ருந்தேன். அவர்­களின் கோரிக்­கையை தட்­டிக்­ க­ழிப்­பது எனது நோக்­க­மல்ல.  

ஆனால் அவர்­களின் கோரிக்­கையை முதன்­மைப்­ப­டுத்­து­கின்­ற­போது சகோ­தர தமிழ் சமூகம் தவ­றாக சிந்­தித்தால் ஒன்­றாக வாழும் ஒரு­மொ­ழி­பேசும் இரு­ச­மூ­கத்­தினுள் பிரச்­சி­னைகள் தோற்றம் பெற்­று­விடும் என்­பதை அடிப்­ப­டை­யாக கொண்டு ஒட்­டு­மொத்­த­மாக தீர்வு காணப்­பட வேண்டும் என்­பதில் உறு­தி­யாக இருந்தேன். இதனை விரும்­பாத சில தரப்­புக்­களே என்­மீது சேறு பூசும் வகையில் சாய்ந்த ம­ரு­துக்­கான நக­ர­ச­பையை நான் தடுப்­ப­தாக பிர­சா­ரங்­களை செய்­தி­ருந்­தார்கள்.

கேள்வி:- கிழக்கு மாகாண சபையில் மு.காவிற்கு முத­ல­மைச்சர் பத­வியை கூட்­ட­மைப்பு விட்­டுக்­கொ­டுத்­தி­ருந்­த­போதும் தற்­போது அதனை மறந்து கல்­முனை பள்­ளி­வாசல் நிரு­வா­கத்தின் நியா­ய­மான கோரிக்கை என்ற 

போர்­வையில் கல்­முனை வடக்கு தமிழர் பிரிவு உரு­வா­கு­வ­தற்கு மு.கா.விட்­டுக்­கொ­டுப்­பினை செய்­ய­வில்லை என்று தமிழர் தரப்பில் முன்­வைக்­கப்­படும் குற்­றச்­சாட்­டுக்­களை எவ்­வாறு நோக்­கு­கின்­றீர்கள்?

பதில்:- இந்த விட­யத்தில் மாறு­பட்ட கருத்­து­களே முன்­வைக்­கப்­ப­டு­கின்­றன.  நாம் அப்­போ­தைய ஆட்­சி­யா­ளர்­க­ளான மஹிந்த தரப்­புடன் இணைந்­து­கொண்­ட­ 

போது கிழக்­கு ­மா­கா­ணத்தில் சுதந்­தி­ரக்­கட்­சியும், மு.காவும் தலா இரண்­டரை வரு­டங்கள் ஆட்சி செய்­வ­தென்று உடன்­பட்­டி­ருந்தோம். முதலில் சுதந்­தி­ரக்­கட்சி முத­ல­மைச்சர் பத­வியைப் பெற்று ஆட்சி செய்து நிறை­வுக்கு வரு­கின்­ற­போது தான் 2015இல் ஜனா­தி­பதித் தேர்தல் அறி­விக்­கப்­பட்­டது.

 இதன்­போது மு.காவும் கூட்­ட­மைப்பும் ஐ.தே.மு வேட்­பா­ள­ருக்கு ஆத­ரவை வழங்­கினோம். அச்­ச­ம­யத்தில் முத­ல­மைச்சர் பத­வியை எம்­மைப்­பொ­றுப்­பெ­டுக்­கு­மாறு கோரி சு.கவின் உறுப்­பி­னர்கள் எம்­முடன் இணைந்து கொண்­டார்கள். ரிஷாத், அதா­வுல்லா, ஐ.தே.க தரப்புக்கள் என ஆட்சியமைப்பதற்கான பெரும்பான்மை எம்மிடத்தில் தாராளமாக இருந்தது. எனினும் கிழக்கில் இருசமூகங்களின் நல்லிணக்கத்திற்கான முன்னுதாரணமாக இருப்பதாகவும் கூட்டமைப்பினை ஆட்சியின் பங்காளர்களாக்குவதற்காகவும் பேச்சுக்களை முன்னெடுத்தோம்.

கூட்டமைப்பின் தலைவர் சம்பந்தன் ஐயாவிடத்தில் நாம் முதலமைச்சர் பதவியை ஏற்பதாகவும் அமைச்சு பதவி மற்றும் அவைத்தலைவர் பதவி ஆகியவற்றை கூட்டமைப்பிற்கு வழங்குவதாக எமது தலைமை கூறியது.  அதன்போது கிழக்கு மாகாண தமிழ்த் தலைமைகளுடன் கலந்துரையாடிவிட்டு பதிலளிப்பதாக சம்பந்தன் ஐயா கூறிச்சென்றார். இரண்டாம் கட்டப்பேச்சுவார்த்தையின்போது அவர் இரண்டு அமைச்சுப் பதவிகளைத் தருமாறு கோரினார். 

அதாவுல்லாவுக்கு வழங்கவிருந்த அமைச்சுப்பதவியை நாம் கூட்டமைப் பிற்கு வழங்கினோம். சம்பந்தன் ஐயா இந்த பேச்சுக்களின் எந்தவொரு சந்தர்ப்பத்திலும் முதலமைச்சர் பதவி பற்றி பேசியிருக்கவில்லை. கூட்டமைப்பின் தயவினால் ஆட்சி அமைக்கப்பட்டது என்பதை விடவும் மு.காவின் நல்லெண்ணத்திற்கான நடவடிக்கை உருவாக்கப்பட்ட ஆட்சி என்பதே யதார்த்தமாகும். அவ்வாறிருக்க கல்முனை விடயத்தினை கிழக்கு மாகாண விடயத்தினை வைத்து நோக்குவதே தவறான அணுகுமுறையாகும்.

கேள்வி : கல்முனை விவகாரத்துக்கு தீர்வு கிடைத்தவுடன் அமைச்சுப் பதவியை மீண்டும் ஏற்பீர்களா?

பதில்:  இரண்டு இனங்களுக் குமிடையில் எவ்விதமான பிரச்சினைகளுமின்றி இவ்விடயம் தீர்க்கப்பட வேண்டும். அதேபோன்று வாழைச்சேனை, திருகோணமலை மற்றும் தோப்பூர் விவகாரத்துக்கும் உரிய தீர்வு கிடைக்க வேண்டும். அதன் பின்னரே அமைச்சுப் பதவிகளை மீண்டும் ஏற்பது பற்றி சிந்திக்க முடியும். இதில் நான் பிரதிநிதித்துவப்படுத்தும் மக்களின் பிரதிபலிப்பும் முக்கியமான விடயமாக உள்ளது.


நேர்­காணல்:- ஆர்.ராம்

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

மோடி சூட்டிய பெயர் அங்கீகரிப்பு

2024-03-28 18:11:54
news-image

மூளையில் காயத்தால் இறந்த குழந்தை :...

2024-03-28 11:20:31
news-image

வரலாற்றில் முதல் முறையாக... சவூதியில் ஒரு...

2024-03-28 18:03:05
news-image

இலங்கையில் தேசியவாதம் தோல்வியடைந்து விட்டது -கனடா...

2024-03-27 15:52:43
news-image

அதிகரித்துவரும் சிறு வயது கர்ப்பங்களும் விளைவுகளும்

2024-03-27 12:28:26
news-image

சர்ச்சையான கருத்துக்களுக்கு மத்தியில் முன்னாள் ஜனாதிபதி...

2024-03-27 11:57:52
news-image

ரஸ்ய - உக்ரைன் போர் களங்களில்...

2024-03-26 17:45:40
news-image

நல்லிணக்கம் பற்றிய கதையளப்புகளுக்கு மத்தியில் வடக்கு,...

2024-03-26 14:35:09
news-image

மன்னரை தொடர்ந்து இளவரசி : அதிர்ச்சியில்...

2024-03-25 21:18:44
news-image

துப்பாக்கி ரவைகளும் பீதியும் படுகொலையாக மாறிய...

2024-03-25 16:29:48
news-image

பலஸ்தீன இனப்படுகொலைக்கு மேற்குலகின் ஆதரவு 

2024-03-25 16:01:54
news-image

காஸாவுக்குள் பலஸ்தீன அதிகார சபையைத் திணித்தல்...

2024-03-25 15:24:04