'வெள்ளைக்கொடியுடன் வந்து உடல்களை எடுத்துக்கொள்ளுங்கள்': பாகிஸ்தான் இராணுவத்திற்கு அழைப்பு விடுத்துள்ள இந்திய இராணுவம்

Published By: J.G.Stephan

04 Aug, 2019 | 03:16 PM
image

இந்தியாவுடனான மோதலின்போது கொல்லப்பட்ட பாகிஸ்தான் எல்லைக் காவல் படையான 'பார்டர் ஏக்ஷன் டீம்' படையைச் சேர்ந்தவர்கள் மற்றும் தீவிரவாதிகள் என்று இந்திய அரசால் கூறப்படுபவர்களின் உடல்களை எடுத்துக் கொள்ளுமாறு பாகிஸ்தான் இராணுவத்திடம் தாங்கள் கூறியுள்ளதாக இந்திய இராணுவம் தெரிவித்துள்ளது.

வெள்ளைக்கொடியுடன் வந்து ஏழு பேரின் உடல்களை, இறுதிச் சடங்குகளுக்காக எடுத்துச் செல்லுமாறு பாகிஸ்தான் இராணுவத்திடம் தெரிவித்துள்ளதாகவும், அவர்கள் தரப்பில் இருந்து இன்னும் பதில் வரவில்லை என்றும் இந்திய இராணுவம் தெரிவித்துள்ளதாக ஏ.என்.ஐ செய்தி நிறுவனம் ட்விட்டர் பதிவிட்டுள்ளது.

மேலும், கடந்த 36 மணி நேரத்தில் இந்திய கேரன் செக்டர் பகுதியில் இந்திய எல்லைக்குள் ஊடுருவ 'பார்டர் ஏக்ஷன் டீம்' செயல்படுத்திய முயற்சி முறியடிக்கப்பட்டுள்ளதாக இந்திய இராணுவ தரப்பில் இருந்து தங்களுக்கு செய்தி கிடைத்துள்ளதாக சனிக்கிழமை இரவு ஏ.என்.ஐ நிறுவனம் செய்தி வெளியிட்டிருந்தமையும் குறிப்பிடதக்கது.

அத்தோடு,குறித்த தாக்குதலில், ஐந்து முதல் ஏழு பாகிஸ்தான் படையினர் அல்லது தீவிரவாதிகள் கொல்லப்பட்டிருப்பதாக அந்த செய்தி தெரிவித்துள்ளமையும் குறிப்பிடதக்கது.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

லாவோஸில் 54 பேருக்கு அந்த்ராக்ஸ் தொற்று:...

2024-03-28 16:11:44
news-image

சுவீடனில் குர்ஆனை எரித்தவர் நோர்வேயில் புகலிடம்...

2024-03-28 14:08:37
news-image

அமெரிக்காவில் கத்திக்குத்து தாக்குதலில் நால்வர் பலி...

2024-03-28 12:32:13
news-image

2 ஆவது சந்திர இரவை கடந்து...

2024-03-28 12:12:27
news-image

நான்கு வருடங்கள் இன்ஸ்டாவில் ஒன்றாக தோன்றி...

2024-03-28 12:02:59
news-image

காங்கிரஸ் கட்சியின் வங்கிக்கணக்கு முடக்கம் -...

2024-03-28 11:26:20
news-image

கொலம்பியாவில் 11 கோடியே 30 இலட்சம்...

2024-03-28 10:41:47
news-image

வான்வழி விநியோகத்தை நிறுத்துமாறு ஹமாஸ் கோரிக்கை:...

2024-03-27 18:56:33
news-image

ஜேர்மனியில் பேர்லின் - சூரிச் பஸ்...

2024-03-27 18:06:25
news-image

ஒரு பாலினத் திருமண சட்டமூலம் தாய்லாந்து...

2024-03-27 13:27:50
news-image

கடலுக்குள் விழுந்த உதவிப்பொருட்களை மீட்க முயன்ற...

2024-03-27 12:18:17
news-image

பாக்கிஸ்தானில் தற்கொலை குண்டுதாக்குதல் - ஐந்து...

2024-03-26 17:42:13