பதக்கம் வென்­று நாடு திரும்பிய ராஜ்­குமாரிற்கு தேநீர் கோப்­பையை பரி­ச­ளித்­த விளையாட்டுத்துறை அமைச்சு

Published By: J.G.Stephan

04 Aug, 2019 | 11:39 AM
image

சீனாவில் இடம்­பெற்ற 53 ஆவது ஆசிய ஆண­ழகர் போட்­டியில் இலங்­கையை பிர­தி­நி­தித்­துவம்  செய்து போட்­டி­களில் பங்­கு­பற்­றிய புசல்­லா­வைப்­ ப­கு­தி­யைச் ­சேர்ந்த மாதவன் ராஜ்­குமார் மூன்றாம் இடத்­தைப்­பெற்று வெண்­கலப் பதக்கம் வென்­றமை அனை­வரும் அறிந்­ததே.

  சீனாவின் ஹேர்பின் நகரில் கடந்த 26ஆம் திகதி முதல் 29ஆம் திகதி வரை நடை­பெற்ற இப்­போட்­டியில்  கடந்த ஞாயிற்­றுக்­கி­ழமை இடம்­பெற்ற  ஆண்­க­ளுக்­கான 60 கிலோ எடைப் பிரி­விலும், 23 வய­துக்­குட்­பட்ட கனிஷ்ட சம்­பி­யன்ஷிப் போட்டிப் பிரி­விலும் கள­மி­றங்­கிய ராஜ்­குமார், பலத்த போட்­டிக்கு மத்­தியில் மூன்­றா­வது இடத்தைப் பெற்று இலங்­கைக்­கான முத­லா­வது பதக்­கத்தைப் பெற்றுக் கொடுத்தார். இப்­போட்­டியில் 30 நாடு­க­ளைச் ­சேர்ந்த வீரர்கள் பங்­கு­பற்­றி­யி­ருந்­தமையும் குறிப்­பி­டத்­தக்­கது. 

இந்­நி­லையில் வெற்றி பதக்­கத்­துடன் நாடு திரும்­பிய ராஜ்­கு­மா­ருக்கு விமான நிலை­யத்­திலோ அல்­லது விளை­யாட்டு அமைச்­சிலோ உரிய வர­வேற்பு வழங்­கப்­ப­ட­வில்லை என விசனம் தெரி­விக்­கப்­பட்­டுள்­ளது. மட்­டு­மன்றி விளை­யாட்டு அமைச்சில் அவ­ருக்கு சாதா­ரண ஒரு தேநீர் கோப்­பையை பரி­ச­ளித்­தமை தமிழ் மக்­க­ளி­டையே கடும் விச­னத்தை ஏற்­ப­டுத்­தி­யுள்­ளது.

சிறுபான்மை இனத்தவர் என்பதாலா ராஜ்குமாருக்கு இந்த அநீதி என பல தரப்பிலிருந்தும் விமர்சனங்கள் கிளம்பியுள்ளன. 

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

19 வயதின் கீழ் ஆஸி. அணியை...

2024-03-28 20:03:31
news-image

இலங்கை கால்பந்தாட்ட அணி, ஜனாதிபதியை சந்தித்தது

2024-03-28 17:49:42
news-image

எஸ்.எஸ்.சி.யின் 125 வருட கொண்டாட்ட விழா...

2024-03-28 13:22:56
news-image

பங்களாதேஷுடனான 2ஆவது டெஸ்ட்: உபாதைக்குள்ளான ராஜித்தவுக்குப்...

2024-03-28 13:22:16
news-image

19இன் கீழ் மகளிர் மும்முனை கிரிக்கெட்...

2024-03-28 00:56:33
news-image

சாதனைகள் படைக்கப்பட்ட ஐபிஎல் போட்டியில் மும்பையை...

2024-03-28 00:04:56
news-image

சில்ஹெட் டெஸ்டில் தலா 2 சதங்கள்...

2024-03-27 22:22:22
news-image

இலங்கையில் மகளிர் ரி20 ஆசிய கிண்ண...

2024-03-27 22:09:33
news-image

குஜராத்தை வீழ்த்தி இரண்டாவது நேரடி வெற்றியை...

2024-03-27 01:34:06
news-image

ஐ.பி.எல் 2024 : குஜராத் டைட்டன்ஸ்...

2024-03-26 23:43:35
news-image

ஸ்ரீ லயன்ஸ் அழைப்பு வலைபந்தாட்டப் போட்டியில்...

2024-03-26 19:25:58
news-image

பூட்டானை வீழ்த்தியது இலங்கை : கால்பந்தாட்டத்திலிருந்து...

2024-03-26 16:48:31